RR vs KKR LIVE Score: ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியின் லைவ் அப்டேட்டை இங்கே பார்ப்போம்:

மு.வா.ஜெகதீஸ் குமார் Last Updated: 19 May 2024 07:48 PM
RR vs KKR LIVE Score: மழையால் டாஸ் தாமதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Background

ஐ.பி.எல் 2024:


ஐபிஎல் 2024ல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இன்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றால் இரண்டாவது இடத்தை தக்க வைக்கும். 


கொல்கத்தா - ராஜஸ்தான்:


கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 29 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 14 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை. இந்த சீசனில் இரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பர்சபரா ஸ்டேடியத்தின் எல்லை தோராயமாக 68 முதல் 70 மீட்டர் வரை மட்டுமே உள்ளது. இதன் காரணமாக, எல்லை சிறியது என்பதால், இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், இரண்டாவது இன்னிங்ஸின்போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்ச் மாறலாம். எனவே, முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது. 


ஐபிஎல் 2024 இன் லீக் கட்டத்தின் கடைசி ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டுமே இந்த மைதானத்தில் நடந்துள்ளது. அந்த போட்டியில் பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. இதன்மூலம், இது குறைந்த ஸ்கோரை பதிவு செய்த போட்டியாக அமைந்தது.


இன்றைய நாளில் கவுகாத்தி ஆடுகளம் எப்படி விளையாடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இந்த மைதானத்தில் 3 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த 2 அணிகளும், இரண்டாவதாக பேட்டிங் செய்த 1 அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த பிட்ச்சில் ஐபிஎல்லில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 180 ரன்கள் என்ற அடிப்படையில் இருக்கிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.