ரஞ்சி கோப்பை 2023-24:


விறுவிறுப்பாக தொடங்கிய ரஞ்சி கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணி தமிழ்நாடு அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இது 48 வது முறையாகும்.


தோல்வி அடைந்தாலும் முயற்சியை கைவிடாதா தமிழ்நாடு:


அதன்படி, கடந்த 7 வருடங்களுக்கு பிறகு ரஞ்சிக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணியின் கனவு இந்த முறையும் பொய்த்துவிட்டது. ஆனால், இந்த தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பாகவே தங்களது திறமையை வெளிக்காட்டியதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதாவது திரிபுரா அணிக்கு எதிரான தோல்வி மூலம் தமிழ்நாடு அணி இந்த சீசனை தொடங்கி இருந்தாலும் அரையிறுதி வரை வந்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது.  இந்த ஒட்டு மொத்த தொடரிலும் தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் சிறப்பாக ஆடினார். அதனபடி, 18.52 சராசரியில் 53 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல் தமிழ்நாடு அணி வீரர் இந்த தொடரில் மொத்தம் 767 ரன்களை குவித்தார். இதில் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும்.






அஜித் ராம் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசினார். அந்தவகையில், 15.75 என்ற சராசரியில் 41 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அதேபோல் பேட்டிங்கை பொறுத்தவரை தமிழ்நாடு அணி வீரர் ஜெகதீசன் 2 சதங்கள் மற்றும் 1 அரைசதம் உட்பட மொத்தம் 816 ரன்களை குவித்தார். பிரதோஷ் 1 சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட மொத்தம் 482 ரன்களை குவித்தார். மற்றொரு வீரரான விஜய் சங்கர் 457 ரன்களை பெற்றார். அதேபோல் பந்து வீச்சில் சந்திப் வாரியர் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்படி தொடர் முழுவதும் தமிழ்நாடு அணி வீரர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். இதனால், அரையிறுதி வரை வந்த தமிழ்நாடு அணி அடுத்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!