இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கிரிக்கெட் லீக் போட்டி என்றால் அது ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக்தான். இந்த லீக் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லீக் உலகில் மற்ற நாடுகளில் நடத்தப்படும் லீக் தொட்ர்களை விடவும் அதிகம் கவனிக்கப்படும் தொடராக ஐபிஎல் உள்ளது. 


இது போன்ற லீக் தொடர்களில் வீரர்களை ஏலம் எடுப்பது மட்டும் இல்லாமல், வீரர்கள் விளையாடுவதில்  இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ந்து அதே அணியில் பயிற்சியாளராகவோ, அலோசகராகவோ அதே அணியில் நீடிக்க வேண்டும் என அந்தந்த அணியின் ரசிகர்கள் தொடங்கி நிர்வாகம் வரை அனைவரும் விரும்புவது இங்கு வாடிக்கையாக உள்ளது. 


இந்த அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான கௌதம் கம்பீரின் ஒப்பந்த காலம் முடிந்ததால், தற்போது மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே திரும்பியுள்ளார். 


கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடினார். இது கேப்டனாக இருந்த கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி இரண்டு முறை அதாவது 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. அதேபோல் இவரது தலைமையில் மொத்தம் 5 முறை கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இது மட்டும் இல்லாமல் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக்  போட்டியில் கொல்கத்தா அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். 


2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய கம்பீர் சற்று ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அணிக்கு திரும்பியுள்ளார். இவரது வருகையை கொல்கத்தா அணி தனது சமூக வலைதளங்கள் தொடங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், 'கம்பீர் பேக் டூ ஹோம்’ என பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. 


கௌதம் கம்பீர் கடந்த இரண்டு ஆண்டுகளில் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த காலகட்டத்தில்  லக்னோ அணி இரண்டு முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


லக்னோ அணியில் இருந்து கௌதம் கம்பீர் வெளியேறியதை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயென்கா தனது டிவிட்டர் பக்கத்தில், 'கௌதம், LSGயை வடிவமைப்பதில் நீங்கள் பெரும் பங்காற்றியுள்ளீர்கள், உங்களையும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் செய்த பங்களிப்பையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். நீங்கள் எப்பொழுதும் லக்னோவின் குடும்பமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றோம்.  KKR இல் உங்கள் புதிய அவதாரத்தில் நீங்கள் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். நன்றி, வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் லக்னோ அணியின் டிவிட்டர் பக்கத்தில் நன்றி ஜிஜி என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர். 




பார்த்து பார்த்து உருவாக்கிய லக்னோவை உதறித் தள்ளி கொல்கத்தாவுக்கு தாவிய கம்பீர்; காரணம்?


Udhayanithi Stalin:"ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழையவில்லை" - உதயநிதி ஸ்டாலின்