முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தனது செயல்பாடுகளால் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவர். கம்பீர் எங்கையாவது பயணம் செய்தாலும், ஏதேனும் ஒரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், டக் அவுட்டில் அமர்ந்திருந்தாலும் அல்லது சக வீரர்களுடன் பழகினாலும் சிரித்துக்கொண்டே இருப்பார். 


ஆவேசப்படும் கம்பீர்:


அதேநேரத்தில் ஒரு போட்டியில் விளையாடினாலோ அல்லது சக வீரர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலோ கம்பீரின் முகம் தீயை எரிக்க தொடங்கிவிடும். கடந்த ஆண்டு கூட விராட் கோலிக்கும், கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், இந்த சீசனில் இந்த இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 






இந்தநிலையில், கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கவுதம் கம்பீர், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். அதனைதொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியின் ஆலோசகராக இருந்தார். இதையடுத்து, மீண்டும் கொல்கத்தா அணியில் இணைந்த இவர், ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.






ரசிகைக்காக கம்பீர் செய்த செயல்:


இப்படியான சூழ்நிலையில், கவுதம் கம்பீரின் ரசிகை ஒருவர் தனது கையில் இருந்த பதாகை ஒன்றில், “கம்பீர் சிரிக்கும் வரை நான் என் கிரஷுடம் காதலை வெளிப்படுத்த மாட்டேன்” என போட்டியின் நாளில் பார்வையாளர்கள் அரங்கில் நின்றிருந்தார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலானது. 


இதற்கு பதிலளிக்கும் விதமாக கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரசிகரின் புகைப்படத்தை பகிர்ந்ததன்மூலம் ரசிகரின் கனவை நிறைவேற்றினார். அதில், கம்பீர் தான் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “இப்போது போய் உன் காதலை சொல்” என்று பதிவிட்டிருந்தார். 


ஐபிஎல் 2024ல் கம்பீரின் ஆலோசனைக்கு கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா விளையாட இருந்த போட்டி ஒன்று மழையால் தடை பட்டதால், 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸின் நிகர ரன் ரேட் அதிகமாக உள்ளது. ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தா மூன்று போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ்ம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக மட்டும் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்தது. 


கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ம் ஆண்டு கவுதம் கம்பீர் தலைமையில் இரண்டு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றது. தற்போது ஆலோசகராக இருக்கும் நிலையில், கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப்களுக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது.