CSK vs SRH LIVE Score: மீண்டும் சேஸிங்கில் சொதப்பிய SRH; 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK வெற்றி!
IPL 2024 CSK vs SRH LIVE Score Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.
சென்னை அணியின் வீரர் டேரில் மிட்ஷெல் SRH- க்கு எதிரான போட்டியில் 5 கேட்ச் பிடித்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல்லில் ஒரே போட்டியில் அதிக கேட்ச் பிடித்த முகமது நபியின் சாதனையை சமன் செய்தார்.
புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்த சென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு பின்னர் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஹைதராபாத் அணி 18.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
21 பந்தில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்றிச் க்ளாசன் தனது விக்கெட்டினை பத்திரானா பந்தில் இழந்து வெளியேறினார்.
13 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது.
12.3 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 4வது ஓவரில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டினை தேஷ்பாண்டே பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 9 பந்தில் 15 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஹைதராபாத் அணியின் அபாயகரமான தொடக்க வீரர் ஹெட் தனது விக்கெட்டினை தேஷ்பாண்டே பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியாக சிக்ஸர் விளாசி தங்களது சிக்ஸர் கணக்கைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.
சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் தனது விக்கெட்டினை 54 பந்தில் 98 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் தனது விக்கெட்டினை 54 பந்தில் 98 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.
கெய்க்வாட் 47 பந்துகளில் 90 ரன்களை எட்டியுள்ளார். இவர் 10 பவுண்டரி மூன்று சிக்ஸர் விளாசியுள்ளார்.
15.2 ஓவர்களில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எட்டியுள்ளது.
15 ஓவர்களில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
டேரில் மிட்ஷெல் தனது விக்கெட்டினை 32 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் 29 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 50 ரன்களை விளாசி உள்ளார்.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 115 ரன்கள் குவித்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 91 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 59 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் அதாவது 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சென்னை அணி 5 ஓவர்கள் முடிவில் 7 பவுண்டரிகளை விளாசியுள்ளது. அதில் 5 பவுண்டரிகளை கேப்டன் ருதுராஜ் விளாசியுள்ளார்.
4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 30 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
புவனேஷ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் 5வது பந்தினை தூக்கி ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார் சென்னை அணியின் தொடக்க வீரர் ரஹானே.
இரண்டு ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி களமிறங்கியுள்ளது. சென்னை அணியின் இன்னிங்ஸை ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடங்கியுள்ளனர்.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
Background
CSK Vs SRH, IPL 2024: சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்த்ல் தொடங்க உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் தலா ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்து, தொடரின் பாதி போட்டிகள் முடிந்துள்ளன. தற்போது இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் வார இறுதியான இன்று இரண்டு போட்டிகள் நடபெறும் நிலையில், இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.
சென்னை - ஐதராபாத் பலப்பரீட்சை:
சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் நான்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டியிலும் அந்த அணி தோல்வியுற்றுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியிலும் மண்ணை கவ்வியது. அதற்கு பழிவாங்கும் நோக்கிலும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற முனைப்பிலும் சென்னை அணி இன்று களமிறங்குகிறது. மறுமுனையில், பேட்டிங்கை மிகவும் சாதாரணம் விஷயம் என்பது போன்று காட்டி, ஐதராபாத் அணி எதிரணிகளை அச்சுறுத்தி வருகிறது. இமாலய ரன்களை குவிப்பது மிக எளிய விஷயமாக செய்து வருகிறது. அதேநேரம், கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், எதிர்பாராத விதமாக பெங்களூர் அணியிடம் தோல்வியுற்றது. இதனால் இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ஐதராபாத் அணி அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது சென்னை அணிக்கு பெரும் பலமாக உள்ளது.கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ரகானே ஆகியோர் ரன் எடுக்க முடியாமல் திணறுவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சு யூனிட் பலவீனமாகவே காணப்படுகிறது. அதன் விளைவாகவே கடந்த போட்டியில் லக்னோவிடம் சென்னை அணி தோல்வியுற்றது. எனவே பந்துவீச்சில் செய்யும் தவறுகளை சென்னை அணி குறைக்க வேண்டியது மிக மிக அவசியம்.
மறுபுறம் ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென், மார்க்ரம் என பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஃபார்மில் உள்ளனர். எதிரணிகளுக்கு கடினமான இலக்குகளை நிர்ணயிப்பதை அநாயசமாக செய்து வருகின்ரனர். ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினாலும், மறுபுறம் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் அதிகப்படியான ரன்களை விட்டுக் கொடுத்து வருகின்றனர். அதையும் கட்டுப்படுத்தினால் ஐதராபாத் அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 20 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 14 முறையும், ஐதராபாத் அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 192 ரன்களையும், குறைந்தபட்சமாக 134 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 132 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நான்கு ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. சேஸிங் அணிகள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன, முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்புவார்.
உத்தேச அணி விவரங்கள்:
சென்னை: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா
ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -