CSK vs GT IPL 2023 Final LIVE Score: இறுதி பந்தில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்..!
CSK vs GT IPL 2023 Final LIVE Score: 16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை குஜராத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.
கோப்பையுடன் சென்னை அணி வீரர்கள்.
2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 என மொத்தம் 5 முறை கோப்பைய கைப்பற்றியுள்ளது.
16வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை அணி தனது 5வது கோப்பையை வென்றது. அதன் பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, நான் எனது ஓய்வை அறிவிக்க இதைவிட சரியான நேரம் கிடைக்காது. ஆனால் ரசிகர்கள் என்மீது காட்டும் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடலாம் என இருக்கிறேன். அனைவருக்கு நன்றி என்று கூறிவிட்டு விலகிவிடுவது எளிது; ஆனால் அது மனதுக்கு கடினமானதாக இருக்கும். அதே நேரத்தில் வரும் 9 மாதங்களில் கடினமாக உழைத்து ரசிகர்களுக்காக அடுத்த சீசன் விளையாட முயற்சிப்பது தான் அவர்கள் எனக்கு கொடுக்கும் அன்புக்கு நான் செய்வதாக இருக்கும்.
அது ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசாக இருக்கும்; ஆனால் அது உடலுக்கு எளிதாக இருக்காது என தோனி கூறியுள்ளார். மேலும், இந்த சீசனின் தொடக்கத்தில் ரசிகர்கள் எனது பெயரை முழங்கும் போது எனக்கு கண்களில் நீர் தேங்கியது எனவும் கூறியுள்ளார்.
தோனி அடுத்த ஆண்டு விளையாடுவேன் எனக் கூறியுள்ளது சென்னை அணி ரசிகர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் 890 ரன்கள் சேர்த்த கில்லுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டது.
இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் அதாவது 28 விக்கெட்டுகள் விழ்த்தியதற்கான ஊதா நிற தொப்பி முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.
இந்த சீசனில் மிகச்சிறந்த கேட்ச் பிடித்ததற்கான விருது ரஷித் கானுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான கேம் சேஞ்சர் விருது குஜராத் அணியைச் சேர்ந்த சுப்மன் கில்லுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரர் விருது ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஜெய்ஸ்வாலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அணி தனது 5வது கோப்பையை வென்றதை சென்னை அணி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
குஜராத்க்கு எதிரான போட்டியை சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது 5வது கோப்பையை வென்றுள்ளது.
13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
அதிரடியாக ஆடிவந்த ராயுடு தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
12வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் சென்னை அணியின் டூபே இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். இதனால் இந்த ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை அணி 11 ஓவரில் 118 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 53 ரன்கள் தேவை.
அதிரடியாக சிக்ஸர்கள் விளாசி வந்த ரஹானே தனது விக்கெட்டை மோகித் சர்மா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டை இழந்து 112 ரன்கள் சேர்த்துள்ளது.
9.1 ஓவரில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது.
8வது ஓவரில் இரண்டு சிக்ஸர் விளாசிய ரஹானேவால், சென்னை அணி இந்த ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்த்தது.
7வது ஓவரில் சென்னை அணி 2 விக்கெட்டை இழந்து. இதனால் இந்த ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த கான்வே நூர் அகமது பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
சிறப்பாக ஆடிவந்த ருத்ராஜ் கெய்க்வாட் நூர் அகமது பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதிரடியாக ஆடிவரும் சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடி வந்த சென்னை அணி 5வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவரும் சென்னை அணி பவர்ப்ளேவில் அதாவது 4 ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி விரட்டியுள்ளார் கான்வே.
சென்னை அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 147 ரன்கள் தேவை.
முதல் ஓவரில் சென்னை அணி 10 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐபிஎல் இறுதிப் போட்டி மே 28ம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி முடிவுக்கு வருகிறது; ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட போட்டியாக இது உள்ளது.
சென்னை அணி 171 ரன்கள் எடுத்தால் வெற்றி. 4 ஓவர்கள் பவர்ப்ளே மற்றும் ஒரு பவுலர் அதிகபட்சமாக 3 ஓவர்கள் வீசலாம்.
நள்ளிரவு 12.10 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கப்படவுள்ளது. போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டள்ளது.
11.30 மணிக்கு மற்றொரு ஆய்வு நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர் தான் போட்டியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு எட்டப்படவுள்ளது.
மழை நின்றுவிட்டதால், போட்டி குறித்த அடுத்த அப்டேட் 10.45 மணிக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 நிமிடங்களுக்கு பெய்த கனமழையால் ஆடுகளம் மிக மோசமாக நனைந்தது. இதனால் மைதான பராமரிப்பாளார்கள் ஆடுகளத்தில் உள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும் லேசான தூரல் மற்றும் மின்னல் தற்போது (இரவு 10.15 மணி) இருப்பதாக களத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அகமதாபாத்தில் கனமழை பெய்து வருவதால், இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி 3 பந்து வீசப்பட்டதும், கனமழை தொடங்கியதும் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணி சார்பில் சாய் சுதர்சன் 96 ரன்களும், சாஹா 54 ரன்களும் எடுத்தனர்.
அதிரடியாக ஆடிவரும் குஜராத் அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்தது.
17வது ஓவரில் சாய் சுதர்சன் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசினார். இதனால், 17 ஓவர்களில் குஜராத் அணி 173 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடி வந்த சுதர்சன் 33 பந்தில் தனது அரைசதம் விளாசி ஆடி வருகிறார்.
குஜராத் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்துள்ளது.
14வது ஓவரின் கடைசிப் பந்தில் சாஹா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். மேலும், குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது.
பொறுப்போடும் அதிரடியாகவும் ஆடி வரும் குஜராத் அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 124 ரன்கள் சேர்த்துள்ளது.
அகமதாபாத்தில் தற்போது லேசான மழைத்தூரல் பெய்து வருகிறது.
சிறப்பாக ஆடிவரும் சாஹா 36 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
12 ஓவர்களில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 109 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை அணியின் பத்திரானா பந்து வீச்சில் சுதர்சன் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
அதிரடிக்கு கியரை மாற்றியுள்ள குஜராத் அணி 11.1 ஓவரில் 100 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடிவரும் குஜராத் அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 96 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 72 ரன்கள் சேர்த்துள்ளது.
கில்லின் விக்கெட்டை நொடிக்கும் குறைவான நேரத்தில் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
7வது ஓவரின் முதல் பந்தில் கிடைத்த ரன் அவுட் வாய்ப்பை ஜடேஜா மிஸ் செய்துள்ளார். இது சாஹாவின் விக்கெட்க்கு என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது ஓவர் முதல் அதிரடியாக ஆடிவரும் குஜராத் அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழக்காமல் 62 ரன்கள் குவித்துள்ளது.
5.2 ஓவர்களில் குஜராத் அணி 50 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவரும் குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி, விக்கெட்டை இழக்காமல் 49 ரன்கள் சேர்த்துள்ளது.
நான்கு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி அதிரடியாக ஆடி 38 ரன்கள் சேர்த்துள்ளது.
நான்காவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிகள் விளாசியுள்ளார் கில்.
முதல் இரண்டு ஓவர்களில் நிதானமாக ஆடி வந்த சஹா மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி ஆட்டத்தினை அதிரடிக்கு மாற்றியுள்ளார். மூன்று ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 24 ரன்கள் சேர்த்துள்ளது.
இறுதிப் போட்டியின் முதல் சிக்ஸரை குஜராத் அணியின் சஹா விளாசியுள்ளார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணியின் சுப்மன் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை தீபக் சஹார் தவறவிட்டார்.
இறுதிப் போட்டியின் முதல் ஓவரில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னைக்கு எதிராக குஜராத் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்:
விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி
சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தல தோனி பந்து வீச முடிவு செய்துள்ளார்.
அகமதாபாத்தில் இதுவரை மழை பெய்யாத காரணத்தால் இன்னும் சற்று நேரத்தில் டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16வது சீசன் ஐபிஎல் தொடரின் நிறைவு விழா கலைநிகழ்ச்சிகள் ரசிகர்களின் ஆரவரத்துக்கு மத்தியில் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் இதே மைதானத்தில் தான் பலமான ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தனது அறிமுக தொடரிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றது.
இன்று மழை பெய்யக்கூடாது என்ற எண்ணத்துடன் இரு அணிகளின் ரசிகர்களும் மைதானத்துக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு வெதர்மேன் கூற்றுப்படி, அகமதாபாத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதனால் சென்னை ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இன்றைய போட்டியில் சென்னை அணி கோப்பையை தன்வசப்படுத்தினால், ஐந்து கோப்பைகள் வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்யும். மேலும், ஐந்து கோப்பைகளை வென்ற கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் கோப்பையை குஜராத் வென்றால், இது ஹர்திக் பாண்டியா வென்ற 5வது கோப்பையாக பதிவாகும். அதாவது, ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக விளையாடியபோது, வீரராக 3 கோப்பைகளையும், குஜராத் அணியின் கேப்டனாக ஒரு கோப்பையையும் வென்ன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கோப்பையை வென்றால் ஐந்தாவது கோப்பை ஹர்திக் கணக்கில் சேரும்.
ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கும் அகமதாபாத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுக்கிறது.
இன்றும் மழை காரணமாக போட்டி நடக்கவில்லை என்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகளில் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகித்த அணிக்கு கோப்பை வழங்கப்படும். இதனால், குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
அகமதாபாத் நகரத்தின் பல பகுதிகள் மிகவும் வெயிலுடனே காணப்படுகிறது. ஆனால் வானிலை அறிவிப்புபடி போட்டி நேரத்தின்போது, மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கொட்டும் மழையிலும் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. உங்கள் கரங்களில் இருக்கும் நுழைவுச்சீட்டினை பாதுகாப்பாக வைத்திருங்கள். மைதானத்தில் உங்களின் உற்சாகம் தான் எங்களின் உத்வேகம் என ரசிகர்களுக்கு குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ட்வீட் செய்துள்ளார்.
தோனியை பற்றி மட்டும் ஏன் பேசுகிறோம்? அவர் வாழ்நாள் முழுவதும் விளையாடுவதை நாம் விரும்புகிறோமா? அது நடக்காது. அவர் 15 வருடங்கள் விளையாடியதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். பெரிய ரன்களை எடுக்கவில்லை என்றாலும் அவர் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார், கிரிக்கெட் விளையாட்டில் ஒரு கேப்டனின் முக்கியத்துவம் என்ன என்பதை இது காட்டுகிறது என தோனி குறித்து கபில் தேவ் மனம் திறந்துள்ளார்.
16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி கனமழையால் ’ரிசர்வ் டே’வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியின் டாஸ் நாளை அதாவது மே மாதம் 29ஆம் தேதி இரவு 7 மணிக்கு போடப்பட்டு, போட்டி 7.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மணிக்கும் மேல் மழை பெய்தால் போட்டி நாளை நடத்தப்படவேண்டும் என்பது போட்டி விதிமுறை.
11 மணிக்கு மழை நின்றால் மைதானத்தில் உள்ள நீரை ஒரு மணி நேரத்துக்குள் வெளியேற்றிவிட்டு போட்டியை 12.6க்கு தொடங்க முடியும். ஆனால் அந்த போட்டி 5 ஓவர் போட்டியாக இருக்கும்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால், போட்டி தொடங்கும் நேரத்தினைக் கொண்டு அதற்கு ஏற்ப ஓவர்கள் குறைக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் படி, 9.45 மணிக்கு போட்டி தொடங்கினால் 19 ஓவர்கள் போட்டியாகவும், 10 மணிக்கு தொடங்கினால் 17 ஓவர்கள் போட்டியாகவும், 10. 30 மணிக்குத் தொடங்கினால் 15 ஓவர்கள் போட்டியாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9.35 மணிக்குப் பின்னர் போட்டி தொடங்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரண்டு மணி நேரமாக பெய்து வந்த மழை தற்போது நின்றுள்ளது.
கொட்டும் மழையிலும் ரசிகர்கள் தோனி தோனி என ஆரவாரமாக முழங்கி வருகின்றனர்.
ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இன்று நடைபெறவுள்ள போட்டி தோனியின் 250வது ஐபிஎல் போட்டியாகும்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 16வது சீசன் ஐ.பி.எல். இறுதிப்போட்டியை கைப்பற்றப்போவது யார்? என்பதற்காக சென்னை சூப்பர்கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த நிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அம்பத்தி ராயுடு ஐ.பி.எல். தொடரில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இன்று நடக்கும் போட்டியே தான் விளையாடும் கடைசி ஐ.பி.எல். போட்டி என்றும் அறிவித்துள்ளார்.
இந்த சீசனில் இதுவரை 28 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.
இந்த சீசனில் மூன்று சதங்கள் விளாசியதுடன் 851 ரன்கள் சேர்த்து, இந்த சீசனில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான அணியாக விளங்குகிறது.
இறுதிப் போட்டியில் விளையாட சென்னை அணி அகமதாபாத் மைதானத்துக்கு வந்தடைந்தது. இவர்களுக்கு மைதானத்தின் வெளிப்புறத்தில் குழுமியிருந்த சென்னை அணி ரசிகர்கள் கோலாகலமான வரவேற்பு அளித்தனர்.
சென்னை அணிக்கு இன்றைய போட்டி, தனது 10வது இறுதிப் போட்டியாகும்.
16வது சீசனின் முதல் லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத்துடன் சென்னை அணி மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதேபோல், இறுதிப் போட்டியிலும் அதேஇரு அணிகள், அதே மைதானத்தில் மோதிக் கொள்கின்றன.
16வது சீசன் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன.
16வது சீசனின் இறுதிப் போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் ரிசர்வ் டே முறையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ( CSK vs GT IPL 2023 Final ) சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அகமதாபாத்தில் குவிந்த ரசிகர்கள்:
பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. 70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகான இறுதிப்போட்டிக்கு, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடக்கவிருந்த, இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து இருந்தனர். அது சென்னையா, குஜராத்தா என சந்தேகம் எழும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கான சென்னை ரசிகர்கள் மஞ்சள் உடையில் மைதானத்தை ஆக்கிரமித்து இருந்தனர். இதனால், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.
குறுக்கே வந்த கனமழை:
ஆனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த கனவையும் நீர்த்து போகச் செய்தது அகமதாபாத்தில் கொட்டி தீர்த்த கனமழை. மழை சில மணி நேரம் இடைவெளி விட்டால் கூட போட்டியை நடத்திவிடலாம் என, ஐபிஎல் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்து வந்தது. இதனால், கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்திலேயே காத்துக்கிடந்தனர். இரவு 11 மணிக்குப் பிறகும் கூட மழை விடாததால், ரிசர்வ் டே முறையில் இறுதிப்போட்டி இன்று நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
இன்று இறுதிப்போட்டி:
இதையடுத்து, ரிசர்வ் டே முறையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியின் நேரலையை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
மைதானம் எப்படி?
நரேந்திர மோடி மைதானம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே அமைகிறது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது டாஸ் வெல்லும் அணிக்கு சாதகமாக அமையலாம். அதேநேரம், 180 ரன்களுக்கும் எதிரணியை கட்டுப்படுத்துவதும் அவசியமாக கருதப்படுகிறது.
சிறப்பாக செயல்பட வாய்ப்பு:
இன்றைய போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் முகமது ஷமியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
உத்தே அணி விவரம்:
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
குஜராத்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேட்ச்), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், மோகித் ஷர்மா, நூர் அகமது, முகமது ஷமி
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு - அதேநேரம் தோனி மேஜிக் நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -