IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE Updates, Day 2: அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் இன்று சவுதி அரேபியாவில் நடக்கிறது. ஏலத்தின் உடனடி அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டி அடிப்படை விலையான ரூபாய் 30 லட்சத்திற்கு ஏலத்தில் சென்னை அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஓவர்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ரூபாய் 3.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
இளம் வீரர் குர்ஜன்ப்ரீத் சிங்கை ரூபாய் 2.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பிரபல வீரர் உமேஷ் யாதவை அடிப்படை விலையான 2 கோடிக்கு கொடுத்து ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
அனுபவ வீரர் உனத்கட்டை சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவை ரூபாய் 1.60 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
பிரபல பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை ரூபாய் 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்பென்சர் ஜான்சனை 2.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
பிரபல சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோரை 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்துள்ளது.
ஆர்.சி.பி. அணியின் அதிரடி வீரர் வில் ஜேக்சை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது..
ஆர்.சி.பி. அணியின் அதிரடி வீரர் வில் ஜேக்சை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் ரஞ்சி போட்டியில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய அனுசுல் கம்போஜை 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் ரஞ்சி போட்டியில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய அனுசுல் கம்போஜை 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத்தை இந்த முறை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் 18 வயதான இளம் வீரர் அல்லா கசன்பரை ரூபாய் 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆகாஷ் தீப்பை ரூபாய் 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
சென்னை அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சாஹரை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்/9.2
ஆர்.சி.பி.யின் முன்னாள் வீரரும், குஜராத் அணிக்காக ஆடியவருமான பரத்தை ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை.
கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் நிதிஷ் ராணாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூபாய் 4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குருணல் பாண்ட்யாவை 5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆல் ரவுண்டர் மார்கோ யான்செனை ரூபாய் 7 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
சென்னை அணியில் ஆல் ரவுண்டர் சாம் கரனை 2.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஹானே, ப்ரித்விஷா, மயங்க் அகர்வால் ஆகிய இந்திய வீரர்களை எந்த அணியும் வாங்கவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பாப் டுப்ளிசிசை டெல்லி அணி அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியுள்ளது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வில்லியம்சனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. மற்றொரு நியூசிலாந்து வீரரான கிளென் ப்லிப்சும் ஏலத்தில் விலை போகவில்லை.
இன்று ஏலத்தில் பெங்களூர் அணியிடம் 30 கோடியும், மும்பை அணியிடம் 20 கோடியும் இருப்பதால் இன்றைய ஏலத்தில் ஆர்.சி.பி., மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடைசி மற்றும் இரண்டாவது நாளான இன்று இன்னும் சற்று நேரத்தில் ஏலம் தொடங்க உள்ளது.
ஐபிஎல் 2025 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி
கடந்த ஏலத்தில் சென்னை அணி அதிக விலைக்கு எடுத்த சமீர் ரிஸ்வியை டெல்லி கேபிடல்ஸ் அணி 95 லட்சத்துக்கு எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை மும்பை அணியுடன் போட்டி போட்டு இறுதியில் 12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது RCB அணி.
ஐபிஎல் 2025 ஏலத்தில் இஷன் கிஷனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணியின் அதிரடிப்படையில் மற்றொரு வீரர் இணைந்தார்.
உலகின் நம்பர்-2 டி20 பேட்ஸ்மேனான ஃபில் சால்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
தென் ஆப்பிரிக்கா வீரர் குவிண்டன் டி காக்கை ஏலத்தில் 3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்த அணி. இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவை யாரும் ஏலம் எடுக்கவில்லை
ஐபிஎல் 2025 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவி அஷ்வினை 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரம் தேவ்தத் படிக்கல்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. மார்க்ரமை ரூபாய் 2 கோடி அடிப்படை விலையிலே ஏலத்தில் எடுத்தது லக்னோ.
இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை டெல்லி கேபிடல்ஸ் அணி 6.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலை டெல்லி அணி ரூபாய் 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டனை ஆர்.சி.பி. அணி ரூபாய் 8.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
முகமது சிராஜை ரூபாய் 12.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
முகமது சிராஜை ரூபாய் 12.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் 18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் 18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை லக்னோ அணி 7.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமியை ரூபாய் 10 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதரபாத் வாங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப்பண்டை லக்னோ ரூபாய் 20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுத்தனர். RTM முறையில் டெல்லி முயற்சி எடுத்தும் ரிஷப்பண்டை லக்னோ அணி 27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
குஜராத் அணி அதிரடி வீரர் ஜோஸ் பட்லரை வாங்கியது. இதனால், ராஜஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயரை ரூபாய் 26.75 கோடிக்கு ஏலம் எடுத்து பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.
ஐ.பி.எல். கோப்பையை வென்று தந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகவிலைக்கு ஏலம் போன வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவை குஜராத் அணி ரூபாய் 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்காக ஆடிய அர்ஷ்தீப் சிங்கை 15.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு ஏலம் எடுத்த நிலையில், பஞ்சாப் அணி அவரை ரூபாய் 18 கோடிக்கு RTM மூலம் தக்க வைத்தது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தொடாங்கியது ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்காண மெகா ஏலம்
பஞ்சாப் அணியின் கைவசம் 110 கோடி ரூபாய் இருப்பதால் ஏலத்தில் மிகப்பெரிய வீரர்களை தங்கள் வசம் இழுக்க பஞ்சாப் விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் ஏலம் இன்று மதியம் நடைபெற உள்ள நிலையில் சென்னை அணியின் புதிய விக்கெட் கீப்பராக யாரைத் தேர்வு செய்வார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Background
IPL Auction 2025 LIVE:
ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் களமிறங்க உள்ள வீரர்களுக்கான, மெகா ஏலம் இன்று தொடங்குகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் இந்த ஏலம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த மெகா ஏலம் அனைத்து பத்து உரிமையாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது மற்றும் இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
நட்சத்திர வீரர்கள்:
ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், அர்ஷ்தீப் சிங் மற்றும் பல இந்திய நட்சத்திர வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பெரிய இந்தியப் பெயர்களைத் தவிர, வெளிநாட்டு நட்சத்திரங்களான ஜோஸ் பட்லர், ககிசோ ரபாடா, மிட்செல் ஸ்டார்க், லியாம் லிவிங்ஸ்டோன், ட்ரெண்ட் போல்ட் மற்றும் பலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ஐபிஎல் 2025 மெகா ஏல தேதி மற்றும் நேரம் (IPL Auction 2025 Time)
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கும்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம்: மொத்த வீரர்களின் எண்ணிக்கை
இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அடங்குவர். 10 அணிகளில் மொத்தமாக 204 நிரப்பப்பட உள்ளன. இதில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலம் ஜியோசினிமா செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதை தொலைக்காட்சியில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை தொடரலாம்.
அணிகள் கைவசம் உள்ள தொகை
IPL Auction 2025 LIVE Updates: ஐபிஎல் 2025 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் 110.5 கோடியுடன் அதிக தொகையை கைவசம் கொண்டுள்ளது. அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் குறைந்தபட்சமாக 41 கோடி ரூபாயை கைவசம் கொண்டுள்ளது.
- பஞ்சாப் : ரூ.110.5 கோடி
- பெங்களூர்: ரூ. 83 கோடி
- டெல்லி : ரூ.73 கோடி
- லக்னோ : ரூ. 69 கோடி
- குஜராத் : ரூ. 69 கோடி
- சென்னை : ரூ.55 கோடி
- கொல்கத்தா: ரூ. 51 கோடி
- மும்பை:ரூ. 45 கோடி
- ஐதராபாத்: ரூ.45 கோடி
- ராஜஸ்தான்: ரூ.41 கோடி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -