சென்னை vs குஜராத்:


ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தவகையில் முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


அதேபோல், இதுவரை நடந்து முடிந்துள்ள 6 லீக் போட்டிகளிலும் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணிகள் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது இரண்டாவது லீக் போட்டியில் இன்று (மார்ச் 26)  விளையாடுகிறது.  அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற்று வருகிறது.






முக்கியமாக இந்த சீசன் மூலம் கேப்டனாக அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக முதல் முறை களம் இறங்கிய சுப்மன் கில்லும் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இருவரும் இளம் வீரர்கள் மற்றும் கேப்டன்கள் என்பதால் இன்றைய போட்டி மிகவும் எதிர்பார்ப்பான ஒன்றாக இருக்கிறது. 


குழம்பிய கில்...கெய்க்வாட் கொடுத்த ரியாக்சன்:


இந்நிலையில், இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கு முன்னதாக டாஸ் போடப்பட்டது. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவரும் மைதானத்தில் நின்றனர்.






குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு டாஸ் விழுந்தது. அப்போது சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். உடனே ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால், திடீரென சுதாரித்து கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார் கில். இது அங்கிருந்தவர்களிடம் நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைந்தது. இது தொடர்பான வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


மேலும் படிக்க: IPL 2024 Ruturaj Gaikwad: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக கடைசி 5 போட்டிகள்...ருதுராஜ் கெய்க்வாட் செய்த தரமான சம்பவம்!


மேலும் படிக்க: CSK vs GT: சி.எஸ்.கே அணிக்கு எதிராக களம் இறங்கும் தமிழ்நாட்டு வீரர்கள்! விவரம் உள்ளே!