LSG vs SRH, IPL 2023 LIVE: ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி..!

IPL 2023, Match 10, LSG vs SRH: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 07 Apr 2023 10:50 PM
LSG vs SRH Live: லக்னோ வெற்றி..!

16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுளை இழந்து  127 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

LSG vs SRH Live: 15 ஓவர்கள் முடிவில்..!

 15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: அடுத்தடுத்து விக்கெட்..!

15வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.  

LSG vs SRH Live: வெற்றியை நெருங்கும் லக்னோ..!

14 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: 13 ஓவர்கள் முடிவில்..!

இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த லக்னோ அணி இந்த ஓவர் முடிவில் 109 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: விக்கெட்..!

அதிரடியாக ஆடி வந்த குர்னல் பாண்டியா 23 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இம்ரான் மாலீக்கிடம் இழந்தார். 

LSG vs SRH Live: 100 ரன்கள்..!

சிறப்பாக ஆடிவரும் லக்னோ அணி 13வது ஓவரின் முதல் பந்தில் 100 ரன்களை எட்டியுள்ளது. 

LSG vs SRH Live: 12 ஓவர்கள் முடிவில்..!

சிறப்பாக ஆடி வரும் லக்னோ அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளனர். 

LSG vs SRH Live: 11 ஓவர்கள் முடிவில்..!

லன்கோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளனர். 

LSG vs SRH Live: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: அதிரடி ஆட்டம்..!

9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் குவித்துள்ளது. 

LSG vs SRH Live: சிறப்பான ஆட்டத்தில் லக்னோ..!

2 விக்கெட்டுகளை இழந்தாலும் லக்னோ அணி 8 ஓவர்கள் முடிவில் 63 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: 7 ஓவர்கள் முடிவில்..!

  7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் குவித்துள்ளது. 

பவுலிங்கில் மிரட்டிய லக்னோ..! 121 ரன்களுக்கு சுருண்ட ஐதராபாத்..!

லக்னோ அணியின் பந்துவீச்சில் திணறிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

LSG vs SRH Live: 19 ஓவர்கள் முடிவில்..!

19 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: விக்கெட்..!

நிலையாக ஆடி வந்த ராகுல் திருப்பாதி 18வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த ஓவர் முடிவில் 102 - 5.

LSG vs SRH Live: 17 ஓவர்கள் முடிவில்..!

17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 92 -4.

LSG vs SRH Live: ஹைதரப்பாத் அணி தடுப்பாட்டம்..!

 தடுப்பாட்டத்தில் ஈடுபடும் ஹைதராபாத் அணி 16 ஓவர்கள் முடிவில் 84 - 4


 

LSG vs SRH Live: 15 ஓவர்கள் முடிவில்..!

15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 83 - 4.

LSG vs SRH Live: 14 ஓவர்கள் முடிவில்..!

14 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: 13 ஓவர்கள் முடிவில்..!

13 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 72 - 4.

LSG vs SRH Live: ஹைதரப்பாத் அணி தடுப்பாட்டம்..!

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் தடுப்பாட்டத்தில் ஈடுபடும் ஹைதராபாத் அணி 12 ஓவர்கள் முடிவில் 69 - 4

LSG vs SRH Live: 11 ஓவர்கள் முடிவில்..!

11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: விக்கெட்..!

9வது ஓவரின் இறுதி பந்தில் ப்ரூக் தனது விக்கெட்டை இழக்க, ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

LSG vs SRH Live: விக்கெட்..!

8வது ஓவரின் இறுதி பந்தில் ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் குர்னல் பாண்டியா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த ஓவர் முடிவில் 50 - 3.  

LSG vs SRH Live: விக்கெட்..!

போட்டியின் 8வது ஓவரில் அன்மோல் ப்ரீத் சிங் குர்னல் பாண்டியா பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார். 

LSG vs SRH Live: 7 ஓவர்கள் முடிவில்..!

7  ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 48 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: பவர்ப்ளே முடிவில்..!

பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 43 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: கியரை மாற்றும் ஹைதராபாத்..!

ஐந்தாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விரட்டப்பட்டுள்ளது. இந்த ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 33 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: 4 ஓவர்கள் முடிவில்..!

4 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 24 ரன்கள் சேர்த்து நிதானமாக ஆடிவருகிறது. 

LSG vs SRH Live: விக்கெட்..!

போட்டியின் மூன்றாவது ஓவரில் மயங்க் அகர்வால் குர்ணல் பாண்டியா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார். 

LSG vs SRH Live: நிதான ஆட்டம்..!

இரண்டாவது ஓவரின் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: முதல் ஓவர் முடிவில்..

முதல் ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் சேர்த்துள்ளது. 

LSG vs SRH Live: டாஸ்..!

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

Background

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை  ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


ஐபிஎல் சீசன்  கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானத்தில் விளையாடி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுவரை மும்பை, ஹைதராபாத் அணிகள் தவிர்த்து மற்ற 8 அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி விட்டனர். 


இதனிடையே இன்று நடைபெறும் 10வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணியளவில் லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. 


இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை


லக்னோ அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேசமயம் சென்னை அணிக்கு எதிரான 2வது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக விளங்கும் அந்த அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம் ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடன் 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. உள்ளூர் மைதானத்தில் அந்த அணி தோல்வியடைந்தது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக மாறி விட்டது. இதனால் தனது முதல் வெற்றியை பெற அந்த அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. கடந்தாண்டு நடந்த அந்த போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


மைதானம் எப்படி? 


லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 6 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே விரும்பும். அதேபோல் இம்மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இம்மைதானத்தில் மொத்தம் எடுக்கப்பட்ட  70 விக்கெட்டுகளில் 51 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்களால் எடுக்கப்பட்டுள்ளது. 


தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் (impact Player) யார்? 


லக்னோ அணியை பொறுத்தவரை ஆயுஷ் படோனி, யாஷ் தாக்கூர், மனன் வோஹ்ரா, பிரேரக் மன்கட், அமித் மிஸ்ரா ஆகியோர் இம்பேக்ட் வீரர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. அதேபோல் ஹைதராபாத் அணியில் விவ்ராந்த் சர்மா, மயங்க் மார்கண்டே, உபேந்திர யாதவ், கார்த்திக் தியாகி, அப்துல் சமத்  ஆகியோர் இருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.