நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் சேப்பாக்கத்தில் 6 வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு (LSG) எதிரான சிறப்பான வெற்றியுடன் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, MS தோனியின் சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய நிலையில், ஹை ஸ்கோரிங் போட்டியாகவும், KL ராகுலின் LSG அணியை வென்ற போட்டியாகவும் இருந்ததால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.


தொடர்புடைய செய்திகள்: Video Viral : மெட்ரோ ஸ்டேஷனுக்கு கவர்ச்சி உடையில் வந்த பெண்.. நிர்வாகம் கொடுத்த அறிவிப்பு.. நடந்தது என்ன?


முதல் ஹோம் கேம்


புதிய சீசனின் முதல் ஹோம் ஆட்டத்தில் சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. லக்னோவுக்கு எதிராக இதற்கு முன் நான்கு முறை வெற்றி பெற்ற சென்னை அணி இந்த போட்டியையும் வென்று தோற்காத அணி என்ற பெருமையை தக்கவைத்துள்ளது. தொடக்க ஜோடியான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே சேப்பாக்கத்தில் ஒரு மாபெரும் ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்தனர். கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களும், கான்வேயின் 47 ரன்களும், சிவம் துபே (27), அம்பதி ராயுடு (27*) ஆகியோரின் ஆட்டத்தால் CSK 20 ஓவர்களில் 217-7 ரன்களுக்கு சென்றது. பதிலுக்கு, எல்எஸ்ஜி 205 ரன்கள் மட்டுமே குவித்து 7 விக்கெட் இழந்த நிலையில், சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ராகுல் அண்ட் கோ 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.






புள்ளிப்பட்டியல்


எல்எஸ்ஜிக்கு எதிரான வெற்றியின் மூலம் தோனியின் சிஎஸ்கே அணி ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போதைய ஐபிஎல் 2023 புள்ளிப்பட்டியலில் முதல் போட்டியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இரண்டாவது இடத்தையும், ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி நான்காவது இடத்தில் உள்ளது.






ஆரஞ்சு கேப்


திங்கட்கிழமை நடைபெற்ற லீக்கில் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து, சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் ஆரஞ்சு கேப் தரவரிசையில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ஆரஞ்சு கேப் தரவரிசையில் அவருக்கு அடுத்தபடியாக கைல் மேயர்ஸ் உள்ளார். LSG தொடக்க ஆட்டக்காரர் மேயர்ஸ் CSK க்கு எதிராக 22 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அவர்களுக்கு பின் ஒரு போட்டி விளையாடிய திலக் வர்மா, விராட் கோலி, டூ பிளஸிஸ் உள்ளனர்.






பர்பிள் கேப்


இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஐபிஎல் 2023 இல் தனது விக்கெட் எண்ணிக்கையை 8 விக்கெட்டுகளாக உயர்த்தி பர்பிள் கேப் ஹோல்டராக உள்ளார். பர்பிள் கேப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இந்து விக்கெட்டுகளை குவித்துள்ளார். எல்எஸ்ஜி பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தபடியாக யுஸ்வேந்திர சாஹல் (4), மொயீன் அலி (4) ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.