இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகள் பிரமாண்டமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இதுவரை 16 சீசன்களை முடித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16வது சீசனின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் தான் நடக்கும் என்று கூறப்பட்ட சூழலில், அதற்கு ஐபிஎல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து இருந்தது. மேலும், ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவில் தான் நடைபெறும் என்றும் கூறியது.


முதல் முறையாக துபாயில்:


கடந்த முறை ஐபிஎல் தொடரின் ஏலம் கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்றது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. இதுதான் வெளிநாட்டில் நடைபெறும் முதல் ஐபிஎல் ஏலம் என்பது குறிப்பிடத்தக்கது.


அதன்படி, இந்த ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடக்க உள்ளது. இதனிடையே அன்றைய நாள் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் ஒரு நாள் போட்டியும் துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.


ரம்ப கட்ட பணிகள் தொடக்கம்:


இந்த ஐபிஎல் தொடருக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் நிர்வாகங்களும் ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன. 


நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரண் அதிகபட்சமாக 18.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இச்சூழலில் இந்த முறை யார் அதிக ஏலத்திற்கு போவர்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:


அதேபோல், தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் யார் என்ற பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்ய 100 கோடி வரை செலவு செய்யலாம் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.


2023ஆம் ஆண்டின் ஏலத்தின் போது 95 கோடியே அதிகபட்சமாக இருந்த நிலையில் இந்த முறை 5 கோடி ரூபாய் அதிகமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுவரையில் செலவழிக்கப்படாத தொகையாக ஒவ்வொரு அணியும் எவ்வளவு வைத்திருக்கிறது?


பஞ்சாப் கிங்ஸ்: ரூ.12.20 கோடி


மும்பை இந்தியன்ஸ்: ரூ. 0.05 கோடி.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ.6.55 கோடி.


குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்: ரூ.4.45 கோடி.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ.3.55 கோடி.


ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ. 3.35 கோடி.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ.1.75 கோடி.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ. 1.65 கோடி.


சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ. 1.5 கோடிகளையும் வைத்துள்ளது. 


 


மேலும் படிக்க: 2007 முதல் தொடரும் சோகம்; 15 ஆண்டுகளாக இலங்கையிடம் தோற்கும் இங்கிலாந்து - இதுவரை நடந்தது என்ன?


மேலும் படிக்க: PAK Vs SA LIVE Score: 271 ரன்களை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா; பந்து வீச்சில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்