IPL 2024 Retention LIVE : பரபரப்புக்கு முற்றுப்புள்ளி.. பாண்டியாவை விட்டுக்கொடுக்காத குஜராத்; ஆர்ச்சரை கழட்டி விட்ட மும்பை
IPL 2024 Retention LIVE Updates: இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான டிரேடிங் குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி தளத்தில் காணலாம்.
பெங்களூரு அணி தன்னிடம் இருந்த வீரர்களில் 11 வீரர்களை விடுவித்துள்ளது. இதில் கேதர் ஜாதவ், ஹசில் வுட் உள்ளிட்ட முக்கிய வீரர்களை கழட்டி விட்டுள்ளது. இது பெங்களூரு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அல்ஜாரி ஜோசப் உள்ளிட்ட 8 வீரர்களை கழட்டி விட்டுள்ளது.
மும்பை அணி ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோர்டன், யான்சென் உள்ளிட்ட மொத்தம் 11 வீரர்களை விடுவித்துள்ளது. இதில் மொத்தம் 6 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சரை கழட்டி விட்டுள்ளது. இவரை கடந்த ஏலத்தில் 8 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது.
மும்பை அணி தனது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேமரூன் க்ரீனை தக்கவைத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் கடந்த சில நாடகளாக ஊடகங்களில் வெளியாகி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடி ஆட்டக்காரர் ஹாரி ப்ரூக் உள்ளிட்ட மொத்தம் 6 வீரர்களை வெளியேற்றியுள்ளது.
கொல்கத்தா அணி தன்வசம் இருந்த வீரர்களில் ஷர்துல் தகூர், லிட்டன் தாஸ் ஃபெர்கூசன், டிம் சௌதி உள்ளிட்ட மொத்தம் 12 வீரர்களை வெளியேற்றியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணி தக்கவைத்த மற்றும் விடுவித்த ரசிகர்கள் விபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது அணியில் உள்ள ரிஷப் பண்டை தக்கவைத்துள்ளது. காயம் காரணாமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை. அதேபோல் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரை தக்கவைத்துள்ளது டெல்லி அணி.
பஞ்சாப் அணி தக்கவைத்த மற்றும் வெள்யேற்றிய வீரர்கள் விபரம்.
அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மூலம், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்கு திரும்புவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா மும்பையில் வீரராகவும் கேப்டனாகவும் நீடிப்பாரா என்பதுதான் இப்போது பார்க்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. ஹர்திக் மும்பைக்கு வந்தால் யார் கேப்டன் என்ற கேள்வி உருவாகியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தன்னிடம் இருந்த வீரர்களில் 11 பேரை விடுவித்துள்ளது. ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.
பஞ்சாப் அணி விடுவித்த வீரர்கள் விபரம்; பானுகா ராஜபக்சே, மோஹித் ரதீ, பால்தேஜ் தண்டா, ராஜாங்கத் பாவா, ஷாருக் கான்
ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்.
ஐபிஎல் லீக்கில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர் வரும் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக தங்களது அணியில் புதிய வீரர்களை இணைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார் யார் என்பதுதான் சென்னை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, ஆகாஷ் சிங் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோரை விடுவித்துள்ளது. இதில் அம்பாத்தி ராயுடு மட்டும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஐபிஎல்-லின் போதே அறிவித்திருந்தார்.
2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்தவர்களான பென் ஸ்டோக்ஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, ஆகாஷ் சிங் மற்றும் அம்பதி ராயுடு (ஓய்வு) ஆகியோரும் சென்னை அணியில் இருந்து 2024 தொடருக்கு முன் வெளியேறியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் டுவைன் பிரிட்டோரியஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கடந்த சீசனில் விளையாடும் வாய்ப்பினைப் பெற முடியாமல் போனார். கடந்த ஆண்டு சென்னை அணி தனது 5வது கோப்பை வென்றது.
ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன் மற்றும் டிம் சவுத்தி ஆகியோரை கொல்கத்தா அணி விடுவிக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படியென்றால் கொல்கத்தாவின் மூத்த வீரர்களான ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைனை தக்கவைத்துக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஐபிஎல் 2024க்காக லக்னோ அணி கேப்டன் கே.எல். ராகுலை தக்கவைத்துள்ளது.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டார், அதே நேரத்தில் ஹைதராபாத் அணியின் மயங்க் தாகர் பெங்களூரு அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார்.
Background
IPL 2024 Retention LIVE Updates:
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக, குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர்:
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்காக தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக 10 அணிகளின் உரிமையாளர்களும் ஏலத்திற்கு முன்னதாக தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை இன்று மாலை வெளியிட உள்ளனர். அதில் விடுவிக்கப்படும் வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெறும். அதேநேரம், ஏலத்திற்கு முன்பாகவே சில வீரர்கள் டிரேடிங் அடிப்படையில் ஒரு அணியை சேர்ந்த வீரர்கள் வேறு அணி நிர்வாகத்தால் கைப்பற்றப்படுகின்றனர்.
டிரேடிங் அடிப்படையில் மஅணி மாறிய விரர்கள்:
அந்த வகையில் ஏற்கனவே சில வீரர்கள் அணி நிர்வாகங்களால் கழற்றிவிடப்பட்டுள்ளனர். சில வீரர்கள் டிரேடிங் அடிப்படையில் அணி மாறியுள்ளனர். உதாரணமாக. சர்பராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டே போன்றவர்கள் டெல்லி கேப்பிட்டல்ஸால் விடுவிக்கப்பட்டனர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஷாபாஸ் அகமது மற்றும் மயங்க் தாகரை டிரேடிங் அடிப்படையில் மாற்றம் செய்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிலிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தேவ்தத் பாடிக்கல்லும் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆவேஷ் கானும் மாற்றம் கண்டுள்ளனர்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிரேடிங்:
ஷ்ரதூல் தாக்கூர்:
நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஷ்ரதூல் தாக்கூரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அடுத்த தொடருக்கான ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏலத்திற்கு முன்பாக அணி நிர்வாகத்தின் பர்ஸில் மிகவும் தேவையான இடத்தை இந்த முடிவு ஏற்படுத்தும்.
பிரித்வி ஷா:
கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், இந்த தொடரில் அவர் தக்கவைக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியானது. ஆனால், பிரித்வி ஷாவை இந்த சீசனிலும் டெல்லி அணி தக்கவைத்துக் கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா:
நடப்பாண்டு டிரேடிங்கில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது ஹர்திக் பாண்ட்யாவின் பெயர் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் அவர், மீண்டும் மும்பை அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, மும்பை அணி 15 கோடி ரூபாயை வழங்குவதோடு, சில நட்சத்திர வீரர்களை விடுவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. குஜராத் அணிக்காக கோப்பையை வென்ற கேப்டனையே மும்பை அணி, டிரேடிங் முறையில் வாங்குவது தான் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
டிரேடிங் செய்யப்பட்ட கேப்டன்கள்:
அதேநேரம், கேப்டன்களே டிரேடிங் முறையில் அணி மாறுவது என்பது ஐபிஎல் வரலாற்றில் புதியது அல்ல. ஏற்கனவே, 2019ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அஷ்வின், 2020ம் ஆண்டு தொடரின் போது டெல்லி அணியால் வாங்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரகானேவும் டெல்லி அணியால் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -