IPL Auction 2022 Day 2 LIVE: அர்ஜுன் டெண்டுல்கரை அரவணைத்த மும்பை...

IPL 2022 Mega Auction Day 2 LIVE Updates:ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் இரண்டாவது நாள் இன்று.. தகவல்கள் உடனுக்குடன்..

ABP NADU Last Updated: 13 Feb 2022 08:28 PM
IPL Auction 2022 Day 2 LIVE: அர்ஜுன் டெண்டுல்கரை அரவணைத்த மும்பை...

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. 

IPL Auction 2022 Day 2 LIVE: சென்னை அணிக்கு வந்தார் கிறிஸ் ஜார்டன்...

இங்கிலாந்து அணியின் ஆல் - ரவுண்டர் கிறிஸ் ஜார்டனை 3.6 கோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

IPL Mega Auction 2022 : சென்னை அணிக்கு மீண்டும் வந்த ஜெகதீசன்...

தமிழக வீரர் ஜெகதீசனை அடிப்படை விலை 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

மீண்டும் சென்னை அணியில் ஹரி நிஷாந்த்...

தமிழக தொடக்க வீரர்  ஹரி நிஷாந்தை அடிப்படை தொகை 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

IPL Auction 2022 Day 2 LIVE: விருத்திமான் சஹாவை வாங்கிய குஜராத்...

இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவை 1.90 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது. 

IPL Auction 2022: டேவிட் மில்லரை தட்டித்தூக்கிய குஜராத்..

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரை 3 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

கொல்கத்தா அணிக்கு மேலும் ஒரு பலம்... இலங்கை ஆல்- ரவுண்டர் சாமிக்க கருணாரத்னேவுக்கு இடம்..!

இலங்கை அணியின் ஆல்- ரவுண்டர்  சாமிக்க கருணாரத்னே 50 லட்சத்திற்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

IPL Auction 2022 Day 2 LIVE: கொல்கத்தா அணியில் தமிழக வீரர் பாபா இந்திரஜித்..

IPL Auction 2022 Day 2 LIVE: தமிழக வீரர் பாபா இந்திரஜித் தனது அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

மும்பை அணிக்கு வந்து சேர்ந்தார் ஆஸ்திரேலிய வீரர் ரிலே மெரிடித்..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிலே மெரிடித்தை 1 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி 

பிரசாந்த் சோலான்கியை எடுத்த சிஎஸ்கே !

மும்பையைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் பிரசாந்த் சோலான்கியை சிஎஸ்கே அணி 1.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

முகேஷ் சௌதரியை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே

முகேஷ் சௌதரி என்ற இளம் வீரரை சிஎஸ்கே அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட்டை எடுத்த மும்பை !

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிம் டேவிட்டை 8.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

சுப்ரான்ஷூ சேனாபதியை எடுத்த சிஎஸ்கே !

தொடர்ச்சியாக மூன்று நியூசிலாந்து வீரர்களுக்கு பிறகு சுப்ரான்ஷூ சேனாபதியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 லட்சத்திற்கு எடுத்துள்ளது. 

நியூசிலாந்து வீரர்களை தொடர்ந்து குறிவைக்கும் சிஎஸ்கே !

டேவான் கான்வே, மிட்சல் சாண்டனர் ஆகியோருக்கு அடுத்து மற்றொரு நியூசிலாந்து வீரரான ஆடம் மில்னேவையும் 1.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது. 

மிட்சல் சாண்டனரை மீண்டும் எடுத்த சிஎஸ்கே

நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிட்சல் சாண்டனரை சிஎஸ்கே அணி 1.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் டூபிளசிஸ் !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த டூபிளசிஸை இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு டூபிளசிஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். 


 





டேவின் பிரோட்டோரியஸை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி !

தென்னாப்பிரிக்க அணியின் வீரர் டேவின் பிரோட்டோரியஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

ஜோஃப்ரா ஆர்ச்சரை தட்டி தூக்கிய மும்பை !

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

நியூசிலாந்து வீரர் டேவான் கான்வேயை எடுத்த சென்னை !

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவான் கான்வேயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

சிமர்ஜீத் சிங்கை கடைசி நொடியில் ஈர்த்த சென்னை !

டெல்லியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

ஆல்ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கரேக்கரை எடுத்து அசத்திய சென்னை !

யு-19 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராஜ்வர்தன் ஹங்கரேக்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

யு-19 உலகக் கோப்பையில் அசத்திய ராஜ் அங்கட் பாவாவை எடுத்த பஞ்சாப் கிங்ஸ் !

யு-19 உலகக் கோப்பை தொடரில் அசத்திய ராஜ் அங்கட் பாவாவை பஞ்சாப் கிங்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

தமிழ்நாட்டு வீரர் சஞ்சய் யாதவை எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி !

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் தமிழ்நாடு வீரர் சஞ்சய் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணி 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

டெல்லிக்கு விளையாடப் போகும் U-19 உலககோப்பையை வென்ற இந்திய கேப்டன் யஷ்துல்..!

U-19 உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யஷ்துல் 50 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

பியூஷ் சாவ்லாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை !

இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவலாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. 

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் திக்‌ஷனாவை எடுத்த சென்னை !

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் திக்‌ஷனாவை 70 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது. 

சுழற்பந்துவீச்சாளர் மாயங்க் மர்கண்டேவை மீண்டும் வாங்கிய மும்பை !

சுழற்பந்துவீச்சாளர் மாயங்க் மர்கண்டேவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

ஜெய்தேவ் உன்கட்டை எடுத்த மும்பை !

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உன்கட்டை மும்பை இந்தியன்ஸ் அணி 1.30 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரலை யாரும் எடுக்கவில்லை !

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரலை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. 

மும்பையை முன்பாக நவதீப் செய்னியை தூக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி !

இந்திய வேகப்பந்துவீச்சாளர் நவதீப் செய்னியை 2.60 கோடி ரூபாய்க்கு  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

சந்தீப் சர்மாவை தொடக்க விலைக்கே எடுத்த பஞ்சாப் !

வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மாவை பஞ்சாப் அணி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேத்தன் சர்க்காரியாவை எடுத்த டெல்லி அணி

இந்திய இளம் வீரர் சேத்தன் சர்க்காரியாவை 4.2 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

நிகிடியை எடுக்க ஆர்வம் காட்டாத அணிகள் !

தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் நிகிடியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. 

துஷ்மந்தா சமீராவை ஏலத்தில் எடுத்த லக்னோ !

இலங்கை வீரர் துஷ்மந்தா சமீராவை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதை எடுத்த டெல்லி கேபிடல்ஸ் அணி !

வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதை 5.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்துள்ளது. 

இஷாந்த் சர்மாவை யாரும் எடுக்கவில்லை !

இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை யாரும் எடுக்கவில்லை 

ஆல்ரவுண்டர் சிவம் துபேவை எடுத்த சென்னை !

ஆல்ரவுண்டர் சிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

வேகப்பந்து வீச்சாளார் மார்கோ ஜன்சனை எடுத்த சன்ரைசர்ஸ் !

வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜன்சனை 4.2 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

கடும் போட்டிக்கு பின் ஓடின் ஸ்மித்தை எடுத்த பஞ்சாப் !

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஓடின் ஸ்மித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

இரண்டாவது நாளில் ஜாக்பாட் அடித்த லியாம் லிவிங்ஸ்டோன் !

இரண்டாம் நாள் வீரர்கள் ஏலத்தில் தற்போது வரை இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் 11.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 


 





சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவை எடுத்த குஜராத் !

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவை குஜராத் டைட்ன்ஸ் அணி 1.7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

கிறிஸ் ஜோர்டனை எந்த் அணியும் எடுக்கவில்லை !

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை 

IPL Auction, Day 2 LIVE: தமிழக வீரர் விஜய் சங்கரை எடுத்த குஜராத் அணி

தமிழக வீரர் விஜய் சங்கரை குஜராத் டைட்ன்ஸ் அணி 1.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

IPL Auction, Day 2 LIVE: டோமினிக் ட்ரேக்ஸ் எடுத்த குஜராத் டைட்ன்ஸ் !

டோமினிக் ட்ரேக்ஸை குஜராத் டைட்ன்ஸ் அணி 1.1 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. 

IPL Auction, Day 2 LIVE: போட்டா போட்டியில் லியாம் லிவிங்ஸ்டோனை தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்

இங்கிலாந்து அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

IPL Auction, Day 2 LIVE: புஜாராவை எடுக்க ஆர்வம் காட்டாத அணிகள் !

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் புஜாராவை எந்த அணிகயும் எடுக்கவில்லை. 

IPL Auction, Day 2 LIVE: டேவிட் மலான், மார்னஸ் லபுஸ்சென், மோர்கன் எடுக்காத அணிகள்

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் டேவிட் மலான், மார்னஸ் லபுஸ்சென், மோர்கன் ஆகிய மூன்று பேரையும் யாரும் எடுக்கவில்லை 

மந்தீப் சிங்கை எடுத்த டெல்லி !

மந்தீப் சிங்கை டெல்லி கேபிடல்ஸ் அணி 1.1 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. 

ரஹானேவை எடுத்த கொல்கத்தா அணி !

இந்திய வீரர் ரஹானேவை 1 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

ஏய்டன் மார்க்கரமை எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

இரண்டாம் நாள் ஏலத்தில் முதல் வீரராக வந்த ஏய்டன் மார்க்கரமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2.6 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. 

சர்வதேச பேட்ஸ்மேன்கள் செட் உடன் இரண்டாவது நாள் ஏலம் தொடக்கம் !

ஆரோன் ஃபிஞ்ச், மார்னஸ் லபுஸ்சென், டேவிட் மலான், ஏய்டன் மார்க்கரம், புஜாரா, ரஹானே, மன்தீப் சிங் மற்றும் சவுரப் திவாரி ஆகியோரி இந்த முதல் செட்டில் இடம்பெற்றுள்ளனர். 

நான் நலமாக இருக்கிறேன்- ஹியூ எட்மீட்ஸ்

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை நேற்று நடத்திய ஹியூ எட்மீட்ஸ் பாதியில் மயங்கி விழுந்தார். இந்நிலையில் இன்று அவர் நலமாக இருப்பதை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இரண்டாவது நாள் வீரர்கள் ஏலம் தொடங்கியது !

ஐபிஎல் இரண்டாவது நாள் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தற்போது தொடங்கியுள்ளது.

இன்னும் சில நிமிடங்கள் தொடங்கும் ஏலம் !

ஐபிஎல் வீரர்கள் ஏலம் இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாள் ஏலத்திற்கு தயாராகும் அணிகள்:


 





குஜராத் டைட்னஸ் அணியிடம் மீதமுள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

 


குஜராத் அணி லாக்கி ஃபெர்குசன்(10 கோடி ரூபாய்),ராகுல் திவாட்டியா(9 கோடி ரூபாய்),முகமது ஷமி(6.25 கோடி ரூபாய்), ஜேசன் ராய்(2 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. குஜராத் அணியிடம் இன்னும் 18.85 கோடி ரூபாய் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிடம் உள்ள தொகை விவரம் !

 


லக்னோ அணியில் அவேஷ் கான்(10 கோடி ரூபாய்),ஜேசன் ஹோல்டர்(8.75 கோடி ரூபாய்),க்ருணல் பாண்டியா(8.25 கோடி ரூபாய்),மார்க் வூட் (7.5 கோடி ரூபாய்), தீபக் ஹூடா(5.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுக்கப்பட்டுள்ளனர். லக்னோ அணியிடம் இன்னும் 6.9 கோடி மட்டுமே மீதம் உள்ளது. 

பயப்படாதீங்க நான் எல்லை கோட்டிற்குள் தான் இருக்கேன்-அஷ்வினிற்கு வீடியோ வெளியிட்ட பட்லர்

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரவிச்சந்திரன் அஷ்வினை எடுத்தது. இதனால் அஷ்வின் மற்றும் பட்லர் ஒரே ஐபிஎல் அணியில் களமிறங்க உள்ளனர். இந்நிலையில் அஷ்வினை வரவேற்கும் வகையில் பட்லர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "அஷ்வின் நான் தற்போது எல்லை கோட்டிற்குள் தான் இருக்கிறேன். உங்களை பிங்க் நிற ஜெர்ஸியில் பார்க்க ஆவலாக உள்ளேன். இருவரும் சேர்ந்து ஒரே அணியில் விளையாட உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.


இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவை காண: 


 





டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் உள்ள தொகை விவரம் !

 


டெல்லி அணி ஷர்துல் தாகூர்(10.75 கோடி ரூபாய்),டேவிட் வார்னர்(6.25 கோடி ரூபாய்),மிட்செல் மார்ஷ்(6.5 கோடி ரூபாய்),குல்தீப் யாதவ்(2 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. டெல்லி அணியிடம் இன்னும் 16.5 கோடி ரூபாய் மீதம் உள்ளது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் நாளில் எடுத்த வீரர்கள் யார் யார்?

 


சன்ரைசர்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர் (8.75 கோடி ரூபாய்), நிகோலஸ் பூரண்(10.75 கோடி ரூபாய்),ராகுல் திரிபாதி(8.5 கோடி ரூபாய்),நடராஜன்(4 கோடி ரூபாய்), புவனேஷ்வர் குமார் (4.2 கோடி ரூபாய்) உள்ளிட்டவர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் அணியிடம் மீதம் 20.15 கோடி ரூபாய் உள்ளது. 

நேற்று சிஎஸ்கே தேர்ந்தெடுத்த வீரர்கள் யார் யார்?- இன்று ஏலத்தில் அசத்துமா?

நேற்று சிஎஸ்கே தேர்ந்தெடுத்த வீரர்கள் யார் யார்?- இன்று ஏலத்தில் அசத்துமா?


 





ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைவசம் உள்ள தொகை விவரம் !

 


ராஜஸ்தான் அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின்(5 கோடி ரூபாய்), பிரஷீத் கிருஷ்ணா(10 கோடி ரூபாய்),ட்ரென்ட் போல்ட்(8 கோடி ரூபாய்), சாஹல்(6.5 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அணி தற்போது 12.15 கோடி ரூபாய் மட்டுமே மீதம் வைத்துள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் மீதமுள்ள தொகை எவ்வளவு?

 


கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயர் (12.25 கோடி ரூபாய்), பேட் கம்மின்ஸ்(7.25 கோடி ரூபாய்), நிதிஷ் ரானா(8 கோடி ரூபாய்),சிவம் மாவி(7.25 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. கொல்கத்தா அணியிடம் தற்போது 12.65 கோடி ரூபாய் மீதம் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி முதல்நாளில் செலவு செய்த தொகை எவ்வளவு?

 


பஞ்சாப் அணி ஷிகர் தவான் (8.25 கோடி ரூபாய்), ரபாடா(9.25 கோடி ரூபாய்), ஷாரூக் கான்(9.0 கோடி ரூபாய்),பெர்ஸ்டோவ்(6.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. முதல் நாள் ஏலத்தில் முடிவில் பஞ்சாப் அணியிடம் 28.65 கோடி ரூபாய் மீதம் உள்ளது. 

முஸ்தஃபா முஸ்தஃபா... பாடலுடன் ராயுடு-பிராவோ வீடியோ !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று ஏலத்தில் பிராவோ மற்றும் ராயுடுவை எடுத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் முஸ்தஃபா முஸ்தஃபா பாடலை போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 


வீடியோவை காண: 


 





ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் மீதமுள்ள தொகை விவரம்:

 


பெங்களூரு அணி ஷர்சல் பட்டேல் (10.75 கோடி ரூபாய்), வனிந்து ஹசரங்கா(10.75 கோடி ரூபாய்), டூபிளசிஸ்(7 கோடி ரூபாய்), தினேஷ் கார்த்திக்(5.5 கோடி ரூபாய்), ஹேசல்வூட்(7.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரு அணியிடம் இன்னும் 9.25 கோடி ரூபாய் மட்டும் மீதம் உள்ளது.  

முதல் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் !

இஷான் கிஷன்(15.25 கோடி ரூபாய்)- மும்பை இந்தியன்ஸ் அணி


தீபக் சாஹர்(14 கோடி ரூபாய்)- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி


ஸ்ரேயாஸ் ஐயர்(12.25 கோடி ரூபாய்)-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி


ஷர்துல் தாகூர்(10.75 கோடி ரூபாய்)-டெல்லி கேபிடல்ஸ் அணி


ஹர்சல் பட்டேல்(10.75 கோடி ரூபாய்)-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 


 



மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இன்னும் எவ்வளவு பணம் இருக்கு தெரியுமா?

 


மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய ஏலத்தில் இஷான் கிஷன்(15.25 கோடி ரூபாய்),டிவால்ட் ப்ரேவிஸ்(3 கோடி ரூபாய்), முருகன் அஷ்வின்(1.6 கோடி ரூபாய்) உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது. மும்பை அணியிடம் தற்போது 27.85 கோடி ரூபாய் மீதம் உள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மீதமுள்ள தொகை:

 


முதல் நாள் ஏலத்தில் சென்னை அணி தீபக் சாஹர்(14 கோடி ரூபாய்), ராபின் உத்தப்பா(2 கோடி ரூபாய்), பிராவோ(4.4 கோடி ரூபாய்), அம்பாத்தி ராயுடு(6.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியிடம் தற்போது 20.45 கோடி ரூபாய் தொகை மீதம் உள்ளது. 

முதல் நாள் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்
ஐபிஎல் முதல் நாள் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்

 

தீபக் சாஹர் - ரூ. 14 கோடி

 

அம்பதி ராயுடு - ரூ. 6.75 கோடி

 

டிவைன் பிராவோ - ரூ. 4.40 கோடி

 

ராபின் உத்தப்பா - ரூ. 2 கோடி

 

துஷார் தேஷ்பாண்டே - ரூ. 20 லட்சம்

 

கே.எம்.ஆசிப் - ரூ. 20 லட்சம்
குஜராத் டைட்டன்ஸ் வெளியிட்ட முகமது ஷமி வீடியோ..

சிஎஸ்கேவில் விளையாட ஆசைப்பட்ட நடராஜன் - தங்களின் வீரரை விட்டுக்கொடுக்காத ஹைதராபாத்..!

தோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட தமிழக வீரர் நடராஜனை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. கடந்த சீசனிலும் ஹைதராபாத் அணிக்காக நடராஜன் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் ஐபிஎல் ஏலத்தில் 20 வெளிநாட்டவர் உள்பட 74 வீரர்கள் மட்டுமே தேர்வு

முதல் நாள் ஐபிஎல் ஏலத்தில் 20 வெளிநாட்டவர் உள்பட 74 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட சிலரை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம்.

சின்ன தல சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஓரம்கட்டியதற்கு, இதுதான் காரணமா?

இரண்டாவது நாள் ஏலத்திற்கு முன்பாக எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை மீதமுள்ளது?

ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல்நாள் ஏலம் நிறைவு !

ஐபிஎல் ஏலத்தின் முதல்நாள் ஏலம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. 

சாய் கிஷோரை 3 கோடிக்கு எடுத்த குஜராத் அணி !

தமிழ்நாடு வீரர் சாய் கிஷோரை குஜராத் அணி 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

தமிழக வீரர் முருகன் அஷ்வினை எடுத்த மும்பை !

ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தமிழ்நாடு வீரர் முருகன் அஸ்வினை 1.60 கோடி ரூபாய்க்கு  ஏலத்தில் எடுத்துள்ளது. 

கடைசி செட் வீரர்களின் ஏலம் தொடக்கம் !

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் முதல்நாளான இன்று கடைசி செட் வீரர்களின் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் 11 செட் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தனர். 

அவேஸ் கானை எடுத்த லக்னோ அணி !

கடந்த சீசனில் சிறப்பாக பந்துவீசிய அவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 10 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. 

கே.எம்.ஆசிஃபை எடுத்த சிஎஸ்கே அணி

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கே.எம்.ஆசிஃபை 20 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. 

ஷெல்டன் ஜாக்சனை வாங்கிய கே.கே.ஆர் அணி !

ஷெல்டன் ஜாக்சனை 60 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்துள்ளது. 

ஷாபாஸ் அகமதை வாங்கிய பெங்களூரு !

ஐபிஎல் ஏலத்தில் 2.40 கோடி ரூபாய்க்கு ஷாபாஸ் அகமதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்துள்ளது. 

ஹர்பிரீத் ப்ராரை எடுத்த பஞ்சாப் !

ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஹர்பிரீத் ப்ராரை 3.80 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி ராகுல் திவாட்டியாவை எடுத்த குஜராத்

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ராகுல் திவாட்டியாவை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் குஜராத் அணி 9 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. 

தமிழக வீரர் ஷாரூக் கானை தூக்கிய பஞ்சாப் அணி !

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு வீரர் ஷாரூக் கானிற்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.இறுதியில் 9 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

கடும் போட்டிக்கு பிறகு ரியான் பராக்கை எடுத்த ராஜஸ்தான் !

ஐபிஎல் ஏலத்தில் ரியான் பராக்கை எடுக்க பல அணிகள் போட்டி போட்டு கொண்டிருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3.80 கோடி ரூபாய்க்கு அவரை எடுத்துள்ளது. 

ராகுல் திரிபாதிக்கு அடித்த ஜாக்பாட் !

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ராகுல் திரிபாதியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

பேபி ஏபிடியை தூக்கிய மும்பை இந்தியன்ஸ் !

பேபி ஏபிடிவில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் டிவால்ட் ப்ரேவிஸை மும்பை இந்தியன்ஸ் அணி 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

ப்ரியம் கர்கை எடுத்த சன்ரைசர்ஸ் !

சன்ரைசர்ஸ் அணி ப்ரியம் கர்கை 20 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

கடும் போட்டிக்கு பின் சாஹலை எடுத்த ராஜஸ்தான் !

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கடந்த சில சீசன்களில் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். இந்தச் சூழலில் இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்க மும்பை, பஞ்சாப்,ராஜஸ்தான் அணிகள் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 6.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

ராகுல் சாஹரை தூக்கிய பஞ்சாப்.. பாதியில் விலகிய மும்பை !

ராகுல் சாஹர் கடந்த சில ஐபிஎல் தொடர்களில் மும்பை அணியில் விளையாடி வந்தார். இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராகுல் சாஹரை பஞ்சாப் கிங்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

குல்தீப் யாதவை எடுத்த டெல்லி அணி !

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கடந்த ஐபிஎல் தொடர் வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று இருந்தார். இந்தச் சூழலில் இம்முறை அவரை 2 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

ஏலத்தில் விலை போகாத இம்ரான் தாஹீர் !

தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர் இம்முறை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. 

ஷர்துல் தாகூரை கோட்டை விட்ட சிஎஸ்கே !

கடந்த ஐபிஎல் தொடர் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த ஷர்துல் தாகூரை தற்போது 10.75 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்துள்ளது. 

புவனேஷ்வர் குமாரை மீண்டும் எடுத்த சன்ரைசரஸ்

புவனேஷ்வர் குமாரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

மும்பை அணியில் இஷான் கிஷன்


அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்


புதிய அணியில் எடுக்கப்பட்ட க்ருணால் பாண்டியா

மும்பை அணிக்காக விளையாடிய க்ருணால் பாண்டியாவை, 8.25 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்த வாசிங்டன் சுந்தர்


IPL Mega Auction 2022 : திடீரென மயங்கி விழுந்த தொகுப்பாளர் ஹூக் எட்மெட்ஸ்

இன்று தொடங்கிய மெகா ஏலத்தின் முதல் செஷனில் 10 வீரர்கள் எடுக்கப்பட்டனர். அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது செஷனில், ஏலம் நடத்திய தொகுப்பாளர் ஹூக் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கீழே விழுந்த தொகுப்பாளரை யாரும் தூக்க வராமல், அங்கிருந்த ஐபிஎல் உரிமையாளர்கள் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்து நின்றனர். அதனை அடுத்து, சிறிது நேரத்திற்கு ஐபிஎல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். ஏலத்தை தொகுத்து வழங்கியவர் மயங்கி விழுந்ததால் ஏலம் தற்காலிகமாக நிறுத்தம்


தீபக் ஹூடா லக்னோ அணியில்


IPL Auction 2022 Live : அன்போடு அரவணைத்த லக்னோ... இனி லக்கி தீபக் ஹூடா லக்னோ [பக்கம்...!

IPL Auction 2022 Live : சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கிய தீபக் ஹூடா 5.75 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

மீண்டும் பெங்களூர் அணிக்கு தாவிய ஹர்ஷல் பட்டேல்..!


ஹோல்டரை ஹோல்ட் செய்த லக்னோ...


IPL Auction 2022 Live : தாறுமாறாக ஏறிய விலை.. மீண்டும் பெங்களூர் அணிக்கு தாவிய ஹர்ஷல் பட்டேல்..!

கடந்த சீசனில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற ஹர்ஷல் பட்டேல் பெங்களூர் அணியால் 10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

ஐ.பி.எல்: கொல்கத்தா அணி சார்பில் ஏலத்தில் பங்கேற்றுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா கான்


IPL Auction 2022 Live : ஹோல்டரை ஹோல்ட் செய்த லக்னோ... இது மாஸ்டர் பீஸ்..!

உலகின் நம்பர் 1 ஆல்- ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை லக்னோ அணி 8.75 கோடி ஏலம் எடுத்தது. 

கொல்கத்தா அணியில் மீண்டும் ராங்கான ராணா... இனி கொல்கத்தா பக்கம் பிரச்சனை வேணா..!

இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா கொல்கத்தா அணியால் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

ப்ராவோவை தட்டி தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்


சென்னை அணிக்கு வந்த பிராவோ... எல்லாரும் சீக்கிரம் ஆவோ..!

உலகின் முன்னணி ஆல் - ரவுண்டர் பிராவோ மீண்டும் 4.40 கோடிக்கு சென்னை அணிக்கு திரும்பினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த தேவ்தத் படிக்கல்


சுரேஷ் ரெய்னாவிற்கு இல்லையா இடம்... ? அவர் ஐபிஎல்லில் பதிக்காத தடமா..?

மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா முதல் சுற்றில் விற்கப்படவில்லை

ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல்... தொடக்க வீரராக மற்றொரு அடிக்கல்..!

இந்திய கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கலை 7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 



 

ராபின் உத்தப்பாவை அடிப்படை விலை 2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் எடுத்தது


ஜேசன் ராயை 'ஹாய்' சொல்லி அழைத்த குஜராத்...

இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராயை 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

உத்தப்பாவை மீண்டும் தத்தெடுத்த சென்னை...

ராபின் உத்தப்பாவை அடிப்படை விலை 2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் எடுத்தது. 

ராஜஸ்தான் சிம்மாசனத்தில் அமர்ந்த ஷிம்ரன் ஹெட்மயர்...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் 8.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

மாஸ் பீஸ்ஸாக மனீஷ் பண்டே.. லக் அடித்து லக்னோவில் தஞ்சம்


மாஸ் பீஸ்ஸாக மனீஷ் பண்டே.. லக் அடித்து லக்னோவில் தஞ்சம்...!

இந்திய கிரிக்கெட் வீரர் மனீஷ் பண்டே 4.6 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

டெல்லியில் தஞ்சமடைந்த டேவிட் வார்னர்.. இனி வான் எங்கும் வானவேடிக்கை..!


டு பிளெஸ்ஸி-யை வாங்கிய ஆர்சிபி - ஏமாற்றம் கொடுத்த சிஎஸ்கே


டெல்லியில் தஞ்சமடைந்த டேவிட் வார்னர்.. இனி வான் எங்கும் வானவேடிக்கை..!

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் டெல்லி அணியால் 6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

லக்னோ அணியை காக்க புறப்பட்டார் டி காக்...

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ அணி குயின்டன் டி காக்கை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

சென்னைக்கு நேர்ந்த சோதனை.. டுபிளிசியை எடுத்து பெங்களுர் சாதனை...

தென்னாப்பிரிக்க வீரர் பாப் டுபிளிசியை பெங்களூர் அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

டு பிளெஸ்ஸி-யை வாங்கிய ஆர்சிபி - ஏமாற்றம் கொடுத்த சிஎஸ்கே

சென்னை அணி வாங்கும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டு பிளெஸ்ஸி-யை ஆர்சிபி அணி 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆர்சிபி அணியில் டு பிளெஸ்ஸி- கோலி கூட்டணியை ரசிகர்கள் மிகவும் எதிர்நோக்கியுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த சிரேயாஸ் ஐயர்


முகமது ஷமியை கரம் பற்றிய குஜராத் டைட்டன்ஸ்... ஷமியின் வேகம் இனி எதிரணிக்கு சோகம்...!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை குஜராத் டைட்டன்ஸ் அணி 6.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

கொல்கத்தா அணியில் இனி பறக்கும் ஷ்ரேயாஸ் கொடி... கோடியில் வலம் வர இருக்கிறார் புதிய கேப்டனாக...!

டாடா ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான ஏலத்தில் தற்போது அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 12.25 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

#IPLMegaAuction2022 | அஷ்வினை அள்ளிய ராஜஸ்தான் அணி




ராஜஸ்தான் அணியில் ராஜாவான ட்ரெண்ட் போல்ட்... வடபோச்சே! வருத்தத்தில் மும்பை..!

நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். ட்ரெண்ட் போல்டை வாங்க மும்பை அணி கடுமையாக போராடியது. 

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த ககிசோ ரபாடா.. அனல் பறக்கும் இனி பஞ்சாப் ஆட்டத்தில்...!

டாடா ஐபிஎல் (IPL 2022) ஏலத்தில் நாலாவது வீரராக களமிறக்கப்பட்ட ககிசோ ரபாடா பஞ்சாப் கிங்ஸ் அணியால் 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

மீண்டும் கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ்...

ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் கொல்கத்தா அணி 7.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

அஷ்வினை அள்ளிய ராஜஸ்தான் அணி ...கண்டுகொள்ளாத சிஎஸ்கே அணி!

தமிழக வீரர் அஷ்வின் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

முதல் ஆளாய் ஏலம் போன ஷிகர் தவான்

ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி 





பஞ்சாப் அணியில் அஞ்சா சிங்கம் தவான்...

டாடா ஐபிஎல் (IPL 2022) ஏலத்தில் முதல் வீரராக இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பம் முதலே தவானை வாங்க டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக ஷிகர் தவான் 8.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் இடம் பிடித்தவர்கள்

காசி விஸ்வநாதன் (CEO), பாலாஜி (Bowling Coach), சுந்தர் ராமன்(Chief Operating Officer), லக்‌ஷ்மி நாராயணன் (Analyst), அரவிந்த் சிவதாஸ் (Analyst)

IPL Mega Auction 2022: புதிய பயணத்திற்கான களம்..காத்திருக்கும் சிஎஸ்கே நிர்வாகிகள்..!



தோனி அண்ணன் டீம்ல தான் விளையாடுவேன்.. அடம் பிடிக்கும் வீரர்கள்



IPL Auction 2022: மெகா ஏலத்திற்கு முன்பு 10 அணிகளின் கையிருப்பு இது தான்! மொத்தம் எவ்வளவு கோடி? - முழு விவரம்



IPL Auction 2022: ஐபிஎல் ஏலத்தில் தக்கவைக்கப்படாத 8 சிறந்த இந்திய வீரர்கள்...விவரம் உள்ளே...!



CSK in IPL 2022: தோனி படையின் புதிய தளபதிகள் யார்? - ஐபிஎல் மெகா ஏலம் அப்டேட்..



சி.எஸ்.கே. அணிக்காக சிவகார்த்திகேயனின் சாய்ஸ் யார்? யார்? தெரியுமா...?



ஐ.பி.எல். ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையிருப்பு இதுதான்!



மெகா ஏலத்திற்கு முன்பு, கிளம்பும் வதந்திகளும், வெளியான முக்கிய அறிவிப்புகளும் இதோ!



2 நிமிஷம்.. சுட சுட.. ஐபிஎல் மெகா ஆக்சன் 2022 ரிப்போர்ட்!



IPL Mega Auction 2022: எந்த அணியில் எந்த ஆல்- ரவுண்டர்கள்... எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஐபிஎல் ஏலம்..



Background

IPL Auction 2022 Day 2 LIVE Updates 


ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம் பெற்றன.


வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டாம் நாளாக இன்று காலை மீண்டும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த தீபக் சஹர், 14 கோடி ரூபாய்க்கு மீண்டும் அதே அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பவுலராக களமிறங்குபவர் தீபக் சாஹர். சென்னை அணியின் வெற்றிகளில் இவரது பங்கு அதிகம். வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்ய திட்டமிடும் சென்னை அணி, தீபக் சாஹரை எடுக்கும் எடுத்திருக்கிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்






 








அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்க வைத்தது. ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பின் போது சென்னை அணியில் ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கபட்டார். கேப்டன் மகேந்திர சிங் தோனி 12 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த முறை ஐபிஎல் தொடரில் தோனி மெண்டராக விளையாடி ஜடேஜா கேப்டனாக இருப்பார் என்று சிலர் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாவை தற்போது கேப்டனாக்கும் எண்ணம் எதுவுமில்லை என்பதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




இவர்களை தவிர, பிராவோ, ராயுடு, உத்தப்பா ஆகியோரை மீண்டும் அணியில் எடுத்துள்ளது. 




 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.