நடப்பு ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் ஆடும் லெவனில் அசத்தி வருகின்றனர். இந்த நிலையில், பலம் மிகுந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கவுகாத்தி மைதானத்தில் பஞ்சாப் அணி ஆட உள்ளது. பஞ்சாப் அணிக்கு கடந்த 3 சீசன்களாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் ஷாரூக்கான்.
ஷாரூக்கான்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி பேட்டிங்கில் மிரட்டும் வல்லமை கொண்டவர். கடந்த முறை நடைபெற்ற ஏலத்தில் இவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் மற்றும் சென்னை அணி போட்டி போட்டது. இறுதியில் பஞ்சாப் அணியே பல கோடிகளை கொடுத்து ஷாரூக்கானை தக்கவைத்தது.
பஞ்சாப் அணி தன்னுடைய முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தங்களது வெற்றியை தொடரும் முனைப்பில் இன்று களமிறங்கும் பஞ்சாப் அணியைவிட ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் மிகுந்த வலிமையுடன் உள்ளது.
கலக்குவாரா ஷாரூக்?
ராஜஸ்தான் அணி இமாலய இலக்கை ஏதேனும் நிர்ணயித்தாலோ, ராஜஸ்தான் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்க வேண்டுமென்றாலோ நிச்சயம் பஞ்சாப் அதிரடி காட்ட வேண்டும். அதற்கு ஷாரூக்கானின் பங்களிப்பும் தவிர்க்க முடியாதது ஆகும். ட்ரெண்ட் போல்ட், ஹோல்டர், அஸ்வின், சாஹல் என்று உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் ராஜஸ்தானில் உள்ளனர்.
பஞ்சாபின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தவான், ராஜபக்சே, சிக்கந்தர் ராசா, சாம்கரண் மற்றும் நாதன் எல்லீஸ் மட்டுமே சர்வதேச அரங்கில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களுக்கு இணையாக அதிரடி காட்டக்கூடிய ஆற்றல் கொண்டவர் ஷாரூக்கான். இவரது பேட்டிங் திறனும், சிக்ஸர் அடிக்கும் ஆற்றலும் நிச்சயம் பஞ்சாபிற்கு பலம் சேர்க்கும். பல நெருக்கடியான தருணங்களில் பஞ்சாப் அணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார். இந்த நிலையில், இன்றைய போட்டியிலும் ராஜஸ்தான் பந்துவீச்சை ஷாரூக்கான் துவம்சம் செய்வாரா? குஜராத்தை சாய் சுதர்சன் கரை தேற்றியது போல ஷாரூக்கான் கரை தேற்றுவாரா? என்பதை இன்று பார்க்கலாம்.
28 வயதான மசூத் ஷாரூக்கான் வலது கை பேட்ஸ்மேன், வலது கை பந்துவீச்சாளரும் ஆவார். 11 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 1 சதம், 4 அரைசதங்களுடன் 592 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 40 போட்டிகளில் ஆடி 7 அரைசதங்களுடன் 840 ரன்களும், 65 டி20 போட்டிகளில் ஆடி 720 ரன்களும் எடுத்துள்ளார். தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் கோவை மற்றும் மதுரை அணிகளுக்காக ஆடியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் 20 போட்டிகளில் ஆடி 281 ரன்களை எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: Superhero Dhoni: 'தோனிக்கு சூப்பர் ஹீரோ ஜெர்சி..' சிஎஸ்கேவிடம் கேட்ட ஆனந்த் மஹிந்திரா… ரசிகர்கள் கொட்டிய AI டிசைன்கள்!
மேலும் படிக்க: Dasun Shanaka: தொடர் புறக்கணிப்பு… மீண்டும் மீண்டும் முயற்சி.. ஒரு வழியாக ஐபிஎல்-லில் நுழைந்த தசுன் ஷனகா..!