கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இதுவரை 40 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை 7 வெற்றிகளுடன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது.


ஐ.பி.எல் சீசன் 17:


அந்த அணி மொத்தம் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்ததாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், நான்காவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியையும் 4 போட்டிகளில் தோல்வியையும் பெற்று 5 வது இடத்தில் இருக்கிறது.







முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே தோல்வி அடைந்தது. தல தோனி கேப்டனாக இருந்து சென்னை அணியை வழிநடத்தி 5 முறை கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். இச்சூழலில் தற்போது சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்து வருவது சி.எஸ்.கே ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனிடையே ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சி.எஸ்.கே. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது.


கூலாக லியோ படம் பார்த்த ருதுராஜ் கெய்க்வாட்:




இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விஜய் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ படம் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் பதிவு செய்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். 






ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த பதிவை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் தற்போது விஜய் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் படிக்க: IPL 2024 Points Table: ஆறாவது இடத்திற்கு இடம்பெயர்ந்த டெல்லி.. முதலிடத்தில் யார்..? முழு புள்ளிகள் அட்டவணை இதோ!


 


மேலும் படிக்க: RCB 250th IPL Match: ஐபிஎல் வரலாற்றில் 250வது போட்டியில் களமிறங்கும் ஆர்சிபி.. இதுவரை பெங்களூரு அணி கடந்து வந்த பயணம்!