குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. நேற்றைய போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தோல்வியை தழுவியது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இதன்மூலம், புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது டெல்லி அணி. 

முதல் இடத்தில் யார்..? 

ஐபிஎல் 2024ன் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே நிலைதான். ஆனால் ஹைதராபாத் அணியின் நிகர ரன்ரேட் கொல்கத்தாவை விட குறைவாக உள்ளது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

 லக்னோ 8 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. சென்னை அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 5வது இடத்திலும், டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் 6வது இடத்தில் உள்ளது. குஜராத் அணி 9 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று நிகர ரன் ரேட் அடிப்படையில் 7வது இடத்தில் இருக்கிறது. மும்பை 8வது இடத்திலும், பஞ்சாப் 9வது இடத்திலும், பெங்களூரு கடைசி இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2024 : புள்ளிகள் அட்டவணை

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

முடிவு இல்லை

புள்ளிகள்

ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

8

7

1

0

0

14

0.698

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

7

5

2

0

0

10

1.206

3

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

7

5

2

0

0

10

0.914

4

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

8

5

3

0

0

10

0.148

5

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

8

4

4

0

0

8

0.415

6

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

9

4

5

0

0

8

-0.386

7

குஜராத் டைட்டன்ஸ் (GT)

9

4

5

0

0

8

-0.974

8

மும்பை இந்தியன்ஸ் (MI)

8

3

5

0

0

6

-0.227

9

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

8

2

6

0

0

4

-0.292

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

8

1

7

0

0

2

-1.046

ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள்: 

1. விராட் கோலி (ஆர்சிபி): 379 ரன்கள், சராசரி: 63.16, எச்எஸ்: 113*, எஸ்ஆர்: 150.39, 1 சதம், 2 அரைசதம்
2. ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே): 349 ரன்கள், சராசரி: 58.16, எச்எஸ்: 108*, : 142.44, 1 சதம், 2 அரைசதம்
3. ரிஷப் பந்த் (டிசி): 342 ரன்கள், சராசரி: 48.85, ஹெச்எஸ்: 88*, எஸ்ஆர்: 161.32, 3 அரைசதம்
4. சாய் சுதர்சன் (ஜிடி): 334 ரன்கள், சராசரி: 3. 3 : 65, SR: 128.95, 1 அரைசதம்
5. டிராவிஸ் ஹெட் (எஸ்ஆர்ஹெச்): 324 ரன்கள், சராசரி: 54.00, HS: 102, SR: 216.00, 1 சதம், 2 அரைசதம்

விராட் கோலி ஐபிஎல் 2024ல் அதிக ரன் குவித்தவராக இருக்கிறார். எனவே ஐபிஎல் 2024 ஆரஞ்சு கேப்பை இன்னும் இவரிடமே தஞ்சமடைந்துள்ளது. 

பர்பிள் கேப் - அதிக விக்கெட்கள்:

1. ஜஸ்பிரித் பும்ரா (எம்ஐ): 13 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 5/21, சராசரி: 15.69, எகானமி: 6.37.
2. யுஸ்வேந்திர சாஹல் (ஆர்ஆர்): 13 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 3/11, சராசரி: 20. , எகானமி: 8.83.
3. ஹர்ஷல் படேல் (பிபிகேஎஸ்): 13 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 3/15, சராசரி: 21.38, எகானமி: 9.58.
4. குல்தீப் யாதவ் (டிசி): 12 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 4/55, சராசரி: 15.08, எகானமி: 7.54.
5. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சிஎஸ்கே): 12 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 4/29, சராசரி: 23.08, எகானமி: 10.07.

மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் 2024 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். எனவே ஐபிஎல் 2024 பர்பிள் நிற கேப்பை வைத்திருக்கிறார்.