IPL 2024: ஐபிஎல் வரலாற்றில் இந்த டாப் 10 சாதனைகள்.. இது கடினமானது மட்டுமல்ல, முறியடிக்க முடியாமல் இருப்பதும்..!

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு இருந்தாலும், அதில் ஒரு சில சாதனைகள் முறியடிப்பது மிகவும் கடினம்.

Continues below advertisement

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், இதுவரை 16 சீசன்கள் விளையாடப்பட்டுள்ளது.  இதுவரை விளையாடப்பட்ட 16 சீசன்களில் பல வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, முறியடிக்கப்பட்டுள்ளன. சில வீரர்கள் அதிக ரன்கள் எடுத்துள்ளனர், சில வீரர்கள் அதிவேகமாக சதம் அடித்துள்ளனர்.

Continues below advertisement

சில பேட்ஸ்மேன்கள் ஒரே ஓவரில் பல சிக்ஸர்களையும், சில கேப்டன்கள் தனது அணியை அதிக முறையும் சாம்பியனாக்கியுள்ளனர். 

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு இருந்தாலும், அதில் ஒரு சில சாதனைகள் முறியடிப்பது மிகவும் கடினம். அப்படி இருக்கையில் முறியடிக்க முடியாத டாப் 10 ஐபிஎல் சாதனைகளை இங்கே பார்ப்போம். 

10. ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் - 175 (கிறிஸ் கெய்ல்)

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஒரு இன்னிங்ஸில் 150 தனிநபர் ஸ்கோருக்கு மேல் எடுத்துள்ளனர். பிரெண்டன் மெக்கல்லம் 2008 ஆம் ஆண்டு கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய போது 158 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, கடந்த 2013ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி புனே வாரியர்ஸுக்கு எதிராக 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து மெக்கல்லம் சாதனையை முறியடித்தார். விளையாடிய இதே இன்னிங்ஸில், கெய்ல் 17 சிக்ஸர்களை அடித்தார் இது ஒரு சாதனையாகும்.

9. 12 முறை பிளேஆஃப் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்:

இதுவரை 16 ஐபிஎல் சீசன்கள் விளையாடப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14 முறை களம் கொண்டுள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை 14 சீசன்களில் விளையாடி அதில், 12 முறை பிளேஆஃப்களை எட்டியிருப்பது நம்பமுடியாத சாதனையாகும். 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் சிங்ஸ் அணி 12 முறை பிளேஆஃப்களுக்கு சென்று ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது.

8. ஐபிஎல் போட்டியில் அதிக மெய்டன் ஓவர்கள் - முகமது சிராஜ்

டி20 கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு டாட் பந்தும் முக்கியமானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐபிஎல்-லில் ஒரு பவுலர் மெய்டன் ஓவர் வீசினால் அது பெரிய சாதனைதான். இந்தநிலையில், கடந்த 2020ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய சிராஜ், கொல்கத்தா அணிக்கு எதிராக 2 மெய்டன் ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளையும் எடுத்தார். இதுவும் ஒரு சாதனை. 

7. 30 பந்துகளில் அதிவேக சதமடித்த கிறிஸ் கெயில்:

கடந்த 2013 ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய 175 ரன்கள் இன்னிங்ஸின் போது கிறிஸ் கெய்ல் தனது பெயரில் மற்றொரு வரலாற்று சாதனையை படைத்தார். 30 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகையே அதிர வைத்தார். இந்த சாதனையை இன்றுவரை கெய்லின் சாதனையை யாரும் நெருங்கவில்லை.

6. ஒரு சீசனில் விராட் கோலியின் அதிகபட்ச ரன்கள் - 973

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விராட் கோலி 16 போட்டிகளில் 973 ரன்கள் எடுத்து அசர வைத்தார். இந்த சீசனில் கோலி 4 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

5. ஒரு அணி பெற்ற தொடர்ச்சியான அதிக வெற்றிகள்:

ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கெளதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி ஐபிஎல் பட்டத்தை வென்றது/ அந்த சீசனில் தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, ஐபிஎல் 2015 சீசனிலும் கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற பெருமையை கொல்கத்தா அணி பெற்றது. 

4. கேப்டனாக அதிக போட்டிகள் - 226

ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். கடந்த 2008 முதல் சிஎஸ்கே கேப்டனாக தோனி இருந்து வருகிறார். இந்த 16 வருட நீண்ட பயணத்தில் மொத்தம் 226 போட்டிகளில் தோனி கேப்டனாக இருந்துள்ளார். அதில் அணி 133 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 158 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

3. ஒரே ஓவரில் அதிக ரன்கள்:

ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள். ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸர்கள் அடித்தாலும் 36 ரன்கள் மட்டுமே வரும். ஆனால்,  ஐ.பி.எல்லில் இதுவரை இரண்டு முறை 37 ரன்கள் எடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு விளையாடிய ஜடேஜா, பெங்களூரு பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலின் ஒரே ஓவரில் ஜடேஜா 37 ரன்கள் எடுத்தார். அவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன், கிறிஸ் கெய்ல், பிரசாந்த் பரமேஸ்வரனின் ஓவரில் இதே ரன்களை எடுத்திருந்தார்.

2. அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்: 

கடந்த 2016ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இரண்டாவது விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்தனர். அதை இன்றுவரை யாராலும் உடைக்க முடியவில்லை.

1. ஒரு போட்டியில் அதிக ரன்கள்:

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் 200க்கு மேல் அடிப்பது அரிதிலும் அரிது. கடந்த 2010ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் மொத்தம் 469 ரன்கள் எடுக்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 246 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு, பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 223 ரன்களும் எடுத்தது. 13 சீசன்கள் கடந்தும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola