IPL 2023: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கடந்த இரண்டு மாதங்களாக உச்சரித்துக்கொண்டு இருக்கும் வார்த்தை ஐபிஎல். 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இந்தியன் பிரிமியர் லீக் இந்த ஆண்டுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உலகமே உற்று நோக்கும் கிரிக்கெட் லீக் போட்டியாக இந்த தொடர் இருக்க காரணம், பல இளம் வீரர்களை அடையாளப்படுத்துகிறது. மேலும், கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒரு சிலபோட்டிகளில் எதிரணிக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியுள்ளது. அவற்றில் ஒரு சில நிகழ்வுகள் குறித்து இங்கு காணலாம். 


ஐபிஎல் தொடரின் தொடக்க காலம் முதல் விளையாடி வரும் வீரர்களில் ஒருவர்  விராட் கோலி. இவர் 2008ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டுவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் விராட்கோலி களமிறங்கும் போது ஏதாவது புதிய சாதனையை அவர் படைத்தே வருகிறார். அப்படி இந்த ஆண்டு அவர் படைத்த சாதனை என்றால், அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசியவர்கள் பட்டியலில் இணைந்ததுடன், ஐபிஎல் தொடரில் அதிக சதம் விளாசியவர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னர் இந்த சாதனையை கிஸிஸ் கெயில் 6 சதங்கள் விளாசியிருந்தார். தற்போது விராட் கோலி 7 சதங்கள் விளாசியுள்ளார். 


இம்முறை விராட் கோலி சதம் விளாசிய இரண்டு போட்டிகளிலும், எதிரணி (சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்) சார்பிலும் ஒரு சதம் விளாசப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே பேட்டியில் இரண்டு சதங்கள் விளாசப்பட்டிருப்பது இந்த ஆண்டு தான் நடைபெற்றுள்ளது. மொத்தம் விளாசப்பட்ட 4 சதங்களில் இரண்டு சதங்கள் விராட் கோலி விளாசியது. 




சதத்தால் ஹைதராபாத் அணியை நொறுக்கிய விராட் கோலி


லீக் போட்டியின் கடைசி இரண்டு போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் எனும் நிலையில் இருந்தது. இந்நிலையில் முதலில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் க்ளாசன் 51 பந்தில் சதம் விளாசினர். அந்த போட்டியில் ஹைதராபாத் அணி 186 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் டூ பிளசிஸ் சிறப்பாக ஆடினர். இதில் இலக்கை துரத்தும் அழுத்தத்துடனும் கட்டாய வெற்றியுடனும் ஆடிய விராட் கோலி 63 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் பறக்கவிட்டு இந்தாண்டுக்கான தனது முதல் சதத்தினை எட்டினார். இந்த சதத்தின் மூலம் அவர் கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்திருந்தார். 




சதம் அடித்தும் நொறுங்கிப்போன விராட் கோலி


பெங்களூரு மற்றும்  குஜராத் அணிகளின் கடைசி லீக் போட்டியும் இந்த ஆண்டுக்கான கடைசி லீக் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச தீர்மானித்தது. இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகளில் பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தான். வழக்கம் போல், மிடில் ஆர்டர் சொதப்ப, விராட் கோலி மட்டும் தனிநபராக அணியை தோலில் சுமந்தார். அந்த போட்டியில் 61 பந்தில் 101 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த போட்டியில் பெங்களூரு 197 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணியின் சுப்மன் கில் 52 பந்தில் சதம் விளாசி பெங்களூரு அணியின் வெற்றியையும் ப்ளேஆஃப் வாய்ப்பினையும் பறித்தார். இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக விராட் மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டார். 




மேலும் படிக்க., 


IPL 2023: மறக்குமா நெஞ்சம்..! பலமான மும்பை இந்தியன்ஸ்க்கு தோல்வி பயத்தைக் காட்டி கதிகலங்க வைத்த ரஷித் கான்..!


மேலும் படிக்க., 


IPL 2023: மறக்குமா நெஞ்சம்..! ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷித் கான்; 5 சிக்ஸர்கள் பறக்கவிட்ட ரிங்கு சிங்