ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கையில் புதிய டாட்டூவை குத்தியுள்ளார், இந்த டாட்டூவை முடிக்க டாட்டூ கலைஞருக்கு கிட்டதட்ட 14 மணிநேரம் ஆகியதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து டாட்டூ கலைஞர் தெரிவித்ததாவது, இந்த டாட்டூ விராட் கோலி ஆளுமையின் ஒரு அம்சத்தை பிரதிபலிக்கிறது. கோலியின் டாட்டூகளை விளையாட்டு ரசிகர்கள் விரும்புகின்றனர். தற்போது போடப்பட்டுள்ள புதிய டாட்டூவும் ரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்டு வருகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் இதை பற்றியே அதிகமாக பேசி வருகின்றனர் என்று தெரிவித்தனர். 


ஏலியன்ஸ் டாட்டூவின் உரிமையாளரும், விராட் கோலிக்கு டாட்டூ போட்டவருமான சன்னி பானுஷாலி இதுகுறித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ கடந்த சில நாட்களுக்கு முன்பு விராட் கோலி புதிய டாட்டூ டிசைன் படங்களுடன் வந்து என்னை சந்தித்தார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி எங்கள் பணியின் ரசிகர் என்பதை நம்ப முடியவில்லை. புகழின் உச்சியில் இருந்தாலும் விராட் கோலியின் கால்கள் எப்போதும் தரையில்தான் உள்ளது. அவருக்குப் பெருமையோ, அகந்தையோ கிடையாது. இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தும், விராட் கோலி அடக்கமாக இருக்கிறார்...எங்கள் பணியை பாராட்டினார். அவருடைய அடுத்த டாட்டூவில் நான் வேலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.” என்றார். 






தொடர்ந்து பேசிய அவர், ” விராட் கோலியின் பிஸி ஷெட்யூல் காரணமாக பல நாட்களாக டாட்டூவை அவரால் குத்த முடியவில்லை. விராட் கோலி அந்த டாட்டூவானது ஆன்மீகத்தின் மீதான அதிக சாயலில் இருந்தது. அந்த டாட்டூ ஆன்மாவை இணைக்கும் டாட்டூவாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக முழுத் திறனுடன் உழைக்க வேண்டியிருந்தது. மேலும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. பச்சை குத்துவதற்கு 14 மணிநேரம் ஆனது. இந்த காலகட்டத்தில் ஸ்டுடியோ முற்றிலும் மூடப்பட்டது. மேலும் அனைத்து பாதுகாப்புடன் அதை செய்தோம். 


டாட்டூ குத்திய பிறகு, புதிய டாட்டூவை விராட் ஆச்சரியத்துடன் பார்த்தார். நன்றாக உள்ளது” என்று என்னிடம் தெரிவித்தார்.


மேலும் பேசிய டாட்டூ கலைஞர் பானுஷாலி, “ தற்போது போடப்பட்டுள்ள இந்த டாட்டூ தனது தனது வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்கும் என்றும், அவரது ஆன்மீக பயணத்தின் சக்திவாய்ந்த சின்னம் மற்றும் தன்னை விட பெரிய ஒன்றுடனான தொடர்பு என்று விராட் கோலி குறிப்பிட்டார்” என்றார். 


விராட் கோலி மிகப்பெரிய டாட்டூ விரும்பி. இதற்கு முன்பு இவரது தனது உடலில் பெற்றோர்களின் பெயர்கள், அவரது ராசி அடையாளங்கள், அவரது ஒருநாள் அறிமுக கேப் எண், அவரது டெஸ்ட் அறிமுக கேப் எண், ஒரு ஐப்பானிய சாமுராய் வீரர் மற்றும் இன்னும் பல உள்ளன.