ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கடந்த இரண்டு மாதங்களாக உச்சரித்துக்கொண்டு இருக்கும் வார்த்தை ஐபிஎல். 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இந்தியன் பிரிமியர் லீக் இந்த ஆண்டுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உலகமே உற்று நோக்கும் கிரிக்கெட் லீக் போட்டியாக இந்த தொடர் இருக்க காரணம், பல இளம் வீரர்களை அடையாளப்படுத்துகிறது. மேலும், கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒரு சிலபோட்டிகளில் எதிரணிக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்ட நிகழவுகள் எல்லாம் அரங்கேறியுள்ளது. அவற்றில் ஒரு சில நிகழ்வுகள் குறித்து இங்கு காணலாம்.
ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ரஷித் கான்
குஜராத் அணியின் ரஷித் கான் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 17வது ஒவரை வீசும் போது அந்த ஓவரின் முதல் பந்தில் ரஸலையும் இரண்டாவது பந்தில் சுனில் நரேனையும், மூன்றாவது பந்தில் ஷ்ர்துல் தக்கூரையும் வீழ்த்தி அச்சத்தினார். இவரின் அதிரடியான பந்து வீச்சினையும் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கான ரன்களும் அதிகமாக இருந்தது. இதனால் குஜராத் அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றிபெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ரஷித் கான் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிங்கு சிங் விளாசிய 5 சிக்ஸர்கள்
அதன் பின்னர் களத்தில் இருந்த ரிங்கு சிங் கொல்கத்தா அணியை வெற்றி பெறச்செய்தது இன்று வரை ஒரு மேஜிக்காகவே உள்ளது. 20வது ஓவரின் கடைசி ஐந்து பந்துகளிலும் ஐந்து சிக்ஸர்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அல்ஜாரி ஜோசப் வீச, 5 சிக்ஸர்களையும் அடித்துக் காட்டி அணியை வெற்றி பெறச்செய்ததுடன், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையே தன்னைப் பற்றி இதுவரை பேச வைத்துள்ளார். அந்த போட்டியில் இருந்து இன்று வரை ரிங்கு களத்தில் இருந்தாலே அவரது விக்கெட்டை கைப்பற்ற பந்து வீச்சாளர்கள் தனி யுத்தியை பயன்படுத்துகின்றனர்.
இந்த போட்டியில் ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணாவின் பேட்டைப் பயன்படுத்தினார் என்பது ராணா கூறும்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது.