ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல் சீசன் 17 தொடங்கியது. இதில் முதல் லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த வகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


அதேபோல், இதுவரை நடந்து முடிந்துள்ள 7 லீக் போட்டிகளிலும் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று (மார்ச் 26) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற்றது.


முன்னதாக முதலில் களம் இறங்கிய சி.எஸ்.கே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை அணியை பொறுத்தவரை ஷிவம் துபே அதிகபட்சமாக 51 ரன்களை குவித்தார். மொத்தம் 23 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார்.


அதேபோல், தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 46 ரன்களை குவித்தார். 


பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  


ரயில் நிலையத்தில் இருந்து போட்டியை ரசித்த ரசிகர்கள்:


அதேநேரம் நேற்றைய போட்டியில் மைதானம் முழுவதும் சி.எஸ்.கே அணியின் மஞ்சள் படை தான் நிறம்பி வழிந்தது. இதனிடையே தான் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பணம் இருப்பவர்கள் டிக்கெட் பெற்று மைதானத்திற்கு நேரடியாகச் சென்று போட்டியை கண்டுகளித்த சூழலில், நேற்று சென்னை சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து ரசிகர்கள் சி.எஸ்.கே மற்றும் குஜராத் அணிகள் விளையாடிய போட்டியை பார்த்து ரசித்துள்ளனர்.






அதாவது ரயில் நிலையத்தில் இருக்கும் ஜன்னல் வழியே பார்த்தால் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் தெரியும். அந்தவகையில் ரயில் நிலையத்தில் உள்ள ஜன்னல் வழியே நின்று தான் ரசிகர்கள் இந்த போட்டியை பார்த்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 


மேலும் படிக்க: IPL 2024 Ruturaj Gaikwad: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக கடைசி 5 போட்டிகள்...ருதுராஜ் கெய்க்வாட் செய்த தரமான சம்பவம்!


மேலும் படிக்க: Ravindra Jadeja: குஜராத் அணிக்கு எதிரான போட்டி...ஜடேஜாவுக்கு ரசிகர்கள் கொடுக்கப்போகும் இன்ப அதிர்ச்சி!