ஐபிஎல் 16வது சீசனில் இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்குகின்றன. மே 23 ம் தேதி (இன்று) முதல் தகுதி சுற்று போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சேப்பாக்கமும் - தோனியும்:
கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல மறக்க முடியாத நினைவுகளை தனதாக்கி வைத்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தின் மீதும், சென்னை ரசிகர்களும் மீதும் தீரா காதல் கொண்ட தோனி, எனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இருக்கும் என கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.
அப்படி இருக்க, சேப்பாக்கம் மைதானத்தில் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், பிளே ஆஃப் போட்டிகளை கணக்கெடுத்தால் அது கவலைக்கிடமாக உள்ளது.
மகேந்திர சிங் தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 24 பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடி வெறும் 472 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல், சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தோனி இதுவரை 61 போட்டிகளில் விளையாடி 1444 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம், தோனி தனது ஐபிஎல் கேரியரில் எந்த மைதானத்திலும் அதிக ரன்கள் குவித்தது இல்லை.
பிளே ஆஃப்:
சேப்பாக்கத்தில் இதுவரை எம்.எஸ்.தோனி 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், தோனி ஒரு முறைக்கு மட்டுமே 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் தோனி அடித்த ரன்களின் எண்ணிக்கை இதோ..
ஆண்டு | எதிரணி | ரன்கள் | பிளேஆஃப் |
2008 | ராஜஸ்தான் ராயல்ஸ் | 12 ரன்கள் | அரை இறுதி |
2011 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 22 ரன்கள் | இறுதி |
2012 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 12 ரன்கள் | இறுதி |
பிளே ஆப்பில் தோனியின் சாதனை:
ஐபிஎல் தொடரில் 247 போட்டிகளில் விளையாடி அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை எம்.எஸ்.தோனி பெற்றுள்ளார். மேலும், 5000 ரன்களும் மேல் குவித்துள்ளார்.
பிளேஆஃப்களில் ஒரு வீரராக தோனியின் சாதனையும் அசாத்தியமானது. அவர் 26 ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளில் விளையாடி 9 பவுண்டரிகள் மற்றும் 28 சிக்ஸர்கள் உட்பட பிளேஆஃப்களில் மட்டும் 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 15 கேட்சுகள், மூன்று ஸ்டம்பிங் மற்றும் எட்டு ரன்அவுட்கள் என 26 வீரர்களை வெளியேற்றியுள்ளார்.
பிளேஆஃப் போட்டிகள் |
வெற்றி |
ரன்கள் |
எதிர்கொண்ட பந்துகள் |
26 |
16 |
522 |
393 |
ப்ளே ஆஃப்களில் தோனியின் கேப்டன்சி சாதனை:
ஒரு கேப்டனாக, தோனி ஐபிஎல்லில் மூன்று முறை தவிர மற்ற எல்லாவற்றிலும் தனது அணியை பிளேஆஃப்களுக்குள் கொண்டு சென்றுள்ளார். 24 பிளே ஆஃப் போட்டிகளில் இவரது வெற்றி சதவீதம் 62.5% மாக உள்ளது. 4 முறை சாம்பியன் பட்டங்களை வென்று, ஐந்து முறை ரன்னர் அப் என்ற சாதனையும் படைத்துள்ளார்.