ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஒம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
8 மாதகளில் 3 கோப்பைகள்:
ஐபிஎல் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அறிவித்ததுள்ளது. 46 வயதான அவர் கடந்த சீசனில் மும்பை அணி ரஞ்சி டிராபி மற்றும் இரானி டிராபி கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்தார்.
சால்வி 2023-24 ரஞ்சி சீசனுக்கான மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார், பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே மும்பை அணியை ரஞ்சி கோப்பையை வெல்ல வழிவகுத்தார். இதற்கு முன், அவர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நான்கு சீசன்களை செலவிட்டார், இதனால் அணியில் உள்ள வீரர்களின் செயல்பாடுகளை நன்கு புரிந்துக்கொண்டு கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
புதிய பந்து வீச்சு பயிற்சியாளார்:
பெங்களூரு அணிக்கு எல்லா ஐபிஎல் சீசன்களிலும் பெரிய தலைவலியாக அமைந்து வருவது அவர்களின் பந்து வீச்சுதான், அதனை சரி செய்யும் பொருட்டு ஓம்கார் சால்வியை புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக ஆர்சிபி அணி நியமித்து உள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆர்சிபி அணி நிர்வாக இயக்குனர், ஆர்சிபியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வியை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவரது நீண்ட அனுபவம், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில், மற்றும் உள்நாட்டு மற்றும் ஐபிஎல் தொடர்களில் அவர் பெற்ற வெற்றிகள், அவர் எங்கள் பயிற்சியாளர் குழுவிற்கு மிகவும் பொருத்தமானவர். ஓம்காரின் தொழில்நுட்ப நிபுணத்துவம், உள்ளூர் அறிவு மற்றும் தலைமைத்துவம் ஆகியவை எங்கள் அணிக்கும் பெரும் மதிப்பைச் சேர்க்கும்.
முன்னாள் இந்திய வீரர் ஆவிஷ்கர் சால்வியின் இளைய சகோதரரான ஓம்கார், 2005 இல் ரயில்வேக்காக ஒரே ஒரு லிஸ்ட்-ஏ போட்டியில் விளையாடியுள்ளார். அவர் மார்ச் 2025 வரை மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் (எம்சிஏ) பயிற்சியாளராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8 மாதங்களில் இவர் ரஞ்சி டிராபி, இரானி டிராபி மற்றும் ஐபிஎல் டிராபி என முன்று கோப்பைகளை வென்றுள்ளார் ஓம்கார், மேலும் மும்பை அணி உடனான தனது உள்நாட்டு சீசன் கடமையை முடித்த பிறகு ஐபிஎல் 2025 க்கு RCB இல் இணைவார் என்று தெரிகிறது.