ஐ.பி.எல் தொடர்:


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது.


இன்னும் அதிகாரப்பூர்வமாக ஐ.பி.எல் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கான காரணம் இந்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அந்த தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே ஐ.பி.எல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே மார்ச் மாதம் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறலாம் என்றும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.


இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே அதிக முறை டக் - அவுட் (0) ஆன வீரர் யார் என்பது தொடர்பான தகவல்களை இங்கே பார்ப்போம்:


அதிக முறை டக் - அவுட் ஆன தினேஷ் கார்த்திக்:


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடர்களில் விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். இவர் தான் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக முறை டக் - அவுட் ஆன வீரராக இருக்கிறார். அதன்படி, டெல்லி டேர்டெவில் அணிக்காக அறிமுகமான தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் 11 பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.  அதன்படி, இதுவரை 242 .பி.எல் போட்டிகளில் 221 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள இவர் சுமார் 17 முறை டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார். மொத்தமாக ஐ.பி.எல் தொடரில் 4516 ரன்களை எடுத்திருக்கும் தினேஷ் கார்த்திக் சதம் ஏதும் அடிக்கவில்லை.


 


அதேநேரம் 20 அரைசதங்களை அடித்திருக்கிறார். அதேபோல், அதிக முறை டக் அவுட் ஆனா வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இப்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தான். .பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் அறிமுகமான ரோகித் சர்மா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதன்படி, இதுவரை 243 போட்டிகளில் 221 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள இவர் 16 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய சுனில் நரேன் 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.


 


மேலும் படிக்க: IND vs ENG Test: இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட்.. பிட்ச் ரிப்போர்ட் இதோ!


 


மேலும் படிக்க: Virat Kohli: ஐ.பி.எல் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்... கிங் கோலியின் சாதனை! விவரம் உள்ளே!