LSG vs DC LIVE Score: சொந்த மண்ணில் வீழ்ந்த லக்னோ; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!
IPL 2024 LSG vs DC LIVE Score Updates: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
இறுதியில் டெல்லி அணி 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக விளையாடி வந்த மெக்கர்க் 35 பந்தில் 55 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ஐபிஎல் தொடரின் தனது அறிமுகப் போட்டியில் 31 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
போட்டியின் 13வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை மெக்கர்க் சிக்ஸருக்கு விளாசி மிரட்டியுள்ளார்.
12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெடுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக மூன்று ஆயிரம் ரன்கள் சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ப்ரித்வி ஷா தனது விக்கெட்டினை போட்டியின் 7வது ஓவரில் ரவி பிஷ்னாய் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 22 பந்தில் 32 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷத் கான் கூட்டணி 45 பந்தில் 73 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தது.
லக்னோ அணி 18.2 ஓவரில் 7 விக்கெட்டினை இழந்து 151 ரன்களை எட்டியுள்ளது.
18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் லக்னொ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
லக்னோ அணி 14 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 13வது ஓவரின் கடைசி பந்தில் க்ருனால் பாண்டியா தனது விக்கெட்டினை 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்.
12 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
லக்னோ அணியின் இம்பேக்ட் ப்ளேயர் தீபக் ஹூடா தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 12வது ஓவரின் 5வது பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 13 பந்தில் 10 ரன்கள் சேர்த்திருந்தார்.
11 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
லக்னோ அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்தில் இழந்து வெளியேறினார்.
லக்னோ அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
போட்டியின் 8வது ஓவரின் 4வது பந்தில் பூரன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். பூரன் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
லக்னோ அணியின் அதிரடி நாயகன் ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்தில் இழந்து வெளியேறினார். போட்டியின் 8வது ஓவரில் தனது விக்கெட்டினை ஸ்டாய்னஸ் 8 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீட்டு வருகின்றது.
பவர்ப்ளேவின் கடைசி ஓவரின் முதல் பந்தில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படிக்கல் தனது விக்கெட்டினை 6 பந்தில் 3 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
4 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மூன்று ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 28 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் மூன்றாவது ஓவரில் கலீல் அகமது பந்தில் டி காக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். டி காக் 19 ரன்கள் சேர்த்திருந்தார்.
போட்டியின் மூன்றாவது ஓவரில் கே.எல். ராகுல் சிக்ஸர் விளாசி ஆட்டத்தின் சிக்ஸர் கணக்கைத் தொடங்கி வைத்துள்ளார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் ஓவர் முடிவில் லக்னோ அணி இரண்டு பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (பிளேயிங் லெவன்): பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர்
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Background
லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று கே.எல். ராகுல் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
லக்னோ - டெல்லி மோதல்:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. லக்னோ அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற லக்னோ முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், டெல்லி அணியோ இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அந்த அணி தோல்வியுற்றது. இதனால், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியை பொறுத்தவரையில் கே.எல். ராகுல், ஸ்டோய்னிஸ், பூரான் மற்றும் டி காக் ஆகியோர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். பந்துவீச்சில் இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் கவனம் ஈர்க்கிறார். அதேநேரம், காயம் காரணமாக இன்றைய போட்டியில் அவர் களம் கண்பாரா என்பது சந்தேகமே. யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். டெல்லி அணியில் கேப்டன்ம் ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளன. ஆனால் டேவிட் வார்னர் போன்ற மற்ற முக்கிய வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சில் இஷாந்த் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஓரளவிற்கு நம்பிக்கை தருகின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணியே 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 195 ரன்களையும், குறைந்தபட்சமாக 193 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 189 ரன்களையும், குறைந்தபட்சமாக 143 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
ஏக்னா கிரிக்கெட் மைதானம் ஸ்லோ பிட்ச் என்பதோடு, குறைந்தபட்ச ஸ்கோரிங் போட்டிகளுக்கு பிரபலமானதாகும். இன்றைய போட்டியிலும் அதே சூழல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.
உத்தேச அணி விவரங்கள்:
லக்னோ: குயின்டன் டி காக், KL ராகுல், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்
டெல்லி: டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்ட்சன், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -