ஐ.பி.எல் 2024:


 


ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் சீசன் 17- இன்று (மார்ச் 22) நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண இருக்கின்றன.


 


அதன்படி, முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் பிராமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இந்த கலை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், அக்‌ஷய் குமர், டைகர் ஷெரப் மற்றும் சோனு நிகம் ஆகியோர் பங்கேற்கின்றனர். 


சென்னை சூப்பர் கிங்ஸ் பாடல்:


இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் Anthem இன்று வெளியாகியுள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.






இது தொடர்பாக சி.எஸ்.கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், இது மேட்ச் டே, என்ன செய்ய வேண்டும் தெரியுமா, சூப்பர் ரசிகர்களே!   'நம்ம இசை!'” என்று கூறி சி.எஸ்.கே Anthem வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.





அதில் ஒரு ரசிகர்” தல தோனியை இன்று பார்க்க இருக்கின்றோம்” என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர், “ஆறாவது முறையாக சென்னை அணி டைட்டில் வெல்ல தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.


 


 


மேலும் படிக்க: IPL 2024: நாளை முதல் தொடங்கும் ஐபிஎல் 2024.. அனைத்து அணிகளின் அடேங்கப்பா 11 வீரர்கள் இவர்கள்தான்..!


மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறை! வீரர்களாக மட்டும் களம் காணும் 3 ஜாம்பவான்கள்!