ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் ஏலம் நடைபெற்றது. அதில் 161 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அவர் தவிர மற்ற சில வீரர்களும் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்நிலையில் முதல் நாள் ஏலத்திற்கு பிறகு எந்தெந்த அணியிடம் எந்தெந்த வீரர்கள் மற்றும் எவ்வளவு தொகை உள்ளது?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
முதல் நாள் ஏலத்தில் சென்னை அணி தீபக் சாஹர்(14 கோடி ரூபாய்), ராபின் உத்தப்பா(2 கோடி ரூபாய்), பிராவோ(4.4 கோடி ரூபாய்), அம்பாத்தி ராயுடு(6.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியிடம் தற்போது 20.45 கோடி ரூபாய் தொகை மீதம் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி:
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய ஏலத்தில் இஷான் கிஷன்(15.25 கோடி ரூபாய்),டிவால்ட் ப்ரேவிஸ்(3 கோடி ரூபாய்), முருகன் அஷ்வின்(1.6 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. மும்பை அணியிடம் தற்போது 27.85 கோடி ரூபாய் மீதம் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:
பெங்களூரு அணி ஷர்சல் பட்டேல் (10.75 கோடி ரூபாய்), வனிந்து ஹசரங்கா(10.75 கோடி ரூபாய்), டூபிளசிஸ்(7 கோடி ரூபாய்), தினேஷ் கார்த்திக்(5.5 கோடி ரூபாய்), ஹேசல்வூட்(7.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரு அணியிடம் இன்னும் 9.25 கோடி ரூபாய் மட்டும் மீதம் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
பஞ்சாப் அணி ஷிகர் தவான் (8.25 கோடி ரூபாய்), ரபாடா(9.25 கோடி ரூபாய்), ஷாரூக் கான்(9.0 கோடி ரூபாய்),பெர்ஸ்டோவ்(6.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. முதல் நாள் ஏலத்தில் முடிவில் பஞ்சாப் அணியிடம் 28.65 கோடி ரூபாய் மீதம் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயர் (12.25 கோடி ரூபாய்), பேட் கம்மின்ஸ்(7.25 கோடி ரூபாய்), நிதிஷ் ரானா(8 கோடி ரூபாய்),சிவம் மாவி(7.25 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. கொல்கத்தா அணியிடம் தற்போது 12.65 கோடி ரூபாய் மீதம் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ராஜஸ்தான் அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின்(5 கோடி ரூபாய்), பிரஷீத் கிருஷ்ணா(10 கோடி ரூபாய்),ட்ரென்ட் போல்ட்(8 கோடி ரூபாய்), சாஹல்(6.5 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அணி தற்போது 12.15 கோடி ரூபாய் மட்டுமே மீதம் வைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
சன்ரைசர்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர் (8.75 கோடி ரூபாய்), நிகோலஸ் பூரண்(10.75 கோடி ரூபாய்),ராகுல் திரிபாதி(8.5 கோடி ரூபாய்),நடராஜன்(4 கோடி ரூபாய்), புவனேஷ்வர் குமார் (4.2 கோடி ரூபாய்) உள்ளிட்டவர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் அணியிடம் மீதம் 20.15 கோடி ரூபாய் உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணி:
டெல்லி அணி ஷர்துல் தாகூர்(10.75 கோடி ரூபாய்),டேவிட் வார்னர்(6.25 கோடி ரூபாய்),மிட்செல் மார்ஷ்(6.5 கோடி ரூபாய்),குல்தீப் யாதவ்(2 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. டெல்லி அணியிடம் இன்னும் 16.5 கோடி ரூபாய் மீதம் உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
லக்னோ அணியில் அவேஷ் கான்(10 கோடி ரூபாய்),ஜேசன் ஹோல்டர்(8.75 கோடி ரூபாய்),க்ருணல் பாண்டியா(8.25 கோடி ரூபாய்),மார்க் வூட் (7.5 கோடி ரூபாய்), தீபக் ஹூடா(5.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுக்கப்பட்டுள்ளனர். லக்னோ அணியிடம் இன்னும் 6.9 கோடி மட்டுமே மீதம் உள்ளது.
குஜராத் டைட்னஸ் அணி:
குஜராத் அணி லாக்கி ஃபெர்குசன்(10 கோடி ரூபாய்),ராகுல் திவாட்டியா(9 கோடி ரூபாய்),முகமது ஷமி(6.25 கோடி ரூபாய்), ஜேசன் ராய்(2 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. குஜராத் அணியிடம் இன்னும் 18.85 கோடி ரூபாய் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IPL Mega Auction 2022 LIVE: ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் - இரண்டாவது நாள்: இன்று காலை மீண்டும் தொடக்கம் !