ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன இரண்டாவது வீரரானர் ஸ்ரேயஸ் ஐயர். பஞ்சாப் அணி அவரை 26.75 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது.


ஸ்ரேயஸ் ஐயர்: 


ஐபிஎல் 2025 சீசனில் விளையாட ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஏலத்தில் மூன்றாவது வீரராக ஸ்ரேயஸ்சின் பெயர் வந்தது. எடுத்தவுடன் அவரின் முன்னாள் அணிகளான கொல்கத்தா அணி மற்றும் டெல்லி அணி மாறி மாறி போட்டி போட்டன. 10 கோடி வரை மாறி மாறி கேட்டு கொண்டிருந்த கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் விலகியது. 


அதன் பின்னர் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மாறி மாறி தங்கள் ஏலத்தொகையை ஏற்றினர். ஒரு கட்டத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு போன மிட்சேல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடிக்கப்பட்டது. இறுதியில் ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.


இதையும் பாருங்க: IPL Auction 2025 LIVE: ரூபாய் 10 கோடிக்கு முகமது சமியை வாங்கியது சன்ரைசர்ஸ் அணி


சாம்பியன் கேப்டன்:


ஸ்ரேயஸ் ஐயர் கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த அணிக்கு கோப்பையை வாங்கிக்கொடுத்தார். அதற்கு முன்னதாக டெல்லி அணியை இரண்டு முறை பிளே ஆப்சுக்கு அழைத்துச் சென்றார் ஸ்ரேயஸ் ஐயர். 









முன்னாள் கேகேஆர் கேப்டன் மெகா ஏலத்திற்கு முன்னதாக அனைத்து சிறப்பான ஃபார்மில் ஸ்ரேயஸ் அணி இருந்தார். ஏனெனில் அவர் மும்பையின் சையத் முஷ்டாக் அலி டிராபி 2024 பிரச்சாரத்தைப் பெற தனது வாழ்க்கையின் மூன்றாவது டி 20 சதத்தை அடித்தார்.


பஞ்சாப் அணிக்கு இந்த சீசனில் புதிய கேப்டன் தேவைப்படும் நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் அதற்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்பதால் பஞ்சாப் அணி அவருக்கு ஆல் அவுட்டுக்கு போனது. இது மட்டுமில்லாமல் கொல்கத்தா அணியிடம் ஆர்டிஎம்( RTM) இல்லாததால் அவரை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது. 






ஐபிஎல் போட்டியில் ஸ்ரேயஸ்:


115 போட்டிகளில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 32.24 சராசரி மற்றும் 127.48 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,127 ரன்கள் எடுத்துள்ளார்.  ஐபிஎல்லில் இது வரை 21 அரைசதங்கள் அடித்துள்ளார் ஸ்ரேயஸ் ஐயர்.