விராட் கோலியை பார்க்க மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்:
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் களம் இறங்கினார்கள். அப்போது விராட் கோலி மீது உள்ள அதீத அன்பால் அவருடைய ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்தார்.
மைதானத்திற்குள் நுழைந்த அந்த ரசிகர் விராட் கோலி நிற்கும் பக்கம் பார்த்து வேகமாக ஓடினார். அப்போது விராட் கோலியின் அருகில் சென்ற அந்த ரசிகர் திடீரென கோலியின் கால்களில் விழுந்தார். அந்த ரசிகரை கோலி எழுந்திருக்க சொல்லும் பொழுது மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் அவரை இழுத்துச் சென்றனர். இது வீடியோ காட்சியாக வெளியாக வைரலானது.
ரசிகரை தாக்கிய அதிகாரிகள்:
கிரிக்கெட் மட்டும் அல்ல விளையாட்டு போட்டிகளில் மைதானங்களில் நடைபெறும் போது வீரர்களை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பது வழக்கமான ஒன்று தான். அதேநேரம் சில ரசிகர்கள் வீரர்கள் மீதுள்ள அதீத அன்பில் பாதுகாப்பை எல்லாம் மீறி திடீரென மைதானத்திற்குள் நுழைந்து தாங்கள் நேசிக்கும் வீரர்களை கட்டியணைப்பதும் அவர்கள் கால்கள் விழுந்து வணங்குவதும் பல போட்டிகளில் நடைபெற்று இருக்கிறது.
இது தவறான ஒன்றாக இருந்தாலும் இது தடுப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை பாதுகாப்பு அதிகாரிகள் செய்து வருகின்றன. இந்நிலையில் தான் விராட் கோலியை பார்க்க மைதானத்திற்குள் நுழைந்த அந்த ரசிகர் தொடர்பான மற்றொரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அந்த வீடியோவில் மைதானத்திற்குள் சென்று கோலியை பார்த்த அந்த ரசிகரை அதிகரிகள் சரமாரியாக தாக்குகின்றனர். இதுதொடர்பான வீடியோவை பிரணீத் என்ற விராட் கோலி ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில், “என்ன மாதிரியான நடத்தை இது ஆர்.சி.பி. யாரையும் தொட உங்களுக்கு உரிமை இல்லை. பிறகு சட்டத்தால் என்ன பயன்?
நீங்கள் அவரை சிறையில் அடைக்கலாம் அல்லது அபராதத்தில் வைத்திருக்கலாம் ஆனால் நீங்கள் அவரை ஸ்டேடியத்திலேயே தாக்குகிறீர்கள்.
விராட் கோலி உங்கள் அணியை விட்டு வெளியேறியவுடன் பாருங்கள் உங்கள் அணிக்கு என்ன நடக்கிறது என்று” என அந்த வீடியோ பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் ஆர்.சி.பி மற்றும் மைதானத்தின் பாதுகாப்பு அதிகாரிகளை கடுமையாக விமார்சனம் செய்து வருகின்றனர் அதோடு ஆர்.சி.பி அணி நிர்வாகத்திற்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.