KKR vs LSG LIVE Score: சரணடைந்த லக்னோ; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா இமாலய வெற்றி!

IPL 2024 KKR vs LSG LIVE Score Updates: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 14 Apr 2024 07:11 PM
KKR vs LSG LIVE Score: சரணடைந்த லக்னோ; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா இமாலய வெற்றி!

கொல்கத்தா அணி 15.4 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த பிலிப் சால்ட் 47 பந்தில் 89 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 38 பந்தில் 38 ரன்களும் சேர்த்திருந்தனர். 

KKR vs LSG LIVE Score: பிலிப் சால்ட் 50.. கொல்கத்தா சதம்!

பிலிப் சால்ட் 26 பந்துகளில் தனது தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். 9.4 ஓவரில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது. 

KKR vs LSG LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது. 

KKR vs LSG LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் பிலிப் சால்ட் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் உள்ளனர். 

KKR vs LSG LIVE Score: 50 ரன்களை எட்டிய கொல்கத்தா!

இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் கொல்கத்தா அணி 5.1 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் சேர்த்துள்ளது. 

KKR vs LSG LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 44 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: ரகுவன்ஷி அவுட்!

நான்காவது ஓவரின் முதல் பந்தில் ரகுவன்ஷி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் அவுட்!

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் 6 ரன்கள் எடுத்த நிலையில், மோஷின் கான் பந்தில் அவுட்டானார்.

KKR vs LSG LIVE Score: கச்சிதமான பந்து வீசிய கொல்கத்தா; 161 ரன்கள் சேர்த்த லக்னோ!

லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 161 ரன்கள் சேர்த்தது. 

KKR vs LSG LIVE Score: பூரன் அவுட்!

பூரன் தனது விக்கெட்டினை 20வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 

KKR vs LSG LIVE Score: 150 ரன்களைக் கடந்த லக்னோ!

லக்னோ அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: 15 ஓவர்கள் முடிவில்!

15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: பதோனி அவுட்.. 5வது விக்கெட்டினை இழந்தது லக்னோ!

லக்னோ அணியின் பதோனி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 27 பந்தில் 29 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 

KKR vs LSG LIVE Score: 99 ரன்களில் லக்னோ!

13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: ஸ்டாய்னஸ் அவுட்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

KKR vs LSG LIVE Score: கே.எல். ராகுல் அவுட்!

லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 11வது ஓவரின் இரண்டாவது பந்தில், 37 ரன்கள் சேர்த்து ரஸல் பந்தில் ஆட்டமிழ்ந்து வெளியேறினார். 

KKR vs LSG LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது,.

KKR vs LSG LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: நிதான ஆட்டத்தில் லக்னோ!

நிதான ஆட்டத்தில் விளையாடி வரும் லக்னோ அணி 8 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: 50 ரன்களை எட்டிய லக்னோ!

7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: 4 ஓவர்கள் முடிவில்!

4 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: மூன்று ஓவர்கள் முடிந்தது!

மூன்று ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 28 ரன்கள் சேர்த்து வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: இரண்டு ஓவர்கள் முடிந்தது!

இரண்டு ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டினை இழந்து 20 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: டி காக் அவுட்!

இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டிகாக் தனது விக்கெட்டினை வைபவ் ஆரோரா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 8 பந்தில் 10 ரன்கள் சேர்த்திருந்தார். 

KKR vs LSG LIVE Score: முதல் சிக்ஸரை விளாசிய கே.எல். ராகுல்!

ஆட்டத்தின் முதல் சிக்ஸரை கே.எல். ராகுல் இரண்டாவது ஓவரில் விளாசி அசத்தியுள்ளார். 

KKR vs LSG LIVE Score: 10 ரன்கள்!

லக்னோ அணி ஆட்டத்தின் முதல் ஓவரில் 10 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

KKR vs LSG LIVE Score: தொட்டதெல்லாம் பவுண்டரி!

போட்டியின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார் டி காக். முதல் ஓவரை ஸ்டாக் வீசி வருகின்றார். 

KKR vs LSG LIVE Score: கொல்கத்தா அணியின் ப்ளேயிங் லெவன்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி

KKR vs LSG LIVE Score: லக்னோ அணியின் ப்ளேயிங் லெவன்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர்

KKR vs LSG LIVE Score: பேட்டிங் செய்ய களமிறங்கும் லக்னோ; ராகுல் படையை பொட்டலம் கட்டுமா கொல்கத்தா?

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

ஐபிஎல் 2024ன் 28வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இன்று மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் தங்களது கடைசி போட்டிய்ல் தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கும். இந்த சீசனில் இரு அணிகளும் சமபலத்துடன் காணப்படுகின்றன. 


ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நான்காவது இடத்தில் இருக்கிறது. 


பிட்ச் ரிப்போர்ட்: 


கொல்கத்தாவின் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்துவர். சமீபத்திய போட்டிகளில் அடிப்படையில், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். போட்டியின் தொடக்கத்தில் முதல் சில ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களை அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஐபிஎல் 2024ல் கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டுமே நடந்துள்ளது. அதிலும், ரன் மழை பொழிந்தது. இந்த போட்டியில் இரூ அணிகளும் 200 ரன்களுக்கு மேல் குவித்தது. எனவே, இன்றைய போட்டியிலும் ரன் மழையை எதிர்பார்க்கலாம். 


இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர்: 


ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மூன்று போட்டிகளில் மட்டுமே மோதியுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக லக்னோ அணியே உள்ளது. இதுவரை அனைத்து போட்டிகளிலும் லக்னோ அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று முயற்சிக்கும். 


விளையாடிய மொத்த போட்டிகள்: 3
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:  3 வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 0
முடிவு இல்லை: 0
கைவிடப்பட்டது: 0


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 


குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:


பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி


இரு அணிகளின் முழு விவரம்: 


கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரைன், அக்ரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ராமன்தீப் சிங், கே.எஸ்.பரத், துஷ்மந்த சமீரா, ஹர்ஷினஃபர், ஏ.எம். மணீஷ் பாண்டே, ரெஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா, ஷர்பான் ரூதர்ஃபோர்ட், சேத்தன் சகாரியா, சாகிப் ஹுசைன், சுய்யாஷ் சர்மா.


லக்னோ: குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ், ஷமர் ஜோசப், அர்ஷத் கான், கிருஷ்ணப்ப கவுதம், கிருஷ்ணப்ப கவுதம் ஹென்றி , தீபக் ஹூடா, அர்ஷின் குல்கர்னி, பிரேராக் மன்கட், கைல் மேயர்ஸ், அமித் மிஸ்ரா, மொஹ்சின் கான், மணிராமன் சித்தார்த், ஆஷ்டன் டர்னர், யுத்வீர் சிங்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.