ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியில் தக்க வைக்கப்படாதது குறித்து ஏகப்பட்ட்ட கேள்விகள் எழுப்பபட்டது. இதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட் அணியில் தக்க படாததற்கு காரணம் அவர் அதிக சம்பளம் கேட்டு இருக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு ரிஷப் பண்ட் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பண்ட் குறித்து கவாஸ்கர்:
ஐபிஎல் ஏலம் குறித்தும் பண்ட் குறித்தும் கவாஸ்கர் பேசுகையில், ஏலங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்க்,. எனவே அது எப்படி போகும் என்று யாராலும் கூற முடியாது . ஆனால் டெல்லி அணி ரிஷப் பண்ட்டை அணியில் திரும்பப் கொண்டு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று சுனில் கவாஸ்கர் கூறினார். "சில சமயங்களில், வீரர்கள் எப்படி தக்கவைக்கப்படுவார் என்பது உங்களுக்குத் தெரியும், அந்த குறிப்பிட்ட வீரர் எதிர்பார்க்கப்படும் சம்பளம் குறித்து நிச்சயம் உரிமையாளருக்கும் வீரருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும். அவர்கள் ஏலத்திற்கு சென்றால், இங்கு தக்கவைக்கப்படும் விலையை விட அதிக தொகைக்கு ஏலத்திற்கு செல்லலாம். அந்த வகையில் டெல்லி அணிக்கும் ரிஷப் பண்ட்டுக்கும் சம்பள விவகாரத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் டெல்லி அணி நிச்சயமாக ரிஷப் பண்ட்டை அணிக்கு திரும்ப கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Virat Kohli : காத்திருக்கும் ரெக்கார்ட்ஸ்! பழைய அண்ணாமலையா திரும்பி வருவாரா கிங் கோலி?
"ஏனென்றால் டெல்லி அணிக்கு ஒரு கேப்டன் தேவை. ரிஷப் பண்ட் அணியில் இல்லை என்றால், டெல்லி அணி நிச்சயம் ஒரு புதிய கேப்டனையும் தேட வேண்டும், எனவே டெல்லி நிச்சயமாக ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுப்பார்கள் என்று எனது உள்ளுணர்வு சொல்கிறது என்றார்.
பண்ட் பதிலடி:
சுனில் கவாஸ்கரின் இந்த கருத்துக்கு ரிஷப் பண்ட் பதிலடி கொடுத்துள்ளார், அதில் டெல்லி அணியில் நான் தக்க வைக்கப்படாதற்கு காரணம் பணம் கிடையாது, அதை மட்டும் என்னால் நிச்சயம் சொல்ல முடியும் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதன் மூலம் ரிஷப் பண்ட் மற்றும் டெல்லி அணிக்கும் இடையே வேறு ஒரு கருத்து வேறுபாடு இருக்கிறது என்பது, இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகியுள்ளது.