ஐ.பி.எல். தொடரின் 18வது சீசனுக்கான ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குதித்துள்ளனர். இந்த மூன்று வீரர்களையும், அந்தந்த அணி நிர்வாகம் தக்க வைக்காத காரணத்தால் அடுத்த மாதம் நடைபெறும் மெகா ஏலத்தில் இவர்கள் ஏலம் விடப்பட உள்ளனர்.
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் அடுத்தாண்டான 2025ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அடுத்த மாதம் மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கும் விரும்பும் வீரர்களின் பட்டியலை ( ரிட்டன்சன்) பட்டியலை சமர்ப்பிக்க ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு விதித்திருந்தது.
வெளியானது ரிட்டன்சன் லிஸ்ட்:
இந்த நிலையில், அனைத்து அணிகளும், தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரிட்டன்சனில் மிகப்பெரிய திருப்புமுனையாக மூன்று முக்கிய வீரர்களை அந்தந்த அணி நிர்வாகம் தக்க வைக்காத காரணத்தால் அடுத்த மாதம் நடைபெறும் மெகா ஏலத்தில் அவர்கள் ஏலம் விடப்பட உள்ளனர்.
அவர்கள் வேறு யாரும் அல்ல. ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரே ஆவர். பண்ட், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு முதல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக கே.எல். ராகுல் விளையாடி வருகிறார். அதேபோல, ஷ்ரேயாஸ் ஐயரும் 2022ஆம் ஆண்டு முதல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
ரிஷப் Pant-ஐ தட்டி தூக்குமா சிஎஸ்கே?
எனவே, அனுபவம் வாய்ந்த இந்த மூன்று வீரர்களை வாங்க ஐபிஎல் அணிகள் அதிக ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரிஷப் பண்டை வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனிக்கு பிறகு அந்த இடத்தில் ரிஷப் பண்டை வைத்து நிரப்ப சிஎஸ்கே திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், முதல் வீரராக ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவது வீரராக ரவீந்திர ஜடேஜாவும் 18 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: Diwali Non Veg Celebration : பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..