ஐ.பி.எல். தொடரில் இன்றைய போட்டியில் ஆர்.சி.பி. அணியும், லக்னோ அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கியுள்ள விராட்கோலி 35 பந்துகளில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் தன்னுடைய 46வது அரைசதத்தை விளாசியுள்ளார், இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். 


 


 


பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய விராட்கோலியின் பேட்டிங்கை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆர்.சி.பி. போட்டிக்கும் ரசிகர்கள் மைதானத்தில் குவிவார்கள். அந்த வரிசையில் இன்று விராட்கோலியை ஆட்டத்தை காண்பதற்காக மைதானத்தில் குவிந்த ரசிகர்களுக்கு விராட்கோலி விருந்து வைத்தார்.


டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ஆர்.சி.பி. அணிக்கு விராட்கோலி மிரட்டலான தொடக்கத்தை அளித்தார். முதல் ஓவர் முதலே அதிரடியாக ஆடிய விராட்கோலி பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார்.


பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய விராட்கோலி 35 பந்துகளில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினார். விராட்கோலியும், டுப்ளிசிசும் அதிரடி காட்டியதால் பெங்களூர் அணி ரன் ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டு இருந்தது, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த விராட்கோலி 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் 12வது ஓவரை வீசிய அமித்மிஸ்ரா சுழலில் அவுட்டானார்.


விராட்கோலி சிக்ஸர் அடிக்க விளாசிய பந்து எல்லைக்கோடு அருகே இருந்த ஸ்டோய்னிசிடம் கேட்ச்சாக மாறியது. அதிரடியாக ஆடிய விராட்கோலி சதம் அடிப்பார் என்று காத்திருந்த ஆர்.சி.பி. ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும், அடுத்து ஜோடி சேர்ந்த ஆர்.சி.பி.யின் கேப்டன் டுப்ளிசிஸ் – மேக்ஸ்வெல் சிக்ஸர் மழையை பொழிந்தனர்.


விராட்கோலி – டுப்ளிசிஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் எடுத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டுப்ளிசிஸ் – மேக்ஸ்வெல் ஜோடி 44 பந்துகளில் 100 ரன்களை குவித்ததுடன் 116 ரன்களை குவித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஆர்.சி.பி. அணி 212 ரன்களை எடுத்தது. விராட்கோலி ஐ.பி.எல். தொடரில் அடித்த 46வது அரைசதம் இதுவாகும்.


மேலும் படிக்க: IPL 2023 RCB vs LSG 1st Innings Highlights: எடுபடாத பந்து வீச்சால் பேட்டிங்கில் மிரட்டிய பெங்களூரு; லக்னோவுக்கு 213 ரன்கள் இலக்கு..!


மேலும் படிக்க: Faf du Plessis: 'கெத்தா நடந்து வரான்... ஸ்டேடியத்தை கடந்து வரான்..' சிக்ஸர் மழை பொழிந்த டுப்ளிசிஸ்..!