2022 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயின் அலி ஆகிய 4 வீரர்களை தக்கவைத்திருக்கிறது. வீரர்கள் தக்கவைப்பு நிகழ்ச்சியை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார். ஒவ்வொரு அணியும் யாரை தேர்வு செய்யும், வீரர்களை தேர்வு செய்து எப்படி ஒவ்வொரு அணியும் கட்டமைக்கப்பட இருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்நிலையில், ஐபிஎல் சீசன் 1 முதல் சிஎஸ்கேவுக்காக விளையாடி வருகிறார் தோனி. 2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் மெகா ஏலத்தில் தோனியை தேர்வு செய்ய ஒவ்வொரு அணியும் போட்டி போட்டதாக தெரிவித்திருக்கிறார் அப்போது ஏலத்தை நடத்திய ரிச்சர்ட் மேட்லி. கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வினின் யூட்யூப் சேனலில் பேசிய ரிச்சர்ட், இந்த பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கிறார்.


ஐபிஎல் மெகா ஏலம் வரலாற்றில், ஒரு வீரரை தேர்வு செய்வதில் நடைபெற்ற முதல் போர் 2008-ம் ஆண்டில்தான் என ரிச்சர்ட் மேட்லி தெரிவித்திருக்கிறார். 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையை பெற்று தந்த கேப்டன் தோனியை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க ஒவ்வொரு அணியும் விரும்பியது. 


மேலும் படிக்க: Dinesh Karthik on CSK: “எனது சொந்த ஊர் சென்னை; ஆனால்...” - சிஎஸ்கேவுக்காக விளையாடுவது குறித்து மனம் திறந்த தினேஷ் கார்த்திக்


வீடியோவைக் காண:



அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை எடுத்தது. அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ஸ்டார் வீரரை அணியில் எடுக்கும் முனைப்பில் இருந்ததால் அப்போது நடைபெற்ற ஏலத்தில் 11 கோடி ரூபாய்க்கு தோனியை ஒப்பந்தம் செய்தது. அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் பட்டாளம் விரிவடைந்து கொண்டே இருந்தது. ஐபிஎல் வரலாற்றில், வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண