Pollard IPL Records: ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மும்பை அணியின் கீரன் பொல்லார்ட் ஐபிஎல் போட்டிகளில் படைத்துள்ள சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.  


2010ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வந்துள்ள கீரன் பொல்லார்ட். மும்பை அணியின் பவர் ஹவுஸ் என்றே கூற வேண்டும். மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழந்துள்ள பொல்லார்ட் களத்தில் இருந்தாலே எதிர் அணிக்கு பெரும் சவாலான சூழலாகத்தான் இருக்கும். ஆல் ரவுண்டர் பொல்லார்ட் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங்ல்கில் தன்னுடைய பாண்யில் தனி முத்திரை படைத்துள்ளார் என்றே கூற வேண்டும். 


2010 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான மொத்தம் 13 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னேற்றத்திற்கு அவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக மும்பை அணியின் நேரடி எதிர் அணி என கூறப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மட்டும் இல்லாது ரசிகர்களின் பல நாள் தூக்கத்தினை கெடுத்தவர் தான் இந்த பவர் ஹவுஸ் ஜாம்பவான் கீரன் பொல்லார்ட். 






 பவர் ஹவுஸ் மற்றும் லார்ட் எனப்படும் கீரன் பொல்லார்ட் இதுவரை 189 போட்டிகளில் விளையாடி 171 போட்டிகளில் களம் இறங்கி 3412 ரன்கள் விளாசியுள்ளார். மேலும் அவர் 16 அரை சதங்கள் விளாசியுள்ளார். மேலும், அவர் 218 ஃபோர்களும், 223 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். 


பவுலிங்கைப் பொறுத்தமட்டில் ஐபிஎல் போட்டியில் மட்டும் அவர் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், பவுலிங்கில் கெரியர் பெஸ்டாக 44 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பீல்டிங்கில் 103 கேட்சுகளும் 12 ரன் அவுட்களும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க, 


Kieron Pollard Retirement: மும்பை அணியை விட்டுப் போக மனசே இல்லை: உருக்கமாக ஓய்வை அறிவித்த பொல்லார்ட்!


Ben Stokes: உலக கோப்பைதான் இலக்கு; பென் ஸ்டோக்ஸின் பவர்ஃபுல் மூவ் இதுதான்..!