ப்ரோ கபடி லீக் தொடர்:


10-வது ப்ரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ்,தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் யு.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஹரியானாவில் தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 74-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி பெற்றது.


வரலாறு படைத்த தமிழ் தலைவாஸ்:


முன்னதாக இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடியது. அதேபோல் இந்த போட்டியில் 74 புள்ளிகளை பெற்றது. இதன் மூலம் ப்ரோ கபடி லீக் போட்டியில் அதிக புள்ளிகளை பெற்ற அணி என்ற சாதனையை தமிழ் தலைவாஸ் அணி படைத்திருக்கிறது. அதேபோல், ஒரு சீசனில் அதிக முறை ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை பெங்கால் வாரியர்ஸ் அணி படைத்திருக்கிறது. இந்த போட்டியில் ஒரு முறை கூட தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட் ஆகவில்லை. 


 


அதிகபட்சமாக 17 ரெய்டுகள் சென்ற தமிழ் தலைவாஸ் அணி வீரர் விஷால் சாஹல் இன்றைய போட்டியில் மிக சிறப்பாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். அந்தவகையில் 19 புள்ளிகளை தன்னுடைய அணிக்காக பெற்று கொடுத்தார் விஷால் சாஹல். அதேபோல், தமிழ் தலைவாஸ் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான 14 ரெய்டு புள்ளிகள் 3 போனஸ் புள்ளிகள் உட்பட மொத்தம் 17 புள்ளிகளை பெற்றார். தமிழக வீரரான மாசான முத்து இன்றைய போட்டியில் இரண்டாவது சுற்றில் களம் இறங்கி அசத்தினார். அதன்படி அவர் 7 புள்ளிகளை பெற்றார். பெங்கால் வாரியர்ஸ் அணியை பொறுத்தவரை மணிந்தர் சிங் 9 புள்ளிகளை பெற்றார்.





தன்னுடைய கடைசி போட்டியில் வெற்றியுடன் தமிழ் தலைவாஸ் அணி முடிக்குமா என்ற எதிர்பார்ப்பை தமிழ் தலைவாஸ் அணி நிறைவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


தமிழ் தலைவாஸ்:


Raid points: 43


Super raids : 3


Tackle points: 18


All out points: 12


Extra points: 1


பெங்கால் வாரியர்ஸ்:


Raid points: 26


Super raids : 0


Tackle points: 6


All out points: 2


Extra points: 3


 


மேலும் படிக்க: IND vs ENG: இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா! இளம் வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா!