ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ள நிலையில், அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார் என்ற விவரத்தை காணலாம். 


16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாலகமாக தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடக்கும்  27வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மொஹாலியில் உள்ள மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.  இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  சேனலிலும், ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் காணலாம். 


இதுவரை பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள்  30 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் எதிர்கொண்ட கடைசி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. 


இதனிடையே இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானும், பெங்களூரு அணி கேப்டன் ஃபாப் டு பிளிசியும் காயம் காரணமாக விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக பஞ்சாப் அணிக்கு சாம் கரணும் மற்றும் பெங்களூரு அணிக்கு விராட் கோலியும் தலைமை தாங்கினர். கிட்டதட்ட ஓராண்டுக்குப் பின் விராட் கோலி கேப்டனாக களம் கண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 


ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்


பெங்களூரு அணி : விராட் கோலி (கேப்டன்), ஃபாப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ்


பஞ்சாப் கிங்ஸ்: அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்


தாக்கத்தை (Impact) ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் விவரம்


பெங்களூரு அணியில் வைஷாக் விஜய்குமார், டேவிட் வில்லி, கர்ம் ஷர்மா, ஆகாஷ் தீப், அனுஜ் ராவத் ஆகியோரும், பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங், மோஹித் ரதீ, சிவம் சிங், ரிஷி தவான், சிக்கந்தர் ராசா ஆகியோரில் ஒருவர் இம்பேக்ட் வீரராக களமிறங்க உள்ளார்கள். 


மேலும் படிக்க: PBKS vs RCB IPL 2023 LIVE: இலக்கை எட்டுமா பஞ்சாப் அணி? அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாற்றம்!