RR vs DC LIVE Score: இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொள்ளும் லீக் போட்டி தொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

மு.வா.ஜெகதீஸ் குமார் Last Updated: 28 Mar 2024 11:26 PM
RR vs DC LIVE Score: டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி!

12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி.

RR vs DC LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது!

19 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது!

18 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 126 ரன்களுடன் விளையாடி வருகிறது.

RR vs DC LIVE Score: அபிஷேக் போரல் அவுட்!

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் அபிஷேக் போரல் 9 ரன்களில் சாஹல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

RR vs DC LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிந்த நிலையில் 4  விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி 109 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

RR vs DC LIVE Score: ரிஷப் பண்ட் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

RR vs DC LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது!

13 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 105 ரன்களுடன் விளையாடி வருகிறது.

RR vs DC LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: டேவிட் வார்னர் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர் 34 பந்துகள் களத்தில் நின்று 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 49 ரன்கல் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

: RR vs DC LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட்டுள் இழப்பிற்கு 80 ரன்கள் எடித்துள்ளது.

RR vs DC LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

RR vs DC LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

6 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

RR vs DC LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களுடன் டெல்லி அணி விளையாடி வருகிறது. 

RR vs DC LIVE Score: நந்த்ரே பர்கர் அசத்தல் பந்து வீச்சு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கர் வீசிய 4 வது ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருக்கிறார்.

RR vs DC LIVE Score: ரிக்கி புய் அவுட்!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் இளம் வீரர் ரிக்கி புய் 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

RR vs DC LIVE Score: மிட்செல் மார்ஸ் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஸ் 12 பந்துகளில் 5 பவுண்டரிகள் விளாசி 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

RR vs DC LIVE Score: 3 ஓவர்கள் முடிந்தது!

3 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: 2 ஓவர்கள் முடிந்தது!

2 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: மூன்று பவுண்டரிகள்!

அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசியுள்ளார் மிட்செல் மார்ஸ்.

RR vs DC LIVE Score: டெல்லி அணி முதல் பவுண்டரி!

டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களது முதல் பவுண்டரியை அடித்துள்ளது. மிட்செல் மார்ஸ் பவுண்டரி விளாசியிருக்கிறார்.

RR vs DC LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. டெல்லி அணியின் முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார்.

RR vs DC LIVE Score: டெல்லி அணியின் தொடக்க வீரர்கள்!

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் களம் இறங்கி உள்ளனர்.

RR vs DC LIVE Score: இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி!

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

RR vs DC LIVE Score: கடைசி ஓவரில் ரியான் பராக் காட்டடி.. டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு..!

நோர்க்யா வீசிய கடைசி ஓவரில் 25 ரன்கள் அடித்து ரியான் பராக் மிரட்ட, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 186 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கவுள்ளது. 

RR vs DC LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது!

19 ஓவர்கள் முடிந்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 160 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது!

18 ஓவர்கள்  முடிந்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 145 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: துருவ் ஜூரெல் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த துருவ் ஜூரெல் விக்கெட்டை பறிகொடுத்தார். 12 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் உட்பட 20 ரன்கள் விளாசினார்.

RR vs DC LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: ரியான் பராக் அரைசதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும்  3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

: RR vs DC LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: 100 ரன்களை கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14.3 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

RR vs DC LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: அஸ்வின் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த அஸ்வின் டெல்லி அணி பந்து வீச்சாளார் அக்ஸர் படேல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 19 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 சிக்ஸர்கள் விளாசி 29 ரன்கள் எடுத்தார். 

: RR vs DC LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது!

13 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த வகையில் களத்தில் ரியான் பராக் மற்றும் அஸ்வின் விளையாடி வருகின்றனர்.

RR vs DC LIVE Score: சிக்ஸர் பறக்க விடும் அஸ்வின்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.

RR vs DC LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.

RR vs DC LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

RR vs DC LIVE Score: 6 ஓவர்கள் முடிந்தது!

6 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.

: RR vs DC LIVE Score: கலீல் பந்தில் சஞ்சு சாம்சன் அவுட்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டெல்லி கேபிட்டல் அணியின் பந்து வீச்சாளர் கலீல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  14 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் எடுத்தார்.

RR vs DC LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.களத்தில் ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் நிற்கின்றனர்.

RR vs DC LIVE Score: அதிரடி ஆட்டத்தை தொடங்கிய சஞ்சு சாம்சன்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

RR vs DC LIVE Score: ஒரு சிக்ஸர் கூட அடிக்காத ராஜஸ்தான் அணி!

மூன்று ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் அணி இன்னும் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.

RR vs DC LIVE Score: 3 ஓவர்கள் முடிந்தது!

3 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  1 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

RR vs DC LIVE Score: ஜோஸ் பட்லர் - சஞ்சு சாம்சன் ஜோடி!

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்.

RR vs DC LIVE Score: ஜெய்ஸ்வால் அவுட்!

அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சாளர் முகேஷ் குமார் பந்தில் போல்ட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். 7 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

RR vs DC LIVE Score: முதல் பவுண்டரி!

இன்றைய போட்டியின் முதல் பவுண்டரியை விளாசியுள்ளார் ஜெய்ஸ்வால்.

RR vs DC LIVE Score: முதல் ஓவர் முடிந்தது! நிதனா ஆட்டத்தில் ராஜஸ்தான்!

முதல் ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ரன்கள் எடுத்துள்ளது.

RR vs DC LIVE Score: களத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.

RR vs DC LIVE Score: 100 வது போட்டியில் ரிஷப் பண்ட்!

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இன்று தன்னுடைய 100 வது போட்டியில் விளையாட உள்ளார்.

RR vs DC LIVE Score: டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள்!

டெல்லி கேபிட்டல்ஸ்:


ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ரிக்கி புய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்

RR vs DC LIVE Score: ராஜஸ்தான் அணி வீரர்கள்!

ராஜஸ்தான் அணி வீரர்கள்:


சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

RR vs DC LIVE Score: ராஜஸ்தான் vs டெல்லி போட்டி! டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Background


RR VS DC, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வரும் போட்டி, மார்ச் 28 இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.


ராஜஸ்தான் - டெல்லி மோதல்:


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் அணி தனது போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியிலும் அந்த பயணத்தை தொடர ஆர்வம் காட்டுகிறது. மறுமுனையில் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியுற்ற டெல்லி, இன்றைய போட்டி மூலம் வெற்றி கணக்கை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால்,  இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


கடந்த தொடரில் முதல் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், கடைசியில் பெற்ற அடுத்தடுத்த தோல்விகளால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. தற்போதைய சூழலில் ராஜஸ்தான் அணி பட்லர், ஜெய்ஷ்வால், சாம்சன், பவல் மற்றும் ஜுரெல் என வலுவான பேட்டிங்கை கொண்டிருக்க, பந்துவீச்சில் சாஹல் மற்றும் அஷ்வின் நம்பிக்கை அளிக்கின்றனர். வேகப்பந்துவீச்சு சற்று பலவீனமாகவே தெரிகிறது. அதோடு ஒரு அணியாக சேர்ந்து செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் வெற்றியை ஈட்ட அதிக வாய்ப்புள்ளது.


மறுமுனையில், கடந்த முறை வார்னர் தலைமையில் களமிறங்கிய டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேநேரம், தற்போது காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியது நம்பிக்கை அளிக்கிறது. முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த முறை கூடுதல் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 27 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 14 முறையும், டெல்லி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.  டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 222 ரன்களையும், குறைந்தபட்சமாக 115 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 207 ரன்களையும், குறைந்தபட்சமாக 60 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


ஜெய்ப்பூர் மைதானம் எப்படி?


சவாய் மான்சிங் மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றன. முதலில் பேட்டிங் செய்த அணிகள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றன, சேசிங் அணிகள் இரண்டு முறை வெற்றி பெற்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் கூட, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தான் வெற்றி பெற்றது. அதோடு, நடப்பு தொடரில் இதுவரை நடந்த 8 லீக் போட்டிகளிலும், உள்ளூர் அணிகள் தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


உத்தேச அணி விவரங்கள்:


ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக்,  ஷிம்ரோன் ஹெட்மயர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்


டெல்லி: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட், ரிக்கி புய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.