ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்ற ஒவ்வொரு அணியும் அடித்த அவர்களின் அதிகபட்ச ரன்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.


அதிகபட்ச ரன்கள்:


ஹைதரபாத் சன்ரைசர்ஸ்:


ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தன்வசம் வைத்துள்ளது. 2016ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதரபாத் அணி 208 ரன்களை விளாசியதே இதுவரை ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் விளாசப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.


சென்னை சூப்பர் கிங்ஸ்:


2011ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்.சி.பி. அணிக்கு எதிராக தன்னுடைய அதிகபட்ச ரன்னாக 205 ரன்களை விளாசியது.


மும்பை இந்தியன்ஸ்:


2015ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 202 ரன்களை விளாசியதே அவர்களின் அதிகபட்சம்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 2014ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி அவர்களது அதிகபட்ச ரன்னாக 200 ரன்களை விளாசினர். அந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வசப்படுத்தினர்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:


2016ம் ஆண்டு ஹைதரபாத் அணிக்கு எதிராக 209 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி 208 ரன்கள் விளாசியதே ஆர்.சி.பி.யின் அதிகபட்ச ரன்னாகும்.


பஞ்சாப் கிங்ஸ்:


2014ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி அவர்களுக்கு இலக்காக 199 ரன்களை விளாசியது.


ராஜஸ்தான் ராயல்ஸ்:


2008ம் ஆண்டு முதன்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 164 ரன்களை எட்டி ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


குஜராத் டைட்டன்ஸ்:


கடந்த சீசனின் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடி 133 ரன்கள் எட்டி மகுடத்தை கைப்பற்றியது.


டெக்கான் சார்ஜர்ஸ்:


டெக்கான் சார்ஜஸ் அணி 2009ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 143 ரன்களை விளாசியது.


இன்றைய போட்டியில் ஐ.பி.எல். வரலாற்றின் இறுதிப்போட்டியில் அதிகபட்ச ரன் விளாசிய அணி என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ள ஹைதரபாத்தின் 7 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்படுமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். 


மேலும் படிக்க: CSK vs GT IPL 2023 Final LIVE Score: மீண்டும் கோப்பையை வெல்லப்போவது யார்? சென்னையா? குஜராத்தா?


மேலும் படிக்க: IPL Final CSKvsGT: ரோகித் சர்மாவிற்கு மட்டுமே சொந்தமான சாதனை.. பங்குபோடப் போவது ஹர்திக்கா..? தோனியா..?