ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தோனி, கோலி, ரோகித் சர்மா என இந்தியாவின் நட்சத்திர வீரர்களும், வெளிநாட்டு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களும் இணைந்து ஆடும் இந்த தொடர் வெற்றிகரமாக விளையாட்டுத் தொடராக நடைபெற்று வருகிறது.
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் அடுத்தாண்டான 2025ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. மெகா ஏலத்தை முன்னதாக, ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கும் விரும்பும் வீரர்களின் பட்டியலை ( ரிட்டன்சன்) பட்டியலை சமர்ப்பிக்க ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு விதித்திருந்தது. இதன்படி, அக்டோபர் 31ம் தேதியே இந்த பட்டியலை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும்.
ஐ,பி.எல். நிர்வாகம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று எந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கிறது? என்பது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ஐ.பி.எல். ரிட்டென்சன் எப்போது நடக்கிறது? எப்படி பார்ப்பது? என்பதை கீழே காணலாம்.
ஐ.பி.எல். ரிட்டன்சன் எத்தனை மணிக்கு நடக்கிறது?
ஐ.பி.எல். 2025ம் ஆண்டுக்கான ரிட்டன்சன் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
ஐ.பி.எல். ரிட்டன்சனை எப்படி பார்ப்பது?
ஐ.பி.எல். ரிட்டன்சனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இன்று காணலாம்.
எந்த ஓடிடி தளத்தில் காணலாம்?
ஐ.பி.எல். 2025ம் ஆண்டுக்கான ரிட்டன்சனை ஜியோ சினிமாவில் இன்று காணலாம்.
தற்போது வரை முன்னாள் சாம்பியனான சி.எஸ்.கே. தோனி மற்றும் ஜடேஜாவை தக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணி ஹர்திக் பாண்ட்யாவை தக்க வைத்துக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா அணி சூர்யகுமார் யாதவை வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் அய்யர் மும்பை அணிக்குச் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.சி.பி. அணியில் தற்போதைய தகவல்படி விராட் கோலியை மட்டும் தக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற வீரர்களின் விவரம் வெளியிடப்படவில்லை. மேலும், விராட்கோலியே ஆர்.சி.பி.யின் அடுத்த கேப்டன் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.