ஐ.பி.எல் 2024:


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. 


அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


கோலாகல தொடக்க விழா:


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஐ.பி.எல் 17 வது சீசனின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில்  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் கலைஞர்களின் நடனம் இடம்பெறுகிறது. ஹிந்தி பாடகர் சோனு நிகாம், ஹிந்தி நடிகர்கள் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராப் ஆகியோரும் வருவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். 






ஐபிஎல் 2024 தொடக்க விழா எப்போது நடைபெறும்?


CSK vs RCB IPL 2024 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, மார்ச் 22 ஆம் தேதி  மாலை 6:30 மணியளவில் IPL 2024 தொடக்க விழா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஐபிஎல் 2024 தொடக்க விழா எங்கு நடைபெறும்?


ஐபிஎல் 2024 தொடக்க விழா சென்னை எம்ஏ சிதம்பரம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.


ஐபிஎல் 2024 போட்டி நேரங்கள்?


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 இன் தொடக்க ஆட்டம் மார்ச் 22 அன்று சென்னையின் எம்.ஏ. சிதம்பரம் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


மீதமுள்ள ஐ.பி.எல். 2024 லீக் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!