பிரமாண்டமாக தொடங்கிய ஐ.பி.எல்:


உலகக் கோப்பைக்கு பின்னர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டி இன்று (மார்ச் 22) நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண இருக்கின்றன. அதன்படி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.


தோனிக்காக ஒலித்த ’நீ சிங்கம் தான் பாடல்’:


இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இந்தி நடிகர்கள் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெரப் இந்திய தேசியக் கொடியுடன் மைதானத்திற்குள் வலம் வந்தனர்.






பின்னர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது குழுவினர் இந்தி மற்றும் தமிழ் மொழியில் பாடல்கள் பாடினார்கள். இதில் இரண்டு தமிழ் பாடல்கள் பாடப்பட்டன. முக்கியமாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இருந்து ‘நீ சிங்கம் தான்’ பாடல் பாடப்பட்டது.






5 முறை ஐ.பி.எல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்காக இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாடினார். அப்போது அங்கு கூடி இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்


 


மேலும் படிக்க: IPL 2024: நாளை முதல் தொடங்கும் ஐபிஎல் 2024.. அனைத்து அணிகளின் அடேங்கப்பா 11 வீரர்கள் இவர்கள்தான்..!


மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறை! வீரர்களாக மட்டும் களம் காணும் 3 ஜாம்பவான்கள்!