டாடா ஐ.பி.எல். போட்டி 2022-க்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை சில தினங்களுக்கு முன்பு வெளியானது. வரும் 26-ந் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதனால், அனைத்து அணிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.




இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பந்துவீச்சாளராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், பந்துக்கு முத்தம் என்ற வாசகத்தை பதிவிட்டு லசித் மலிங்கா வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் என்று பதிவிட்டுள்ளது.






ஐ.பி.எல். போட்டியின் முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் மோசமாகவே ஆடி வருகிறது. இந்த முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பட்டை தீட்ட முடிவு செய்துள்ளனர்.




இலங்கையைச் சேர்ந்த லசித் மலிங்கா உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். யார்க்கர் மற்றும் டெத் ஓவர்கள் வீசுவதில் வல்லவரான லசித் மலிங்கா, ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வந்தவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா பொறுப்பேற்றது மூலமாக அந்த அணிக்கு கூடுதல் பலம் ஏற்பட்டுள்ளது.


38 வயதான லசித் மலிங்கா 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 338 விக்கெட்டுகளையும், 84 டி20 போட்டிகளில் ஆடி 107 விக்கெட்டுகளையும், 122 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 170 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


மேலும் படிக்க : Chennai Mayor Meets Nayanthara: காளிகாம்பாள் கோயிலில் சென்னை மேயரை சந்தித்த விக்னேஷ், நயன்தாரா.. இண்ட்ரஸ்டிங் சந்திப்பு..


மேலும் படிக்க : IND vs SL, 2nd Test: இந்தியா-இலங்கை பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஒரு மாற்றம்... பிசிசிஐ அறிவித்த நற்செய்தி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண