சி.எஸ்.கே vs ஆர்.சி.பி:


கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் இதுவரை வெற்றிகரமாக 16 சீசன்களை முடித்துள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு 17 வது ஐ.பி.எல் சீசன் நடைபெற இருக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண இருக்கின்றன.


அதன்படி, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாட உள்ளன. இந்த போட்டி இன்று (மார்ச் 22) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக கோலாகலமாக கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. 


உதவிய எம்.எஸ்.தோனி:


கடந்த சில நாட்களுக்கு முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக இருக்கும் எம்.எஸ்.தோனி சென்னை வந்தார். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சென்னை அணி வீர்ர்களுடன் சேர்ந்த மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் செய்யும் குறும்புத்தனமான செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும்.


தோனி சென்னைக்கு வந்ததில் இருந்தே சேப்பாக்கம் மைதானத்தில் அவரை ரசிகர்கள் நேரில் சென்று பார்ப்பதும் அவருடன் புகைப்படம் எடுப்பதுமாக இருந்தனர். இந்நிலையில் தான் சேப்பாக்கம் மைதானத்தில் பணிபுரியும் ஊழியருக்கு தோனி உதவி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.






அந்த வீடியோவில் பாக்ஸ் ஒன்றை மைதான ஊழியருடன் சேர்ந்து தூக்கிச் செல்கிறார் தோனி. இந்த வீடியோ பார்க்கும் ரசிகர்கள் தோனியை பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: IPL 2024: நாளை முதல் தொடங்கும் ஐபிஎல் 2024.. அனைத்து அணிகளின் அடேங்கப்பா 11 வீரர்கள் இவர்கள்தான்..!


மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறை! வீரர்களாக மட்டும் களம் காணும் 3 ஜாம்பவான்கள்!