சென்னை அணியின் புதிய கேப்டன்:
ஐ.பி.எல் நிர்வாகம் இன்று (மார்ச் 22) புதிய கேப்டன்களை அறிமுகம் செய்தது. அந்த வகையில் 10 அணிகளின் கேப்டன்களும் அறிமுகம் செய்யப்பட்டனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த வகையில் 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி இந்த ஐ.பி.எல் போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும், தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. அதேநேரம், கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து சி.எஸ்.கே வில் விளையாடி வரும் ருதுராஜ் தான் சென்னை அணியின் எதிர்கால வீரராக பார்க்கப்பட்டார். அதேபோல் மகாராஷ்ட்ரா அணியின் கேப்டனாகவும் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டார் இதனால் தான் அவருக்கு இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாழ்த்திய சூர்யகுமார் யாதவ்:
இந்நிலையில் புதிய கேப்டனாக களம் இறங்க உள்ள ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், “நீ மிகப்பெரிய ஜாம்பவான் இடத்தை நிரப்ப வேணடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உனது அமைதியான குணத்தின் மூலமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புகழையும் பாரம்பரியத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வாய் என்ற நம்பிக்கை உள்ளது. அதிர்ஷ்டமும் உன்னிடம் இருக்க வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் அவருக்கு வாழ்த்து சொல்லமல் ருதுராஜ் கேப்டானக நியமிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் வாழ்த்து சொல்லி இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறை! வீரர்களாக மட்டும் களம் காணும் 3 ஜாம்பவான்கள்!