PAK Vs SA LIVE Score: போராடித் தோற்ற பாகிஸ்தான்; த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா
PAK Vs SA LIVE Score Updates: பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.
இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 40 ரன்கள் எக்ஸ்ட்ராக்களாக வாரி வழங்கியுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா 19 ரன்களும் பாகிஸ்தான் 21 ரன்களும் வாரி வழங்கியுள்ளன.
இந்த போட்டியில் மொத்தம் 16 சிக்ஸர்கள் பறக்க விடப்பட்டுள்ளது. இரு அணிகள் தரப்பிலும் தலா 8 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்த போட்டியில் இரு அணிகளின் தரப்பிலும் மொத்தம் 44 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் 23 பவுண்டரியும் தென்னாப்பிரிக்கா 21 பவுண்டரியும் விளாசியுள்ளது.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆட்டநாயகன் விருது தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஷிக்கு வழங்கப்பட்டது. இவர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட்டி வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
47.2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணி 47 ஓவர்களில் 9 விக்கெட்டினை இழந்து 266 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 5 ரன்கள் 18 பந்துகளில் எடுக்கவேண்டும்.
46 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை.
தென்னாப்பிரிக்காவின் 9வது விக்கெட்டினை பாகிஸ்தான் அணியின் ஹாரீஸ் ராஃப் அட்டகாசமான முறையில் கைப்பற்றினார்.
45 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டினை இழந்து 260 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 11 ரன்கள் தேவை.
44 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டினை இழந்து 256 ரன்கள் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 15 ரன்கள் தேவை.
தென்னாப்பிரிக்கா அணி 42 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் சேர்த்துள்ளது.
41.1 ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டினை இழந்து 250 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 42வது ஓவரின் முதல் பந்தில் கோட்ஸீ தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மார்க்ரம் தனது விக்கெட்டினை 41வது ஓவரில் உசமா மிர் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 91 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்தார்.
40 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டினை இழந்து 249 ரன்கள் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 22 ரன்கள் தேவை.
39 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டினை இழந்து 243 ரன்கள் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 28 ரன்கள் தேவை.
38 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டினை இழந்து 237 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
37 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டினை இழந்து 235 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 36 ரன்கள் தேவை.
களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வந்த மார்கோ யான்சென் தனது விக்கெட்டினை ஹாரீஸ் ராஃப் பந்தில் இழந்து வெளியேறினார். தென்னாப்பிரிக்கா அணி தற்போது 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
35 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
களமிறங்கியது முதல் சவாலான ஆட்டத்தினை ஆடி வந்த டேவிட் மில்லர் தனது விக்கெட்டினை போட்டியின் 34வது ஓவரில் அஃப்ரிடியிடம் இழந்து வெளியேறினார். இவர் 32 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார்.
அதிரடியாக இலக்கை நோக்கி முன்னேறிவரும் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 33 ஓவர்களில் 206 ரன்கள் சேர்த்துள்ளது.
61 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மார்க்ரம் இரண்டு ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார்.
32 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 14 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. இதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட அணிகள் தலா 11 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.
30 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 80 ரன்கள்தான் தேவை.
தென்ன்னாப்பிரிக்கா அணியின் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் கூட்டணி 29வது ஓவர் வரை 44 பந்தில் 52 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற இன்னும் 126 பந்துகளில் 83 ரன்கள் தேவை. என்ற நிலை உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 29 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 188 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடிவரும் தென்னாப்பிரிக்கா 28 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 180 ரன்கள் குவித்துள்ளது. அணி வெற்றி பெற இன்னும் 91 ரன்கள் தேவை.
தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் போட்டியின் 27வது ஓவரில் 92 மீட்டர்கள் தூரத்துக்கு ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார்.
26 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 110 ரன்கள் தேவை.
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரும் மார்க்ரம் தனது அரைசதத்தினை எட்டி விளையாடி வருகின்றார்.
24.4 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எட்டியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 23 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை 145 ரன்களை எட்டியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் க்ளாசன் தனது விக்கெட்டினை வாசிம் பந்தில் இழந்து வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டினை இழந்து 125 ரன்கள் சேர்த்துள்ளது.
சீராக ரன்கள் சேர்த்து வந்த வென் டர் டுசன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
தென்னாப்பிரிக்கா அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 115 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 107 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது தென்னாப்பிரிக்கா.
13.4 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 101 ரன்கள் சேர்த்துள்ளது. மார்க்ரம் விளாசிய சிக்ஸர் மூலம் 100 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா.
13 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 93 ரன்கள் சேர்த்துள்ளது.
13வது ஓவரின் இரண்டாவது பந்தினை மார்க்ரம் சிக்ஸருக்கு விளாசியுள்ளார். இந்த ஓவரை ஹாரீஸ் ராஃப் வீசி வருகின்றார்.
தென்னாப்பிரிக்கா அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. அணியின் ரன்ரேட் தற்போது 7.08ஆக உள்ளது.
11 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 74 ரன்கள் சேர்த்து விளையாடிவருகின்றது.
முதல் 10 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது வசிம் ஜூனியர் வீசிய 10வது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 27 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.
9 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 66 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் முதல் சிக்ஸரை கேப்டன் டெம்பா பவுமா போட்டியின் 9வது ஓவரில் விளாசியுள்ளார்.
8 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 57 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
271 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 39 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 38 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 35 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஃப்ரிடி பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
3 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் சேர்த்துள்ளது.
2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் விளாசியுள்ளது.
போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய அஃப்ரிடி அந்த ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் விட்டுக்கொடுத்துள்ளார். இந்த 4 பவுண்டரிகளையுஜ்ம் டி காக் பறக்கவிட்டுள்ளார்.
முதல் ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் ஃபீல்டிங் செய்யும்போது கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
271 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ஷம்ஷி 4 விக்கெட்டுகளும் மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளும் கோட்ஸீ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
46.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணி 45.5 ஓவர்கள் முடிவில் தனது 9 விக்கெட்டினை இழந்துள்ளது.46 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 268 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் அஃப்ரிடி தனது விக்கெட்டினை 2 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் சேர்த்துள்ளது.
44 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
42.4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட்டினை இழந்து 250 ரன்கள் குவித்துள்ளது.
பொறுப்பாக விளையாடி அரைசதம் விளாசிய ஷவுத் ஷகில் தனது விக்கெட்டினை 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஷம்ஷி பந்தில் இழந்து வெளியேறினார்.
42 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டினை இழந்து 239 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 5.69ஆக உள்ளது.
41 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இக்கட்டான சூழலில் களமிறங்கி பொறுப்பாக விளையாடிய ஷவுத் ஷகில் தனது அரைசதத்தினை 50 பந்துகளில் எட்டி சிறப்பாக விளையாடி வருகின்றார்.
40 ஓவர்கள் முடிவ்பில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டினை இழந்து 225 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் தற்போதைய ரன்ரேட் 5.62ஆக உள்ளது.
போட்டியின் 40வது ஓவரினை வீசி வந்த கோட்ஸீ பந்தில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஷதாப் கான் தனது விக்கெட்டினை பவுண்டரி அடிக்க முயற்சி செய்யும்போது இழந்தார். இவர் 36 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார்.
5 விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பான ரன்ரேட்டில் உள்ள பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணி 39 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 222 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகின்றது. 222 ரன்கள் என்பதை கிரிக்கெட்டில் டபுள் நெல்சன் எனக் கூறுவார்கள்.
37 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 5.43ஆக உள்ளது. பாகிஸ்தான் தற்போது 201 ரன்களில் உள்ளது.
5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 36.2 ஓவர்களில் 200 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 36 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகின்றது.
பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் மற்றும் ஷவுத் ஷகீல் ஆகியோர் கூட்டணி 45 பந்தில் 53 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்ததே இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 189 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. அணியின் ரன்ரேட் தற்போது 5.4ஆக உள்ளது.
34 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டினை இழந்து 183 ரன்கள் சேர்த்துள்ளது.
33 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டினை இழந்து 174 ரன்கள் சேர்த்துள்ளது.
33வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி மற்றும் 5வது பந்தில் சிக்ஸர் விளாசினார் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஷதாப் கான். இந்த ஓவரை மஹராஜ் வீசினார்.
32 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்துள்ளது.
31 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டினை இழந்து 154 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகின்றது.
5 விக்கெட்டினை இழந்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 30 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 5.03ஆக உள்ளது.
30 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டினை இழந்து 151 ரன்கள் சேர்த்து மந்தமாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் பாகிஸ்தான் அணி 29 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஏற்கனவே சரிவில் உள்ள பாகிஸ்தான் அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்தது பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் ஷம்ஸி பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ஆனால் இவரது விக்கெட்டினை டி.ஆர்.எஸ் முறையில் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.
பாகிஸ்தான் அணி 27 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 136 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீளும் முயற்சியில் உள்ளது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 64 பந்துகளை எதிர்கொண்டு தனது அரைசதத்தினை எட்டினார். இது இந்த தொடரில் இவர் விளாசும் மூன்றாவது அரைசதம் ஆகும்.
26 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்ற இஃப்திகார் அஹமத் தனது விக்கெட்டினை 31 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸி கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 129 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 24. 2 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பாகிஸ்தான் அணி 24 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 124 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது.
3வது வீரராக களமிறங்கி சரிவில் இருக்கும் அணியை மீட்டு வரும் நிலையில், பாபர் அசாம் இதுவரை 55 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 46 ரன்கள் சேர்த்து அரைசதத்தினை நெருங்கி வருகின்றார்.
23 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 120 ரன்கள் சேர்த்து சிறப்பாக முன்னேறி வருகின்றது.
பாபர் அசாம் தனது முதல் சிக்ஸரை தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் மஹராஜ் வீசிய 23வது ஓவரில் விளாசினார்.
22 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
21 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது. 111 ரன்கள் என்பதை கிரிக்கெட் உலகில் நெல்சன் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவர்.
21வது ஓவரின் முதல் பந்தினை எதிர்கொண்ட இஃப்திகார் அந்த பந்தை சிக்ஸருக்கு விளாசி இந்த ஓவரை மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளார்.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் சேர்த்துள்ளதால் அணியின் ரன்ரேட் 5.10ஆக உள்ளது.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீளும் முயற்சியில் உள்ளது.
19.4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
19 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 97 ரன்கள் குவித்து 100 ரன்களை நெருங்கி வருகின்றது.
18 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 88 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் சேர்த்து மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
15.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் மிகவும் முக்கியமான பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டினை 27 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவர் கோட்ஸீ பந்தில் வெளியேறினார். இந்த போட்டியில் கோட்ஸீக்கு இதுதான் முதல் ஓவர்.
15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 84 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது.
14.1 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் சிக்ஸரை விளாசியுள்ளது. இதனை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் விளாசினார்.
13வது ஓவரில் பாகிஸ்தான் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 71 ரன்கள் சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 63 ரன்கள் சேர்த்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 63 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளேவில் மட்டும் பாகிஸ்தான் அணி 8 பவுண்டரி விளாசியுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இதுவரை ஒரு சிக்ஸர்கூட விளாசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் இதுவரை மட்டும் பவர்ப்ளேவில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி எதிரணிகளுக்கு அச்சுறுதலை அளித்து வருகின்றார்.
முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 58 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
9 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 53 ரன்கள் சேர்த்து சிறப்பாக நிதானமாக விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 44 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7வது ஓவரின் 5வது பந்தினை ரிஸ்வான் பவுண்டரிக்கு விளாசிய பின்னர் மார்கோ யான்சென் ரிஸ்வானுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இது இந்த போட்டி முழுவதும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம்.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் தனது விக்கெட்டினை மார்கோ யான்சென் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 12 ரன்கள் சேர்த்தார்.
6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 38 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இதுவரை 5 பவுண்டரிகள் விளாசியுள்ளது.
5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 28 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 5வது ஓவரின் 5வது பந்தினை மார்கோ யான்சென் தொடர்ந்து இரண்டு நோ- பால் வீசியுள்ளார். இதனை எதிர்கொண்ட பாபர் அசாம் ஒரு பவுண்டரி மற்றும் 2 ரன்கள் விளாசினார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் மூன்றாவது வீரராக கேப்டன் பாபர் அசாம் களமிறங்கியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் பந்தில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 9 ரன்கள் சேர்த்தார்.
4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றியும் 3இல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரு அணிகளும் உலகக் கோப்பையில் இதுவரை 5 முறை மோதியுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா 3 முறையும் பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளது. இதில் கடந்த 2015 மற்றும் 2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.
2 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்து, நிதானமாக தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
போட்டியின் முதல் ஓவர் மெய்டனாக வீசப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Background
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
13வது உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இந்த தொடரில் களம் கண்டுள்ளன. இந்தியாவின் 10 நகரங்களில் போட்டி நடந்து வரும் நிலையில் இதுவரை 25 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நகர்வதால் ரசிகர்கள் அடுத்து வரும் போட்டிகளையும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறுகிறது.
சொதப்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை தோற்கடித்து கம்பீரமாக தொடங்கியது. ஆனால் அடுத்ததாக இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோற்று பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியிடன் படுதோல்வி அடைந்தது அந்த அணியை கடும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்று பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அந்த அணியின் பேட்டிங் பலமாக இருந்த போதிலும், மோசமான சுழற்பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவை பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டமும் சென்னை மைதானத்தில் தான் நடைபெற்றது என்பதால் ஓரளவு மைதானம் பற்றிய கணிப்பை கொண்டு இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற போராடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அதிரடி எழுச்சி கண்ட தென்னாப்பிரிக்கா
உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்கா அணி அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அந்த அணி நெதர்லாந்து எதிரான ஆட்டத்தில் மட்டும் தோல்வியை தழுவியது, ஆனால் இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளை வீழ்த்தி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. நிச்சயம் அரையிறுதிக்கும் அந்த அணி செல்லும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகள் 300 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்துள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுவாக உள்ள தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் சமாளிப்பது சற்று கடினம் என்பதால் இப்போட்டி கண்டிப்பாக விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பது நிதர்சனம். இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 1 நேரலை செய்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -