வெள்ளிக்கிழமை பெர்த்தில் தொடங்கும் பார்டர் காவஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. இந்த தொடரில் விராட் கோலி முறியடிக்கக்கூடிய 10 சாதனைகளைப் என்ன என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
பார்டர் கவாஸ்கர் தொடர்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய விளையாட உள்ளது. இதன் தொடரின் முதல் போட்டி வருகிற 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இதில் 4-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இந்தியாவுக்கு மட்டும் தான் இது முக்கியமான தொடர் கிடையாது, மூத்த வீரர் விராட் கோலிக்கு 'மேக் ஆர் பிரேக்' தொடராக இருக்கும், ஏனெனில் அவர் கடந்த சில போட்டிகளாகவே ஃபார்மிற்காக பெரிதும் போராடி வருகிறார். கடந்த மூன்று சதங்களை மட்டுமே விராட் கோலி அடித்துள்ளார். அதனால் இந்த தொடர் விராட் கோலிக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. அவர் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பினால் பல ரெக்கார்டுகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : Cheteshwar Pujara : பாட்ஷா டூ மாணிக்கம்.. புதிய அவதாரத்தில் புஜாரா !
கோலி முறியடிக்க காத்திருக்கும் சாதனைகள்:
1. ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள்: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதற்கு விராட் கோலிக்கு இன்னும் 458 ரன்கள் தேவைப்படுகிறது.
2. வெளியூர் பேட்ஸ்மேனால் அதிக சதம் : விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார், ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்தின் ஜாக் ஹாப்ஸ் 9 சதங்கள் அடித்துள்ளார். அதை விராட் கோலி முறியடிக்க இன்னும் நான்கு செல்ல இன்னும் 4 சதங்கள் தேவை.
3.அடிலெய்டில் அதிக டெஸ்ட் ரன்கள்: அடிலெய்டு மைதானத்துக்கும் விராட் கோலிக்கும் நிறைய பிணைப்பு உள்ளது. மேலும் அடிலெய்டு மைதானத்தில் (விசிட்டிங் பேட்ஸ்மேன்) ஆல் டைம் ரன் குவித்தவராக மாறுவதற்கு விராட் கோலிக்கு இன்னும் 93 ரன்கள் மட்டுமே தேவை.
4.ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள்: ஆஸ்திரேலியாவில் அதிக வெளிநாட்டு பேட்ஸ்மென்களால் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையைப் கோலி படைத்துள்ளார், மேலும் அவர் ஆஸ்திரேலியாவில் 3500 ரன்களைக் கடக்க 74 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
5.ஒரே மைதானத்தில் அதிக சதம்:ஆஸ்திரேலியாவில் ஒரே மைதானத்தில் 6 சர்வதேச சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற இன்னும் ஒரு சதம் தேவைப்படுகிறது.
6.ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய பேட்ஸ்மேனின் அதிக டெஸ்ட் பவுண்டரிகள்: ஆஸ்திரேலியாவில் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 209 பவுண்டரிகள் அடித்துள்ளார், சச்சினின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 59 பவுண்டரிகள் தேவைப்படுகிறது.
7. அதிக போட்டிகள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இரண்டாவது கிரிக்கெட் வீரராக ஆவதற்கு இந்திய ஜாம்பவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டும்.
8.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கார் 20 சதங்கள் அடித்துள்ள நிலையில் அந்த சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 5 தேவைப்படுகிறது.
9. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக கேட்ச்கள்: ஆஸி அணிக்கு எதிராக விராட் கோலி ஏற்கனவே 66 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், மேலும் 4 கேட்ச்சுகளை பிடித்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 70 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்கிற சிறப்பை பெறுவார்
10.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சர்வதேச பவுண்டரிகள்:
விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 496 பவுண்டரிகள் அடித்துள்ளார், மேலும் 4 பவுண்டரிகளை அடித்தால் 500 பவுண்டரிகளை அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெறுவார். விராட் கோலியை விட சச்சின் டெண்டுல்கர் (764), பிரையன் லாரா (550) ஆகியோர் மட்டுமே அதிக பவுண்டரிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.