ஐபிஎல் சீசனில் நான்காவது வீரராக களம் இறங்கி 500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரியான் பராக்.


 


ஐபிஎல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டன.


அதேநேரம் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உட்பட 5 அணிகளுக்கு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கடும் போட்டி நிலவிகிறது.  


அசத்தும் ரியான் பராக்:


முன்னதாக இந்த சீசனில் இளம் வீரர்கள் பலர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்று (மே15) ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி வீரர் ஒரு மகத்தான சாதனையை செய்து அசத்தி இருக்கிறார்.  


ஐ.பி.எல் சீசன்களில் 4 அல்லது அதற்கு அடுத்த இடத்தில் பேட்டிங் செய்த வீரர்களில் 500 ரன்களை கடந்துள்ளார். ரியான் பராக். முன்னதாக இந்த சாதனையை ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் செய்திருந்த சூழலில் தான் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக் 500க்கும் அதிகமான ரன்களை கடந்து இந்த சாதனையை செய்திருக்கிறார். 


500 ரன்களை கடந்த மூன்றாவது வீரர்:







இந்த சீசனில் இதுவரை 13 லீக் போட்டியில் விளையாடி உள்ளார் ரியான் பராக். இதில் 59 என்ற ஆவரேஜில் 152.59 என்ற ரன் ரேடி அடிப்படையில் 531 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் 4 அரைசதங்களையும் தன் வசப்படுத்தி இருக்கிறார்.  38 பவுண்டரிகள் மற்றும் 31 சிக்ஸர்கள் விளாசி உள்ள ரியான் பராக் அதிகபட்சமாக 84* ரன்களை விளாசியுள்ளார்.


அதேபோல் சர்வதேச போட்டிகளில் விளையாடத ஒரு வீரர் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமயையும் இவர் வசம் தான் உள்ளது.  கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் இவர் விளையாடி வந்தாலும் பெரிதாக ஒன்றும் திறமையை வெளிப்படுத்த வில்லை.


அதனால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. இச்சூழலில் தான் இந்த சீசனில் தன் பேட்டால் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரியான் பராக்.  இந்த சீசனில் தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிக்கட்டி வரும் இவரை சர்வதேச போட்டிகளில் இந்திய அணி விளையாட வைக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக இருக்கிறது.


மேலும் படிக்க: RCB vs CSK: எல்லாமே 18! சென்னைக்கு எதிராக ஆர்.சி.பி.யின் சாதகமும், சவால்களும்!


மேலும் படிக்க: ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”