PBKS vs RCB IPL 2023 LIVE: சிராஜ் அசத்தல் பவுலிங்; 24 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!
PBKS vs RCB IPL 2023 LIVE: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி 11 பந்துகளுக்கு 25 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடி வருகிறது.
பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து வெற்றிக்காக போராடி வருகிறது.
பஞ்சாப் அணி வெற்றி பெற 27 பந்துகளில் 39 ரன் தேவை.
பஞ்சாப் அணி வெற்றி பெற 32 பந்துகளில் 52 ரன் தேவை, 78 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன் எடுத்து விளையாடி வருகிறது.
பஞ்சாப் அணி 13 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 113 ரன் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு 51 பந்துகளில் 78 ரன்கள் தேவையாக உள்ளது.
பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 82 ரன் எடுத்துள்ளது.
பத்து ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் 89 ரன்கள் எடுத்துள்ளது.
ஹர்ப்ரீத் சிங் பாட்டியா அவுட்!
பஞ்சாப் அணி ஆறு ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு51 ரன் எடுத்துள்ளது.
பஞ்சாப் பேட்ஸ்மேன் மேத்யூ ஷார்ட் அவுட். இரண்டு ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 20 ரன் எடுத்துள்ளது பஞ்சாப்.
முதல் ஓவர் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன் எடுத்துள்ளது.
பெங்களூரு அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
டுப்ளசிஸ் நாதன் ஹில்ஸ் பந்தில் அவுட். 56 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்தார்
பெங்களூரு அணி 17-வது ஓவர் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன் எடுத்துள்ளது.
க்ளன் மேக்ஸ்வெல் ஹர்ப்ரீத் பந்தில் டக்கவுட் ஆகி வெளியேறினார்.
17வது ஓவரை வீச வந்த ஹர்பீரித் சிங், 59 ரன்களில் விராட் கோலிய காலி செய்ய, அடுத்த பந்தே மேக்ஸ்வெல்லும் தான் சந்தித்த முதல் பந்திலேயெ விக்கெட்டை இழந்தார்.
விராட் கோலி ஹர்ப்ரீத் ப்ரார் பந்தில் அவுட் ஆனார். 47 பந்துகளில் 59 ரன்னுடன் வெளியேறினார்.
சாம் கரன் வீசிய 15.3 வது பந்தில் டு பிளிசி கொடுத்த எளிய கேட்சை பஞ்சாப் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா தவறவிட்டார்.
பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 130 ரன் எடுத்துள்ளது. விராட் கோலி 57 ரன்னுடனும் டுப்ளசிஸ் 67 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
விராட் கோலி அரை சதம் அடித்துள்ளார். 40 பந்துகளில் 50 ரன் அடித்து களத்தில் உள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் டு பிளிசி அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
பெங்களூரு அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டனாக டு பிளிசி களமிறங்கவில்லை. இருப்பினும், இம்பாக்ட் வீரராக மட்டும் களமிறங்குவார் என விராட் கோலி தெரிவித்தார்.
பெங்களூரு அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன் எடுத்துள்ளது. 23 பந்துகளில் 32 ரன்னுடன் விராட் கோலி களத்தில் உள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 6 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பெங்களூர் அணி 5 ஓவர்களில் 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
பெங்களூரு அணி : விராட் கோலி (கேப்டன்), ஃபாப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ்
பஞ்சாப் கிங்ஸ்: அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
Background
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை எதிர்கொண்ட போட்டிகளின் முடிவுகள் மற்றும் அதுதொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
பஞ்சாப் - பெங்களூரு மோதல்:
ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை, டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது. மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா தொலைக்காட்சி வாயிலாகவும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். முன்னதாக, இரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளின் விவரங்களை இங்கு அறியலாம்.
நேருக்கு நேர்:
கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள், இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இவ்விரு அணிகளும் எதிர்கொண்ட 5 போட்டிகளில் நான்கில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மைதானத்தில் பஞ்சாப்:
மொஹாலி மைதானத்தில் இதுவரை 62 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 35ல் வெற்றியும், 27ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேநேரம், இதுவரை இந்த மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி நான்கில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விவரங்கள்:
பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 226
பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 232
பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 84
பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 88
தனிநபர் சாதனைகள்:
பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த பெங்களூரு அணி வீரர் - விராட் கோலி, 802
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி வீரர் - தவான், 64
பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த பெங்களூரு அணி வீரர் - ஹர்ஷல் படேல், 11
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த பஞ்சாப் அணி வீரர் - ரிஷி தவான், 4
பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த பெங்களூரு அணி வீரர் - விராட் கோலி, 11
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த பஞ்சாப் அணி வீரர் - ஷிகர் தவான், 2
நடப்பு தொடரில் இதுவரை:
நடப்பு தொடரில் இதுவரை தலா 5 போட்டிகளில் விளையாடி பஞ்சாப் அணி 3 வெற்றிகளையும், பெங்களூரு அணி 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 5வது இடத்திலும், பெங்களூரு அணி 8வது இடத்திலும் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -