வரவிருக்கும் 2025 ஐபிஎல் சீசனுக்காக 5 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது. அதன்படி, முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா ஆகிய வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் செய்ய காத்திருக்கும் சிஎஸ்கே:


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தோனி, கோலி, ரோகித் சர்மா என இந்தியாவின் நட்சத்திர வீரர்களும், வெளிநாட்டு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களும் இணைந்து ஆடும் இந்த தொடர் வெற்றிகரமாக விளையாட்டுத் தொடராக நடைபெற்று வருகிறது.


ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் அடுத்தாண்டான 2025ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கும் விரும்பும் வீரர்களின் பட்டியலை ( ரிட்டன்சன்) பட்டியலை சமர்ப்பிக்க ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு விதித்திருந்தது.  


இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்த 5 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் வீரராக ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவது வீரராக ரவீந்திர ஜடேஜாவும் 18 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். 


ரிட்டன்சன் லிஸ்டில் வெளிநாட்டு வீரர்:


மூன்றாவது வீரராக இலங்கை அணியின் மதீஷா பத்திரனா 13 கோடி ரூபாய்க்கும் நான்காவது வீரராக ஷிவம் துபே 12 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இறுதியாக, முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, Uncapped வீரராக 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.


 






மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, திலக் வர்மா ஆகிய வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 


இதையும் படிக்க: Diwali Non Veg Celebration : பட்டாசு, புதுத்துணி போதாது.. மீன், சிக்கன், மட்டன் முக்கியம்.. படையெடுத்த மக்கள்..